ஞான முத்திரை

மேலே படத்தில் உள்ளது போல சுட்டு விரல் நுனியால் பெருவிரல் நுனியை சற்று அழுத்தமாக தொட்டு, மற்ற விரல்கள் மூன்றும் வளைவின்றி நேராக ஒன்றோடொன்று சேர்ந்தபடி இருப்பதே ஞான முத்திரையாகும்.இதனை எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் செய்யலாம்.
பெருவிரல் நெருப்பையும் , சுட்டுவிரல் காற்றையும் குறிப்பாதால் இவை இரண்டும் இணைந்து மனதில் உள்ள தீய சிந்தனைகளை அகற்றி ஞான நிலைக்கு இட்டுச் செல்லும் என்கிறார் தன்வந்திரி. மேலும் மனம் ஒருமுகப் படுவதுடன், கோபம் பிடிவாதம் பொறுமையின்மை போன்றவை மறையும். எதனையும் இலகுவாக கற்றுக்கொள்ளும் தன்மை அதிகரிக்கும்
ஞானமுத்திரையை செய்து கொண்டே, தியானம் செய்தால் பல அற்புத சித்திகள் கை கூடுமாம்
குபேர முத்திரை

மேலே படத்தில் உள்ளவாறு பெரு விரல் நுனியுடன் சுட்டுவிரல், நடுவிரல் நுனிகளை இணைப்பதே குபேர முத்திரை ஆகும். அதிகமாய் அழுத்தம் தராது.விரல்களை சற்று தளர்வாக பிடித்தல் வேண்டும்.பத்து முதல் பதினைந்து நிமிடங்கள் வரை இந்த முத்திரையை செய்யலாம்.
இந்த முத்திரையானது நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்ச பூத சக்திகளை ஒருங்கிணைத்து நினைத்த காரியத்தை சித்தியாக்கும் சக்தியாக மாற்றமடையும். இதன் மூலம் வாழ்வு வளமாகும் என்பதால் இதனை குபேர முத்திரை என்று அழைக்கிறார்.
நோய் தீர்க்கும் அரிய முத்திரைகளைப் பற்றி நாளைய பதிவில் பார்ப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...
Post a Comment

4 comments:
பஞ்ச பூதங்களால் ( நிலம், நீர், நெருப்பு , காற்று ,ஆகாயம் ) ஆன நமது உடலில் ஏதாவது ஒரு பூதத்தின் அளவு அதிகமாக இருக்கும்.
ஒவ்வொருவரின் உடலிலும் அப்படியே விகிதாச் சாரங்கள் மாறுபட்டு இருக்கும்.
நமது உடலில் உள்ள பஞ்ச பூதங்களின் விகிதாச் சாரம் என்ன என்று தெரிந்து கொண்டால் மட்டுமே இந்த முத்திரைகள் பயன் உள்ளதாக இருக்கும்.
எல்லா முத்திரைகளும் எல்லாருக்கும் ஏற்றதாக இருக்காது.
ஒவ்வொருவருக்கும் எந்தெந்த முத்திரைகள் ஏற்றவை என்று குருமார்கள் மட்டுமே அறிவார்கள்.
அப்போது முத்திரையின் பயன் சிறப்பாகஇருக்கும்
நல்ல தகவல் . எனக்கு ஒரு சந்தேகம் இந்த முத்திரைகளை எப்படி செய்வது , ஏதேனும் மந்திரம் சொல்ல வேண்டுமா அல்லது கைகளை மட்டும் தாங்கள் சொன்னவாறு வைத்து கொண்டு தியானம் செய்தால் போதுமா ?
இன்னும் நிறைய முத்திரைகளை பற்றி அறிய ஆவல்..!!
Muthirai pathi nan padikanum nu iruntha unga blog la romba easy ha padikuren
Nandri
Post a Comment