பாஷாணங்கள் என்றால் என்ன?

Author: தோழி / Labels: , ,

சித்த மருத்துவத்தின் அடிப்படை மூலங்களில் ஒன்றுதான் பாஷாணங்கள். ஆனால் பாஷாணம் என்றவுடன் நமக்கு நினைவுக்கு வருவது பழநியில் அருள்பாலிக்கும் மூலவரான தண்டாயுதபாணியும், அவரை உருவாக்கிய சித்த புருஷரான போகரும்தான். ஒன்பது வகையான பாஷாணங்களை பிசைந்து பழனியில் உள்ள மூலவரை போகர் உருவாக்கியதாக கூறுவர். இந்த பதிவின் நோக்கம் நவபாஷாண சிலை பற்றியதன்று. இத்தனை சிறப்பானதாக கூறப் படும் பாஷாணங்களைப் பற்றியதே....

பாஷாணங்கள் அல்லது பாடாணங்கள் என அறியப் படும் இவற்றை சித்தர்கள், தங்களின் மருத்துவ முறையில், அடிப்படை மூலகங்களில் ஒன்றாக பயன் படுத்தினர். இரசவாதத்திலும் பாஷாணங்கள் பயனாகிறது. இவை உலோகத்தைப் போல கடினமான தன்மையையும், விஷத்தின் தீவிர குணங்களையும் கொண்ட திண்மப் பொருட்கள். பாஷாணம் என்பது பொதுப் பெயரே, இவற்றில் நிறைய வகைகள் இருக்கிறது.

இந்த பாஷாணங்கள் விஷத் தன்மையுடையவை ஆதலால், நேரடியாய் உட்கொண்டால் மரணம் விளையும், ஆனால் அன்றைக்கே சித்தர்கள் அவற்றை பக்குவப் படுத்தி விஷத்தையே மருந்தாக்கி பயன்படுத்தினர். இன்றைய நவீன அலோபதி மருத்துவ முறை, பெரும் செலவிலான ஆராய்ச்சிகளின் முடிவில் பாம்பின் விஷத்தை மருந்துகளாக மாற்றி பயன்படுத்துவது உங்கள் நினைவுக்கு வரலாம். சித்தர் பெருமக்கள் நமக்குத் தரும் ஏராளமான ஆச்சர்யங்களில் இதுவும் ஒன்று.

பாடாணங்கள் குறித்து மிகைப் படுத்தப் பட்ட செய்திகளே ஊடகத்தில் உலவுகின்றன. இந்த செய்திகள் எங்கிருந்து பெறப்படுகின்றது என்பதில் நிறைய கேள்விகளும், ஐயங்களும் இருக்கிறது. ”போகர் 12000” என்ற நூலில் போகர் பாடாணங்கள் குறித்து விளக்கமாய் கூறியிருக்கிறார். போகரின் கூற்றுப் படி பாஷாணங்கள் அடிப்படையில் இரு வகையாக பிரித்துக் கூறுகிறார். அவை “பிறவிப் பாஷாணங்கள்”,”வைப்புப் பாஷாணங்கள்” ஆகும்.

பிறவிப் பாஷாணங்கள் என்பவை இயற்கையாக கிடைக்கக் கூடியவை. வைப்புப் பாஷாணங்கள் என்பவை பல மூலகங்களைக் கொண்டு செயற்கையாக உருவாக்கப் படுவது. இந்த இரு பிரிவுகளின் கீழ் பல வகையான பாஷாணங்கள் உள்ள்ளன.

நாளைய பதிவில் பிறவிப் பாஷானஙகளைப் பற்றியும், அவற்றின் வகைகளையும் பார்ப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

12 comments:

jagadeesh said...

ஆஹா! மிகவும் அருமையான பகுதி. இதனை பற்றியான விளக்கங்கள் அவசியம் தேவை. பாசானங்கள் என்றால், நீங்கள் சொல்லியது போல் முதலில் எங்களுக்கு நினைவுக்கு வருவது பழனி முருகன் சிலை தான். இதையும் தாண்டி கொஞ்சம் விளக்கம் கிடைக்காதா என்று நினைத்தேன், போட்டுவிட்டீர்கள் இடுகையை. வாழ்த்துக்கள்.

Now what?????????? said...

It will be fine if more info is publised on Palani moolavar

praveen said...

சரி தோழி , இந்த பாஷனாத்தால் மனித குலத்திற்கு என்ன பயன் ? விளக்கவும் .

misan said...

ungkalin aduttha pathivai aavallodu ethir parkkiren

சாமீ அழகப்பன் said...

திருப்பாற்கடலை கடைந்தவுடன் முதலில் தோன்றியது விஷந்தான்.பின்புதான் அமிர்தம் தோன்றிற்று.அது போல சித்த வைத்தியத்திற்கு அடிப்படை இந்த பாடாணம் என்ற விஷங்கள்தான்.ஒவ்வோரு பொருளிலும் நஞ்சு இருக்கிறது அவற்றை நீக்கினாலே மருந்தாகும்.கடுக்காய்க்கு அக நஞ்சு.அதாவது கொட்டையில் விஷம்.இஞ்சிக்கும் சுக்குக்கும் புற நஞ்சு,அதாவது தோலில் விஷம்.இவற்றின் விஷத்தன்மையை நீக்கி மருந்தாக்குவது போல், இந்தப் பாடாணங்களையும் விஷத் தன்மையை நீக்கி மருந்தாக்கலாம்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
அன்பன்
சாமீ அழகப்பன்

jackcopywriter said...

கொல்லிமலைக்கும் சித்தர்களுக்கும் உள்ள தொடர்பை விளக்கமாக கூற முடியுமா ?

இன்பம் துன்பம் said...

மிகவு நன்றாக இருக்கிறது இந்தபதிவு மனிதர்களுக்கு தேவையான் பதிவு .எல்லாம் வல்ல உனக்கு நல்லருள் புரியட்டும் வாழ்க வளமுடன்

sundar said...

tamil related blogs when i was searching, i landed here, very nice start....let me browse the balance in this blog...hope this is continued

Om Sakthi said...

Om sakthi,I am read your blog in few days. very usful,navpasanam,i remmbered-very long time back ,one- Sakthi- monthily issued by Sakthi Makalingam From Covai,in this how to make navapasanam, what are there,its avaiable in kollimalai hills& selam hills,and lot messsage are thier.such like navapasanam lingam Or murugan,made by and kept inthe Sakthi hill in Selam.Pl go to old copyies get,pulish.lot books iam give others to read.hope you may collect.wish you all.

A.J.Dhanasekaran said...

good information Thozhli

Rose said...

Thank you for the informations.god bless you.

Rose said...

Thank you for the informations.god bless you.

Post a Comment