அறம் செய விரும்பு - திருமூலர்!

Author: தோழி / Labels:

"ஆர்க்கும் இடுமின் அவரிவர் என்னன்மின்
பார்த்திருந் துண்மின் பழம்பொருள் போற்றன்மின்
வேட்கை யுடையீர் விரைந்தொல்லை உண்ணன்மின்
காக்கை கரைந்துண்ணும் காலம் அறிமினே."

- திருமூலர் -

"யாவர்க்குமாம் இறைவர்க்கொரு பச்சிலை
யாவர்க்குமாம் பசுவுக்கொரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும்போதொரு கைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க்கின்னுரை தானே!"

- திருமூலர் -


உங்களால் எதைக் கொடுக்க முடியுமொ அதை, பாகுபாடு பாராமல் எல்லோருக்கும் கொடுங்கள், அதுவே அறம் எனப்படும். மற்ற பிற உயிரினங்களின் துயரைத் துடைக்கும் எதுவும் நல்லறமே!. அதுவே நிலை பேற்றினை தரும். இத்தகைய அறமானது மனதாலும், செயலாலும், சொல்லாலும் செய்யப் படல் வேண்டும். இவ்வாறு செய்யும் அறமானது செய்கிறவனையும், அவனது சுற்றத்தையும் மேல் நிலைக்கு இட்டுச் செல்லும்.

மேலும் பொன்னையும், பொருளையும் வாரி வழங்குவது மட்டுமே அறம் இல்லை. பசித்த பசுவுக்கு ஒரு பிடி புல்லைத் தருவதும், தூய மனதோடு ஒரு பச்சிலை இட்டு இறைவனை வணங்குவதும் கூட அறம்தான். குறைந்த பட்சம் பிறர் மனம் நோகாமல் இனிமையான சொற்களை பேசுவதும் கூட மேலான அறம்தான் என்கிறார் திருமூலர்.

எளிய வார்த்தைகளில் உயரிய தத்துவம்!

அறம் செய விரும்புவோம்!

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

12 comments:

jagadeesh said...

மிக அருமை. எளிதாக புரியும் விதத்தில், அருமையாக விளக்கியுள்ளீர்கள். மனதுக்கு ஆறுதலாகவும் இருக்கிறது. இது போல் நிறைய எழுதுங்கள் தோழி.

Ramesh said...

ஆஹா. மிகவும் அழகாக தெளிவு படுத்தியுள்ளீர்கள். தோழி வாழ்க. எல்லோரும் பாருங்க, நானும் நல்லவன் தான்.

Anonymous said...

தோழி அவர்களுக்கு , அரைத்த மாவையே மாறுபடும் அறைக்காதிர்கள் , புதியதாய் மக்களுக்கு தெரியாத விஷயத்தை கூறவும் .

teenmoon5 said...

@praveenதினமும் புதிய மாவு அரைக்கும் இடத்திற்கு நீர் போக வேண்டியது தானே. ஒருத்தர் நல்ல விஷயம் சொன்னால் பொறுக்காது போல. படிங்கள், பிடிக்கவில்லை எனில் வேறு இடம் பாருங்கள். எழுதுபவரை அளவோடு விமர்சனம் செய்யுங்கள், அடையாளம் தெரியாது என்பதால் அளவில்லாமல் பேசாதீர்கள்.

Unknown said...

திருமூலரை இன்னும் விரிக்கலாமே...

நன்றி பதிவுக்கு..

sury siva said...

அறஞ்செய விரும்பு என்பதை ஒரு தடவை அல்ல
ஆயிரம் தடவைகள் அடித்துச்சொன்னாலும்
இங்கே இருப்பவர்கள் இன்பத்தில் திளைப்பவர்கள்
ஈகை என்ன என்பதையே
உணராது இருக்கும் நிலை இன்று.

அறம் யாதென உணர்த்தும் "பழமொழி நானூறு" பாடல்களிலிருந்து
மூன்று பாடல்கள் இதோ !!

இம்மைத் தவமும் அறமும் எனஇரண்டும்
தம்மை யுடையார் அவற்றைச் சலமொழுகல்
இம்மைப் பழியேயும் அன்றி மறுமையும்
'தம்மைத்தாம் ஆர்க்குங் கயிறு.'

மாய்வதன் முன்னே வகைப்பட்ட நல்வினைய்வின்றிச் செய்யாதார் பின்னே வழிநினைந்து
நோய்காண் பொழுதின் அறஞ்செய்வார்க் காணாமை
'நாய்காணின் கற்காணா வாறு'.


அறஞ்செய் பவருக்கும் அறிவுழி நோக்கித்
திறந்தெரிந்து செய்தக்கால் செல்வுழி நன்றாம்
புறஞ்செய்யச் செல்வம் பெருகும் 'அறஞ்செய்ய
அல்லவை நீங்கி விடும்'.

அறவழி நிற்க என
அன்பாகச் சொல்லுங்கள்.
அடிக்கடியும் சொல்லுங்கள். கேளாவிடின்
இடித்தும் சொல்லுங்கள்.

சுப்பு தாத்தா.
http://vazhvuneri.blogspot.com

Anonymous said...

@praveen

நான் கூறும் கருத்துக்கள் தோழி போன்ற அறிவாளிகளுக்கு புரிந்தால் போதும் , மற்ற எவருக்கும் என்னை வேறு இடம் போக சொல்வதற்கு எந்த அருகதையும் இல்லை என தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறேன். இது போதுமா , வேறு விளக்கங்கள் வேண்டுமா, ஏனெனில் சிலருக்கு எளிதில் புரியாது ,

சின்னப்பயல் said...

ஈவது விலக்கேல்.!

Unknown said...

mee the first..

manjularamesh said...

ungalai eppadi thodurbu kollvathu?nan oru pathirikai asiriyar.en email id manjularamesh.snegithi@gmail.com

தோழி said...

@Manjula

தங்களின் வருகைக்கு மிக்க நன்றி. எனது மின்னஞ்சல் முகவரி

siththarkal@yahoo.com

siththarkal@gmail.com

நடராஜன் said...

பயனுள்ள அறச்செயலாகவே இப்பதிவு அமைந்துள்ளது

Post a Comment