அஞ்சலி முத்திரை!, சங்கு முத்திரை!

Author: தோழி / Labels: ,

எளிய முறையில் உடல்நலம் பேணும் இந்த முத்திரை கலையானது பழந்தமிழர்களின் கண்டுபிடிப்பு, ஆனால் இன்று இதனை மாற்று மொழியினூடாக தெரிந்து கொள்ளும் நிலையில் நாம் இருக்கிறோம் என்பது வேதனையான உண்மை. இது தமிழனின் கலை, இதை வாசிக்கும் நண்பர்கள் இந்தச் செய்தியினை. தமிழறிந்த அனைவருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டுமென்பது என்னுடைய தாழ்மையான எதிர்பார்ப்பு....

முத்திரைகள் வரிசையில் இன்று முதலாவதாய், நாம் இருகரங்களையும் கூப்பி வணக்கம் செய்வதே ஒரு முத்திரைதான். தன்வந்திரி இதனை அஞ்சலி முத்திரை என்று சொல்கிறார். ஒவ்வொருவரும் தமக்கு அறிவை கற்பித்த குருவையும், தெய்வத்தையும் பிரம்மமாக எண்ணி இந்த முத்திரையை செய்யவேண்டும் என்கிறார்.



படத்தில் உள்ளவாறு வலது கையின் விரல்கள் இடது கையின் விரல்களுடன் இடைவெளியின்றி இணைத்து இருகைகளையும் ஒன்றோடொன்று சேர்த்து பிடித்தல் வேண்டும்.இந்த முத்திரையைப் பிடித்த கைகள் மார்புப் பகுதியின் மையத்தில் இருத்தி கண்களை மெதுவாக மூடி தலையை சற்றுக் குனிந்து பத்து முதல் பதினைந்து நிமிடங்கள் வரை நின்று கொண்டு செய்ய வேண்டும் என்று குறிப்பிடுகிறார்.

நமது உடலில் வலப்பாகம் சிவனாகவும், இடப்பாகம் சக்தியாவும் இரண்டு ஆற்றல் மையங்களாய் உள்ளது. கைகளை இவ்வாறு இணைக்கும் போது புதிய அருட் சக்தி ஓட்டம் ஒன்று உருவாகி, பிராண சக்தியை நம்முள் நிலைகொள்ள செய்யும் என்கிறார்.

பின் குறிப்பு :-

இறைவனை அன்பால் வணங்குபவர்கள் மார்புக்கு நேராயும், ஞானத்தால் வழிபடுபவர்கள் நெற்றிக்கு நேராகவும், இறைவனிடம் சரணாகதி என்று வணங்குபவர்கள் தலைக்கு மேலாயும் இந்த முத்திரையை பிடித்து வணங்கலாம்.

சங்கு முத்திரை



இடது பெருவிரலை வலது உள்ளங்கையில் பதிய வைத்து, அதனை வலது கை விரல்களால் (பெருவிரல் தவிர்த்து) அதை இறுக மூட வேண்டும். வலது பெருவிரலானது இடது கையின் மற்றைய நான்கு விரல்களை தொட்டுக் கொண்டு இருக்க வேண்டும். இதுவே சங்கு முத்திரையாகும்.(படம் மேலே இணைக்கப் பட்டுள்ளது)

இதை பதினைந்து முதல் இருபது நிமிடங்கள் வரை செய்யலாம்..

பெருவிரல் நெருப்பு என்னும் பஞ்ச பூதங்களில் ஒன்றை இயக்கம் விரல் இது மற்றைய நான்கு பஞ்ச பூதங்களையும் ஒன்றிணைக்கும் இதுவே இந்த முத்திரையின் செயற்பாடு என்கிறார் தன்வந்திரி. இந்த முத்திரை யானது மணிபூரகத்தை சிறப்பாக செயல்பட வைத்து குரலை வளமாகும் . மேலும் திக்குவாய், தொண்டை நோய்கள் போன்ற குறைபாடுகளையும் நீங்கும் என்கிறார்.

நாளைய பதிவில் காரிய சித்தியளித்து வாழ்வில் வளம் பெருக்கும் முத்திரை பற்றி பார்ப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...



Post a Comment

13 comments:

ம.தி.சுதா said...

எனக்குத் தன் சுடு சோறு

ம.தி.சுதா said...

அருமையாக இருக்கிறது.... வாழ்த்துக்கள்...

மித்திரன் said...

மிக்க அருமையான தகவல் .. ஆனால் நான் இது போன்ற சில முத்திரைகள் பற்றிய தகவல்களை சேகரித்து வைத்திருந்தேன் ஆனால் யாரோ அதனை திருடி விட்டனர்

praveen said...

நன்றி..

ஆனந்தி.. said...

அருமை..இந்த மாதிரி அரிய தகவல் எல்லாம் உங்க பதிவில் தான் தெரிஞ்சுகிறேன் தோழி..

SIVANARUL said...

மிக மிக அருமையான பதிவு தொடர்ந்து பதியுங்கள் தோழி.

Shiva said...

நல்ல உபயோகமான பதிவு. நீங்கள் ஒவ்வொரு பதிவையும் மிகுந்த சிரத்தையுடன் சாதரணமாக விளக்காமல் சிரமம் எடுத்து படங்களுடன் சேர்த்து விளக்கும் பாங்கு அருமை. செய்வதை சிறப்பாக முழுமையாக செய்யவேண்டும் என்ற உங்கள் பண்பும், உங்களது கடுமையான உழைப்பும் கண் கூடாக தெரிகிறது. ஏற்கனவே வலை தள நண்பர் ஒருவர் கேட்டிருந்தார், "திக்கு வாய்க்கு சொல்லுங்கள்" என்று. வாசகர்கள் கேட்கும் அனைத்தையும் தரும் அட்சயபாத்திரம் நீங்கள். நன்றி

மகேஷ் ராஜ் said...

நன்றி

செல்வமுரளி said...

அட சூப்பர், தகவல் சொன்னா வந்து பார்ப்போம்ல :(

Nithi... said...

Ithu 4 veeragal epadi oru peruveeral thoda mudiyum thozi... enaku puriyala...
Konjam solunga..

Unga blog romba nala iruku..

mithra said...

thank u for ur very useful information.... how can i contact u mam.... please give exact mailid.... can u give any solution for hairfall problem......

Vijay Kumar said...

nanraga ullathu

1003MEENA said...

hai friend. idu manoranjithamanadu!!!!!!!!!!!!!! Moreover, pls inform about all muthirai



Post a Comment