மனம் திறந்து சில வரிகள்....

Author: தோழி /

"சித்தர் என்றும் சிறியர் என்றும் அறியொணாத சீவர்காள் !
சித்தர் இங்கு இருந்த போது பித்தர் என்று எண்ணுவீர்
சித்தர் இங்கு இருந்தும் என்னபித்தன் நாட்டிருப்பரே;
அத்தன் நாடும் இந்தநாடும் அவர்களுக்கெ லாமொன்றே."

- சிவவாக்கியர் -

சித்தர்கள், சித்தரியல் தொடர்பாக முதல் முறையாக எனது தனிப் பட்ட கருத்துக்களென சிலதை இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். பதிவுலகில் எதையும் பரப்புவதோ அல்லது வலியுறுத்துவதோ என் நோக்கமில்லை. மேலும் எனக்கென தனித்துவமான பிம்பங்களை உருவாக்கிக் கொள்வதில் எப்போதுமே விருப்பம் இருந்ததில்லை. என் இயல்புக்கு அது சாத்தியமும் இல்லை. குருவருளை மட்டுமே பெரிதாக நினைக்கும் ஒரு சாமானிய தமிழ்பெண், சர்வகலாசாலை மாணவி இவை மட்டுமே தற்போதைய எனது புறத்தின் அடையாளங்கள்.

என் வரையில் சித்தர்கள், சித்தரியல் என்பது, அதிகார வர்க்கத்தின் முன்னால் அங்கீகாரம் கிட்டாது போன ஆதித் தமிழனின் அடையாளங்களில் ஒன்று. அங்கீகாரம் கிட்டாமல் போனதற்கு பல சமய, சமூக, அரசியல் காரணிகள் இருந்திருக்கலாம். அதை விவாதிப்பதால் தற்போது பலனேதும் ஏற்பட போவதில்லை. அதே நேரத்தில் இன்னொன்றையும் நான் இங்கே குறிப்பிட்டாக வேண்டும். சித்தர்கள் எவரையும் வானத்தில் இருந்து தேவதைகள் கொண்டு வந்து போட்டதாக குறிப்புகள் இல்லை. அவர்கள் பிறக்கும் போது நாளும், கோளும் உச்சத்தில் நின்று ஆசிர்வதித்ததாக கதைகளும் இல்லை. ஆண்டவனின் அவதாரங்கள் என புகழ்சூட்டும் ஆராதித்தல்களும் நடந்ததாகவும் தெரியவில்லை.

மேலும் சித்தர் இலக்கியத்தில், சித்தர்களின் தெளிவுகள் அனைத்துமே தீயவர்கள், அல்லது விரும்பதகாதவர்களின் கைகளில் சென்று சேர்ந்து விடக் கூடாது என்பதன் பொருட்டே மறை பொருளாய் கூறப்பட்டிருக்கிறது. சமத்துவம் பேசிய சித்தர்கள் தங்களின் கண்டுபிடிப்புகள் யாரிடமோ போய் சேர்ந்து விடக் கூடாது என்பதில் மட்டும் மிக உறுதியாக இருந்திருக்கின்றனர் என்பது, நமக்கு பல ஹேஷ்யங்களை கொண்டு தரும்.அதை விவாதிக்க புகுந்தால் கசப்புணர்வும், கோபதாபங்கள் மட்டுமே எஞ்சும்...

சித்தர்கள் அனைவருமே சாமானியர்கள், பாமர தமிழர்களின் பிரதிநிதிகள்... வாழ்நாளின் முயற்சி, உழைப்பு, தேடல், ஆராய்ச்சிகள், தெளிதல்கள் இவைகளே அவர்களை மெய்ஞானிகளாகவும், விஞ்ஞானிகளாகவும் உயர்த்தின. அரசர்களின் அருகாமையில் அவர்கள் செழித்ததாய் தெரியவில்லை. காடுகள், மலைகள் என இயற்கை அன்னையின் மடியில் இயல்பினராய் வாழ்ந்திருந்தனர். அவர்கள் அருளிய எத்தனையோ அரும்பெரும் விஷயங்கள் காலப்போக்கில் மறைந்தும், மறைக்கப் பட்டும் போயிருப்பது வேதனையான உண்மை.

சாமானியர்களோடு வாழ்ந்த சாதனை மனிதர்களைப் பற்றி சாமானியர்களுக்கு தெரியாமல் போவதை விட கொடுமையானது ஒன்று இருக்க முடியாது. குரு பரம்பரை சங்கிலியில், ஒரு குறுகிய வட்டத்துக்குள் புழங்கி, ஒலைச் சுவடிகளில் முடங்கி, காலவோட்டத்தில் அழிந்தும், அழிக்கப் பட்ட பின்னர் எஞ்சியிருப்பவையே இன்றைக்கு நூலகங்களில் உறங்கிக் கொண்டிருக்கும் சித்தர் இலக்கியம். இந்த நூல்களில் சில போலியானவை என்பது அதிர்ச்சி தரும் செய்தி, இவற்றை ஆய்ந்தறிந்து பிரிப்பதே சித்தர்களுக்கு நாம் செய்யும் சிறப்பாக இருக்கும். இதனை தனியொரு நிறுவனம் அல்லது தனி மனிதர்களால் மட்டும் செய்திட முடியாது. தமிழறிந்த அனைவரும் கூட்டாய் செய்திட வேண்டிய திருப்பணி .

அந்த வகையில் எனது சிறு முயற்சிதான் இந்த வலைப் பதிவுகள். சித்தர்களை புனித பிம்பங்களாய் கற்பித்து, மூட நம்பிக்கைகளை முன் மொழிந்து, அவர்களை வழிபாட்டு பொருளாய் நிறுவுவது என் நோக்கமில்லை. அவர்களின் ஆக்கங்களின் ஊடாக பயணிப்பதன் மூலம் கிடைக்கும் மெய்ப் பொருளின் தெளிவுகளே எனது இலக்கு. அந்த வகையில் என்னிடம் இருக்கும் புத்தகங்களை குறிப்பெடுத்து ஆவணப் படுத்துமொரு முயற்சியே இந்த பதிவுகள்.எனது படிப்புகள் முடிந்த பின்னால் இவற்றை எல்லாம் குருவருளின் துணையோடு ஆய்வுகள் செய்யும் உத்தேசம் இருக்கிறது.

சித்தர்கள் என்பார் வரையறைகளுக்கு அப்பாற்பட்டவர்கள், உள்ளொளி உணர்ந்த உயரிய நிலை அது... அத்தகையோர் ஒருபோதும் தங்களை சித்தர்கள் என அழைத்துக் கொள்வதில்லை. அப்படி தங்களை அழைத்துக் கொள்வோர் பற்றி நானெதுவும் சொல்வதாய் இல்லை. சிவவாக்கியரின் பாடல் ஒன்றே அவர்களுக்கான பதிலாய் இருக்கும்.

"முத்திசேரச் சித்திஇங்கு முன்னளிப்பேன் பாரெனச்
சத்தியங்கள் சொல்லி எங்கும் சாமிவேடம் பூண்டவர்
நித்தியம் வயிறு வளர்க்க நீதி ஞானம் பேசியே
பத்தியாய்ப் பணம்பறித்துப் பாழ்நரகில் வீழ்வரே"

- சிவவாக்கியர் -

இறுதியாக ஒன்று, சித்தர்கள் வணக்கத்துக்குறியவர்கள்தான்... ஆனால் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை!

"ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றே
மெய்யுணர்வு இல்லா தவர்க்கு."

- திருவள்ளுவர் -

என்றும் நட்புடன்,
தோழி.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

26 comments:

தமிழ் அமுதன் said...

வலையுலகை பொருத்தவரை உங்கள் பதிவுகளும்
அவை தாங்கிவரும் பொருட்களும் அபூர்வமானவை
அவை அனைவருக்கும் கிடைக்க வேண்டும்..!

யாரோ ஒரு சிலரின் குதர்க்க கருத்துகளுக்காக நீங்கள் பதில் சொல்லி உங்கள் நேரத்தை வீணடிக்க தேவையில்லை தொடரட்டும் உங்கள் பணி..!
நன்றி..!

Praveenkumar said...

நல்லாயிருக்கீங்களா தோழி...!!
வழக்கம் போல் அரிய தகவல்கள்.
தொடர்ந்து அசத்துங்க...!!!

Unknown said...

உங்கள் பணியை தொடருங்கள் சகோதரி... சித்த பெருமக்கள் ஆதி தமிழனின் எஞ்சிய சொத்துக்கள், அதனை வடிவங்கள் மாற்றியேனும் காப்பாற்ற வேண்டும், இவ்வளவு சிறிய வயதில் உங்கள் முயற்சியை எவ்வளவு பாராட்டினாலும் தகும்..

உங்களுக்கு என் வந்தனங்கள்....

shiva said...

People are often unreasonable, irrational, and self-centered. Forgive them anyway...

If you are kind, people may accuse you of selfish, ulterior motives. Be kind anyway...

If you are successful, you will win some unfaithful friends and some genuine enemies. Succeed anyway.....

If you are honest and sincere people may deceive you. Be honest and sincere anyway.

What you spend years creating, others could destroy overnight. Create anyway...

If you find serenity and happiness, some may be jealous. Be happy anyway....

The good you do today, will often be forgotten. Do good anyway....

Give the best you have, and it will never be enough. Give your best anyway....

In the final analysis, it is between you and God. It was never between you and them anyway....


Do it Anyway....

yogananda said...

You must continue, when good things open up, negative comments will also be there...ignore..do what you are destined to do.
நல்ல நோக்கம் கொண்டடுள்ளீர்கள்
தொடருங்கள்.

Anonymous said...

சரி இந்த பதிவின் முலமாக தாங்கள் கூறவரும் செய்திதான் என்ன ? சித்தர்களை நம்பு என்கிறீர்களா அல்லது நம்ப வேண்டாம் என்கிறீர்களா. விளக்கவும்

chandru2110 said...

அப்பாடா மனசோட பாரமெல்லாம் இறங்கிட்டு போல?
உங்கள் தனிப்பட்ட கருத்து ஏற்க்கத்தக்கது.

Silaiyagam said...

தங்கள் நற்பணி தொடர வாழ்த்துகள்.விமர்சனம் ,அல்லது பிறரின் மாற்று கருத்துகளுக்கு இடமளித்தல் மட்டுமே போதுமானது ,அவை குறித்து தங்கள் பதிவு தேவையில்லை என்பது என் தாழ்மையான எண்ணம். ஏனெனில் அதற்கும் விமர்சனம் எழும் .

ஆனந்தி.. said...

தோழி...எனக்கு சித்தர் விஷயமாய் அவளவு பரிச்சயம் இல்லை..இந்திராசௌந்திராஜன் கதைகளை சித்தர் கதாபாத்திரங்களுக்க்காகவே விரும்பி படிப்பேன்..சுவாரஸ்யங்களும்.. அமானுஷ்யங்களும் ..கோர்வையாய் கூடி லயிசுருக்கேன்..அவளவு தான் எனக்கு சித்தர்கள் அறிமுகம்..உங்களோட இந்த பதிவை படிச்சேன்..இதுக்கு ஏன் எதிர்ப்பு வரணும் புரில..உங்க அனுபவங்கள்..உங்க சிந்தனைகளை ஷேர் பண்றீங்க..உங்க சிந்தனைகளை மதிக்கிறேன்..எனக்கு புரிஞ்சதை படிச்சு பின்னூட்டம் போடுறேன் தோழி..உங்கள் எழுத்தை விரும்பி படிக்கிரவங்களுக்காக எழுதுங்க...ஆல் தி பெஸ்ட் தோழியே..!!

கண்ணதாசதாசன் said...

இந்த உலகில் அம்மா,அப்பாவைப் போல் கேள்வி கேட்காமல் நம்புவதற்கு சில விசயங்கள் இருக்கின்றன.

அதையும் மீறி,
முட்டாள்தனமாகக் கேள்வி கேட்டுக்கொண்டிருப்பவர்களை நினைத்து
தாங்கள் மனம் நோகத் தேவையில்லை.

முட்களும்,கற்களும் நிறைந்திருந்தாலும்.. உங்களின் பாதையும்,நோக்கமும் தெளிவானது.
கங்கை போல தொடர்ந்து பயணியுங்கள்.அதில் அனைவரும் இளைப்பாறிக் கொள்ள முடியும்.சில கசடுகள் வந்து கலப்பதனால் கங்கைநதி ஒன்றும் களங்கமாகிவிடாது.
அவைகளும் நாளடைவில் புனிதமடையும்.

போற்றுவார் போற்றட்டும்..என கண்ணதாசன் பாணியில் தொடர்ந்து செல்லுங்கள்!
தொடர்ந்து எழுதுவதற்கு,

இந்த எளியவனின் வாழ்த்துகளும்!

Unknown said...

நீங்கள் கோபம் கொள்ளக்கூடாது தோழியே.. விமர்சிப்பவர்கள் விமர்சித்தாலும் நாம் நமது கடமையில் இருந்து விலக்கூடாது. என் பணி இறைபணியே என்று இருந்து எத்தனையோ பேர் மோட்சத்தை அடைந்திருக்கிறார்கள்.

கேள்வி கேட்பது எளிது ஆனால் பதில் சொல்வது கடினம். அந்த நேரங்களில் சித்தர்களே அமைதியாக இருந்துள்ளனர்.

நான் ஒரு வலைப்பூவில் சந்திரரேகை புத்தகத்தை கேட்டுள்ளேன் எனக்கு கிடக்கும் பட்சத்தில் அதை மின்னூலாக்கி தங்களுக்கும் தருகிறேன்.


http://sathuragirisundaramahalingam.blogspot.com/2010/09/blog-post.html

மங்கை said...

நரம்பில்லாத நாக்கு...எப்படி வேனா திரும்பும்... நாளைக்கு அதே நாக்கு நம்மை புகழ்றதுக்கும் கூசாது.. நான் எப்பொழுதும் சொல்வதே தான்.. இந்த வயதில் நீங்கள் எடுக்கும் முயற்சி மகத்தானது.... உங்கள் ஆர்வம்...ஈடுபாடு...முயற்சி... எல்லாமே போற்றுதலுக்கு உரியவை... திரும்பிப் பார்க்காம போயிட்டே இருங்கப்பா...நாங்க இருக்கோம்....

jagadeesh said...

@praveen
விடிய விடிய ராமாயணம் கேட்டு, சீதைக்கு ராமன் சித்தப்பான்னு சொல்லுவீங்க போல.

ராவணன் said...

சித்தர்கள் மிகவும் உன்னதமானவர்கள்.நவீன விஞ்ஞானிகளைவிட அறிவு மிக்கவர்கள்.
மருத்துவத்தில் கரை கண்டவர்கள்.அவர்களை மிஞ்ச இப்போது யாரும் இல்லை.அவர்களின் பாடல்களில் பலதும் நமக்குப் புரிவதில்லை.நாம் நேரடிப் பொருள் கொள்வோம்.ஆனால் சித்தர்களின் மொழியில் அதன் பொருள் வேறு.
சித்தர்கள் கடுமையாக உழைத்து,பல பரிசோதனைகளைச் செய்து பல அரிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியுள்ளார்கள்.
இது தெரியாமல் சித்தர்கள் வெறும் 'ரங்','சிங்''மங்' என்று பொருளில்லா வார்த்தைகளால் எதையோ சாதித்தார்கள் என்று எழுதும் போது இயற்கையாகவே கோவம் வருகின்றது.

puduvaisiva said...

"புரளி கட்டி பொருளை தட்டும் சந்தை
பச்சை புளுகை விற்று சலுகை பெற்ற மந்தை
இதில் போலிகளும் காலிகளும் பொம்மலாட்டம்
ஆடுகின்ற விந்தை சொன்னால் நிந்தை
உப்புக்கல்லை வைரம் என்று சொன்னால் - நம்பி
ஒப்புக்கொள்ளும் மூடருக்கு முன்னால் -
நாம் உளறி என்ன கதறி என்ன
ஒண்ணுமே நடக்கவில்லை தோழி ரொம்ப நாளா"

தோழி மன சொர்வை மறந்து விட்டு தொடர்ந்து எழுதுங்கள்

நட்புடன்.

chandrakala said...

very nice thought..............

Nima said...

Sitharkkal namakku aruliya thagavalgal kandippaaga edhavadhu oru roopathil, makkalai thevaiyaana bodhu adaindhe theerum.

sathish ila ashwin said...

sitharkkal patri nan kata padetha vesayangai enai aachariyam padetheyathu.my family oru sithar valintha idathuku ponome.manathuku neraivaga irunthathu.net ill ungal thagavalgal aarumai yaga irukirathu.sithar i parka vandum engira aaval aathigam aagirathu.engala pola illam thalai muraienarku thareyatha vesayangal i ungal mulam nangal tharenthu kolgirome.

nagendirank said...

please go ahead, you are simply the great

nagendirank said...

simply you are the great, please do more. Sidharkal will help you on your way.

Unknown said...

naan manimaran. ennai therikiratha. naan unkaludan saernthu pani aatra virumbukiraen.unkal pathil en minnanchalukku. mani.itrock@gmail.com

Unknown said...

naan manimaran. ennai therikiratha. naan unkaludan saernthu pani aatra virumbukiraen.unkal pathil en minnanchalukku. mani.itrock@gmail.com

Kumar said...

I am amazed with this blog! Wish this should develop into structured portal with mirrors around the world!

Unknown said...

vanakkam tholi ungalin intha padaipugal migavum arumai enakku sithargal patriya aarvam migavum ullathu itharku karanam Indira soundarajanin navalkalai paditha piragu innum athigamaitru melum niraya therinthu kola asai ullathu tholi....

Unknown said...

kandavar sonnathillai........
sonnavar kandathillai.......thozhi..unnal mudinthathai sei onru thiyavar kan maraikkum ...guru arul enrael..maei kanna mudiyadhu..akaththiyar..pulaththiyar vazhntha kadiya
kovil senrathu unda thirupanan kadhu..uthavikku 9894305150 thakaval kel ....yan petra guru arul anaivarukkum kidaikka....

Unknown said...

very good thozhi unnudaiya chindhanai

Post a comment