மந்திரமாவது...!

Author: தோழி / Labels: ,

ஒலியின் தத்துவத்தில் இருந்து தோன்றியதே இந்த பேரண்டம். அமைதியின் ஆழத்திலும் கூட ஒலி உறைந்திருக்கிறது. இத்தகைய ஒலி உருவாக்கும் அதிர்வுகள் நிரம்பிய சூழலில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஒலி மற்றும் அது உண்டாக்கும் அதிர்வுகளை அடிப்படையாக கொண்டதே சித்தர்களின் ”மந்திரக் கலை”. இன்னமும் எளிமையாக கூறுவதெனில் ”ஒலி அது ஏற்படுத்தும் எதிரொலி” இந்த தத்துவமே மந்திரக் கலையின் அடிநாதம்.

காற்றில்லாத வெற்றிடத்தை தவிர மற்ற எல்லா ஊடகங்களிலும்(திட, திரவ, வாயு) ஒலியானது அலை அலையாக பரவும் தன்மையுடையது. நவீன அறிவியலில் எல்லா ஒலிகளுக்குமான அதிர்வெண்கள் மற்றும் அலைவரிசைகள் வரையறுக்கப் பட்டிருக்கின்றன. பொருட்களும் குறிப்பிட்ட அதிர்வெண்ணை கொண்டிருப்பதாக நிரூபிக்கப் பட்டிருக்கிறது. இந்த ஒலியினையும் அது தரும் அதிர்வுகளையும் சித்தர்கள் எவ்வாறு பயன் படுத்தினர் என்பதே இந்த தொடரின் நோக்கம்.

மந்திரம் பற்றி அகத்தியர் தனது “அகத்தியர் மாந்திரீக காவியம்” என்ற நூலில் பின்வருமாறு கூறுகிறார்.


"தொண்டு செய்து பெற்றவர்கள் கோடியுண்டு
தொல்லை யென்று விட்டவர்கள் கோடியுண்டு
விண்டுமே தெரிந்ததுவும் கோடியுண்டு
விட்டகுறை பட்டவர்கள் கோடியுண்டு
சண்டமாரு தம்போல் மந்திரத்தை
தரணியில் கற்றவர் கோடியாமே"

- அகத்தியர்

அநேகமாய் எல்லா சித்தர்களும் மந்திரம் பற்றிய தங்களது தெளிவுகளை நூலாக்கியிருக்கின்றனர். இவை பலவும் மறை பொருளாய் அருளப் பட்டிருப்பதனால், இவற்றின் சரியான மொழியாக்கம் கைவரப் பெறாத காரணத்தினால் இவற்றின் உண்மைத் தன்மை பற்றி பல விதமான கருத்துக்களும், எள்ளல்களும், கேலிகளும் உண்டு.

சித்தர்களைப் பொறுத்த வரையில் எல்லா பொருட்களும் ஒலி வடிவான தத்துவங்களில் இருந்தே தோன்றியவை. அதனால் இவை எல்லாவற்றிற்கும் மந்திர வடிவங்கள் உண்டு. குறிப்பிட்ட ஒலிகளை எழுப்புவதன் மூல அந்த மந்திரங்களை உருவாக்க இயலும்.அதனைக் கொண்டு அந்த பொருளை கட்டுப்படுத்த அல்லது தங்கள் விருப்பத்திற்கேற்ப பயன் படுத்த இயலும் என நம்பினர். மந்திரங்களின் மூலம் பஞ்சபூதங்களை தங்களுடைய கட்டுக்குள் வைத்திருக்க முடியும் என வலியுறுத்திக் கூறியிருக்கின்றனர்.

இதன் தொடர்ச்சியை நாளைய பதிவில் காண்போம்...

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

8 comments:

azhageri said...

சில உதாரணங்கள் கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

நன்றி.

ஹேமா said...

நிறையவே சொல்லிகோன்டிருக்கிறீர்கள் தோழி.பின்னூட்டம் இடவில்லையே தவிர வாசித்துக்கொண்டேயிருக்கிறேன்.

ம.தி.சுதா said...

அரிய தகவல்களைத் தரும் தங்கள் பதிவுகள் தொடரட்டும்...

jagadeesh said...

நல்ல தலைப்பு. மந்திரம், மாந்திரீகம் வேறுபாடுகளை கூறவும்.

curesure4u said...

தொணி சாஸ்திரம் பற்றி விளக்கம் உண்டா சகோதரி

praveen said...

நல்ல தகவல் , இன்னும் எதிர்பார்கிறேன்

datshana said...

@azhageri

anand said...

உங்களுடைய பணி அருமையானது . உங்களால் பெண்குலத்திற்கு பெறுமை ... வாழ்த்துக்கள் சகோதரி ..

Post a Comment