மந்திர சித்தி.!

Author: தோழி / Labels: ,

மந்திரம் என்பது சூட்சுமம், மாந்திரீகம் என்பது சூட்சுமமான மந்திரத்தினை செயல்படுத்தும் நுட்பம். எந்த ஒரு வினைக்கும் விளைவுகள் உண்டு என்பது நியதி. இதன் அடிப்படையில் மந்திரம், மாந்திரீகத்தின் பயன் அல்லது பலன் என்று ஒன்று இருக்குமல்லவா....அந்த பலனைத்தான் மந்திரசித்தி என்கின்றனர். மந்திரம் சித்தியானால் மட்டுமே தகுந்த பலன் கிடைக்கும்.

நமது மூளையில் பல லட்சக்கணக்கான அறைகள் இருப்பதாகவும், மந்திர ஒலியானது அந்த் அறைகளை உயிர்ப்பித்து திறப்பகாதகவும், மந்திர ஒலியின் அதிர்வுகள் அந்த அறைகளில் நிரம்பியிருந்து தேவையான தருணத்தில் பயன் தருவதாகவும் குறிப்புகள் காணக் கிடைக்கின்றன. அர்த்தமற்ற ஒலிக் குறிப்புகள், அவை உருவாக்கிடும் அதிர்வுகள், அதைத் தொடர்ந்த ஆற்றல் வெளிப்பாடு என்பதாக மேற்சொன்ன கருத்தோடு பொறுத்தியும், இருத்தியும் பார்த்தால் பல புதிய கோணங்கள் புலப்படும்.

சித்தர் பாடல்களில் பொருள் விளங்காமைக்கு ஒரு சுவாரசியமான தகவல் இருக்கிற்து. அதாவது சித்தர்கள் தங்களின் நூல்களை சபித்திருப்பதாகவும், அவற்றிற்கான சாப நிவர்த்தியினை முறையாக செய்தவருக்கு, அந்த பாடல்களின் பொருள் விளங்கும் என்பதாக ஒரு குறிப்பு இருக்கிறது.இந்த தகவல் அநேகமாய் மறைத்தே வைக்கப் பட்டிருக்கிறது. முறையான குருவருளின் துணையோடு பயிலும் போதுதான் இத்தகைய நுணுக்கங்களை அறிய முடியும்.


உதாரணத்திற்கு அகத்தியர் அருளியதும் எல்லோரும் பாராயணம் செய்யக் கூடியதுமான மந்திர தோத்திரம் ஒன்றை பாருங்கள்....

"ஆதி மயமாய் விளங்கு மந்திரதோத்திரம்
அரி ஓம் ஓம்யென்ற ருட்கண் சாத்தி

நீதியுடன் நேமமனுட்டா னஞ்செய்து

நிரஞ்சனமாஞ் சற்குருவை நீதியாக

ஓதியிரு கலையறிந்து வாசிகொண்டு

உண்மையுடன் சுழிமுனையில் ஓம்யென்றுண்ணே

ஓம்றிங்றிங் சிம் நசிமசிமசி சிவசிவய நம

ஓம்உம்கிலி அங்லங்அம் சிவயநம

ஓம்வங்சிங் ரங்ரங் சிவயநம

ஓம்வயநமசி உம்உம்லங் சிவயநம

ஓம்நங்கிலி நமவம்வசி வயநம

ஒம் மசிமசி சிவசிவ நம் ஓங்அங்

அங்லங்றிங் சிவய நம

ஓம் அம்உம் நம்சிம்சிவ சிவாயநமஓம்

சிங்கிலி நமசிவய நமஓம் சிவசிவா

நசிநசி சிவய நம ஓம்

மங்கிலிசிங்கி சிவசுவய நமஓம்

மசிமசிவய மசிவய நமஓம்

றிங்றிங் சவ்றிங்சிவய நமஓம்

லங்லங் ருங்றிங் சிவய நமஓம்

லாலீலூலம் சிங்சிவய நமஓம்

ஓம்சிவ சிவமந்திர தோத்திரந்தன்னை

உண்மையுட னந்திசந்தி யுருவே செய்தால்

தாம் சிவசிவ ரூபந்தானே யாடுஞ்

சகலகலைக் கியானமெல்லாந் தன்னுள் தங்கும்

ஆம் சிவசிவ யோகமருளே காணும்

அட்டமாசித்து களுமாடலாகும்

ஓம்சிவ பில்லிவிச ரோகமெல்லாம்

ஓடுமடா மந்திர தோத்திரத்தின் சித்தே"


- அகத்தியர் -

இந்தத் தோத்திரத்தை அந்தி சந்தி வேளைகளில் பாராயணம் செய்வதால் கிடைக்கும் பலன்களையும் அந்தத் தோத்திரத்திலேயே விளக்குகிறார் அகத்தியர். உங்களுக்கு புரிந்ததை பின்னூட்டத்தில் விளக்கிடலாமே!

நாளைய பதிவில் கல்வி, செல்வம், வீரம் இவற்றை அருளும் மந்திரங்களையும், அவற்றை செயல் படுத்தி மந்திர சித்தி அடையும் வழியினையும் பார்ப்போம்...

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

12 comments:

பட்டுப்பூச்சி said...

தோழி,
செய்யுள் படிப்பதேன்பது மிகவும் கடினம். முயன்று பார்த்தேன்.. சரியாக புரியவில்லை..
உங்கள் முயற்சிக்கு எனது மனமாரத நல்வாழ்த்துக்கள்.

பட்டுப்பூச்சி said...

If you could post the video explaining how to pronounce this manthra it would be more useful..

Sai said...

இந்த மந்திரட்தை ஜபித்தால்
சிவ ரூபம் காணலாம்
சகல கலைகளும் நம்முள் தங்கும்
அஷ்டமா சித்துகளும் அடயலாம்
பில்லி விஷ ரோகமெல்லாம் ஓடும்

சரியா தோழி

jagadeesh said...

ஆதி என்னும் பரம்பொருளை மெய் எழுச்சி பெற்று "அரி ஓம் ஓம்" என்று வணங்கி, குருவை வணங்கி, நாடி சுத்தி(மூச்சு) செய்து, சுழிமுனையிலே
பின்வரும் மந்திரங்களை தியானித்து வந்தால், சகல கலைகளும் கைகூடும் எனவும், இறைவன் அருள் கிட்டும் எனவும், அட்டமாசித்திகளும் கைவரும் என்றும், பில்லி,சூன்யம், விஷம், ரோகம் எல்லாம் நம்மை விட்டு நீங்கும், இவை இம்மந்திரத்தின் சிறப்பே!

ம.தி.சுதா said...

தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்...

manivision25 said...

vanakkam

Rajakumaran said...

நன்றி

suryatamil1.blogspot.com said...

manthiram dhiyaanam patri ariya kelvikalai anuppavum suryatamil1.blogspot.com

suryatamil1.blogspot.com said...

manthirangal matrum dhyanam patri ariya kelvikalai anuppavum suryatamil1.blogspot.com

Unknown said...

enakku therintha mattil intha manthirathukkana porulai vilakkugiren...
"intha manthirathirkkana porul oru aryviyal poorvamaana unmaye. na amma enntru sollum pothu manathil oru anbana unarchi thontruvathu polavum, appa entru sollum pothu payam kalantha anbu thontruvathu polavum,,intha varthaigal nam udambirkkul oru vitha rasayana maatrathai undakkuginrana ....namathu 5 pulangalum nammai sutri nadappathai unarnthu namathu thegathinul atharkku erppa matrangalayum moolayil 'pathippugalaiyum' undaakkugintrana.eduthu kaattaga kovilil silayai parkum pothu amaithiyum, iruttil asayum porulai parkkum pothu amaithiyum, alagana pennai parkkum pothu kaamamum, navirkkinya unavai parkkum pothu pasiyayum, namathu kangal moolam udal unargirathu.ithu pontruthan matra uruppugalum. inge 'manthiram enpathu sevigalukkaga manithanal (sithargalal) uruvakkappatta seyarkkayana thoondu golgal.Malle ulla manthirathin ovoru varthaikalum molayin seyal padukalukkana thoondu golgal. Nam ithanai varumane ucharithal mattum antha matrathinai pera mudyathu.Kodukka pattulla manthirathin varthaigalin kootamaippu enbathu miga mukkiyam.verum oliy(sound)nal mattum ivatrai seya mudyathu.Idam enpathum mukkyam .Enentral parvai, oli,suvai, thodu unarchi, suvasam, agiya 5m koottaga seylpadutha pada vendum.manthiram enpathu oli moolam, manitha moolayai thoonda cheyappadaum oru muyarchi itharkku arthangal kidayathu.oom enpathu moochu nilai thiyanathai thoonda payanpadutha patta oru varthaye,Athu polave ovoru varthaikalum.atharkana arthangalai payan paduthuvathn moolame unara mudyum.
"mele ulla manthiram (olithoondalgalin thoguppu) namathu kalayunarvai perugachevatharkkana thoondugol aagum.Anthi matrum santhi enbathu iyalbagave namakku kalayunarvin aathikkam athigam irukkum tharunangaley aagum."MAnitha udalai elithil merugetra(HACKING)sithargal kandarintha murigalil ontruthan manthirangal.
- thiruneelaganda chitharin marubiravi Asra

Unknown said...

TAMIL LANGUAGE HAD DIFFERENT LETTER FORMS AND SCRIPTS IN THOSE TIMES. WE CAN SEE IN TEMPLES AND PALM LEAF WRITINGS. HOW THESE POEMS HAVE THE CURRENT TAMIL LETTERS?

Unknown said...

சூப்பர்ங்க ஐயா.

Post a Comment