மந்திரங்களின் வகையும், மந்திரவாதியின் தகுதியும்!

Author: தோழி / Labels: , ,

கடந்த இரு பதிவுகளின் தொடர்ச்சியாக மந்திரங்கள் என்பது சூட்சுமத்தின் திறவு கோல் என்பதையும், மாந்திரீகம் அதனை செயல்படுத்தும் நுட்பம் என்பதையும் உணர்ந்திருப்பீர்கள். இந்த சூட்சுமத்தின் எல்லைகள் மிகப் பெரியது. ஆனால் நிதர்சனத்தில் பெரும்பாலானவர்கள் இவற்றை செப்பிடு வித்தைகளாகவும், மை விளையாட்டுக்களாகவும், பொய்யான கட்டுக் கதைகளாகவும், ஏமாற்றுத் தந்திரங்களாகவும் மட்டுமே புரிந்து வைத்திருக்கின்றனர்.

மெய்யான மாந்திரிகம் பற்றி அகத்தியர் தனது நூலில் பின்வருமாறு விளக்குகிறார்.

"மெய்யான மாந்திரீக ஏதென்றால்
மேதினியாய் சித்தர் மொழி அனேகமுண்டு

வையகங்கள் தானறிக மாந்திரீக

மதிப்புடனே கடவுள் பதந்தனை வணங்கி
கூறுவேன் புலத்தியனே எல்லாம் மெய்தான்
துய்யவே உச்சாடனம் பொய்யுமாமோ

துப்பரவாய் தேவதைகள் தானுமப்பா

வையகங்கள் தானறிய வருதல் பொய்யோ

நண்ணான கெசகரண வித்தையப்பா

நாநிலத்தில் மெய்யாகும் பொய்யல்ல

பெண்ணான மாதருக்கு குளிசங் கட்டல்

பேருலகில் பொய்யல்ல மெய்யேயாகும்

தண்ணமுடன் நம்பு எல்லாம் மெய்யே
சத்தியமாய் நடதவர்க்கு எல்லாஞ் சித்தே"


- அகத்தியர் மாந்திரீக காவியம் -

நமக்கு கிடைத்திருக்கும் குறிப்புகளின் படி சித்தர்கள் மநதிரக்கலையினை மக்களின் நோய்களைத் தீர்க்கவும், விஷ ஜந்துக்களிடமிருந்து பாதுகாப்பதுடன், பில்லி, சூனியம், ஏவல், பூத பிசாசுகளிடமிருந்து மக்களைக் காப்பதற்க்கும், ஆன்ம பலத்தை அதிகரிப்பதற்கும், கொடிய வறுமையில் வாடும் மக்களுக்கு மந்திரங்களை யந்திரங்களாக வடிவமைத்துக் கொடுப்பதன் மூலம் அவர்களின் துன்பங்களை நிவர்த்திக்கவும் பயன் படுத்தி இருக்கின்றனர்.

கருவூரார் தனது அட்டமாசித்து என்னும் நூலில் மந்திரங்களின் தன்மையினை பொறுத்து அவற்றை எட்டுவகையாகப் பிரிக்கிறார்.. அவையாவன,

1, மூல மந்திரங்கள்.
2, பீஜ மந்திரங்கள்.

3, பஞ்சாக்கர மந்திரங்கள்.

4, தேவாதி மந்திரங்கள்.

5, வசிய மந்திரங்கள்.

6, அஸ்திர மந்திரங்கள்.

7, மகாசக்தி மந்திரங்கள்.
8, சித்த மந்திரங்கள்.


தற்போது புழக்கத்தில் இருக்கும் மந்திரம், மற்றும் மாந்திரீக முறைகள் மிகக் கடின வழிகளில் மேற்க் கொள்ளப்படுபவையாகவே இருக்கின்றன.ஓரிரு முறைகள் உச்சாடனம் செய்வதன் மூலம் பாரிய சக்தியை உருவாக்கும் மந்திரப் பிரயோக முறைகள் இன்னும் சித்தர் பாடல்களில் மறை பொருளாகவே உள்ளன. இவற்றை பகுத்தறியும் தன்மை தகுதியுள்ளவர்களுக்கு மட்டுமே வாய்க்கும் என்கிறார் அகத்தியர்.

"அப்பனே! மாந்திரீய சிவயோகிக்கு
குன்றாத குருவருளுமிருக்க வெண்டும்

கூர்மயான புத்தியது மிகவும் வேண்டும்

வென்றிடவே பொய்கொலை களவுமாற்கம்

வேதாந்தக் கண்மணியே நீக்கல் வேண்டும்

தொன்றிசையாம் குருமொழியை மகுடமாகத்

தோற்றமுடன் கொள்பவனே சித்தனாமே"

- அகத்தியர் மாந்திரீக காவியம் -

நாளைய பதிவில் அகத்தியர் அருளிய மந்திர தோத்திர பாடலொன்றினை பற்றி பார்ப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

8 comments:

ஆனந்தி.. said...

ம்..இவ்வளவு விஷயம் எல்லாம் இருக்கா தோழி?எனக்கு இது பத்தி எதுவுமே தெரியாமல் இருந்துருக்கு இவ்வளவு நாளா..

பிரவின்குமார் said...

மந்திரங்களின் வகைகளையும் சிறப்பினையும் அறிந்தேன். பகிர்வுக்கு நன்றி.!

ANAND said...

lot of information. nice

Babou said...

hi

Srinivasan P said...

nice information to know more about mathras..

VIJAYARAJ SRINIVASAN said...

mandiram utcharippu eappadi pls mail for me facebook& google mail.

kaniyarajan said...

Chiddhargalin rajjiam publish panna tholikku nanri.enakku book vendum adhan pattippaha nagal vendumae tholi

ஸ்ரீ வாராஹிபித்தன் செந்தில்குமார் said...

பத்து வகை சம்ஸ்க்காரங்கள் என்ரால் என்ன?
அதில் விமலிகரனம் என்ரால் என்ன?

அதில் ஜோதிர் மந்திரம் என்ரால் என்ன?

Post a Comment