பதினென் சித்தர்களில் ஒருவரும், பழநியில் ஜீவ சமாதியாகி இருப்பவருமான ”போகநாதர்” பூமிக்கு மீண்டும் வருவதாக கூறியிருப்பதாகவும், எத்தகைய சந்தர்ப்பத்தில் அவர் மீண்டும் பூமிக்கு திரும்புவார் என்ற விவரத்தினை கோரக்கர் தனது “சந்திரரேகை” நூலில் விவரித்திருக்கிறார்.
"தடம் பெரிய தாரணியில் கலகம் மெத்த
தட்டாமல் நடந்த்தேறி நரர்களெல்லாம்
இடம்விட்டு இடம்ஏகிப் போரால் மாள்வார்
இயம்பொணாப் பெரும்பஞ்சம் இடருண்டாகும்
திடமிகுந்த தேவபிரம ஆலயங்கள்
தினபூசை குறைந்து அருளின்றிப் போமே
ஆகுமந்த நாளதனில் போக நாதர்
அகில பரதேச வெளி விட்டு நீங்கி
வாகுறவே நமதுபுவி வருவதாக
வாக்களித்துச் சென்றார் அந்தநாள் தனில்
பாகுபெற எனதுரிய சமாதிக் கூடம்
பளபளத்து சோதிலிங்கம் தானாய்த் தோன்றி
நாகுபணசல படதி நவநீதங்கள்
நாட்டமுற்று மனுக்கள் வசமே ஓங்கும்"
- சந்திர ரேகை
பூமியில் பல இடங்களில் அதிக கலகங்கள் விளைவதுடன், இடம் பெயர்வுகளாலும், போர்களாலும் மக்கள் பெரும் அளவில் மாண்டுபோவார்கள், இதனால் பெரும் பஞ்சமும், துன்பங்களும் உண்டாகும். கோவில்களில் தினசரி பூசைகள் குறைந்து தெய்வ அருள் குறைவடையும் கால கட்டத்தில் போகநாதர் அகில பரதேச வெளி விட்டு நமது பூமிக்கு வருவதாக வாக்குறுதி கொடுத்துவிட்டுச் சென்றுள்ளார்.
தற்போது சூட்சும சரீரத்தில் வாழும் போக நாதர் ஸ்தூல தேகமான மனித உருவில் பூமிக்கு வரும் அந்த நாளில் எனது சமாதி (கோரக்கர் சமாதி) பளபளத்து சோதிலிங்கம் ஒன்று தானாகத் வெளித் தோன்றும், அதன் பின்னர் அனைத்தும் மக்கள் வசமாகும் என்றும், அதன் பின்னர் மக்கள் செல்வச் செழிப்போடு நலமாக வாழ்வர் என்கிறார். இதெல்லாம் சாத்தியமா என்கிற கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை. ஆனால் கோரக்கரின் இந்த நூல் நம்மை ஆச்சர்யங்களில் விளிம்பில் நிறுத்துகிறது என்பது மட்டும் உண்மை.
இந்த நூல் முழுமையாகக் கிடைக்கும் பட்சத்தில் மேலும் பல கேள்விகளுக்கு விடை கிடைக்கும்.கோரக்கர் மட்டுமல்லாது அகத்தியர், நந்திதேவர், சிவனேந்திர மாமுனிவர், வீரப்பிரமேந்திர சுவாமிகள் போன்றோரும் இம்மாதிரியான் ”எதிர் கூறல்களை” கூறியுள்ளதாகக் குறிப்புகள் காணக் கிடைக்கின்றன. குருவருளால் அவை பற்றிய தகவல்கள் கிட்டும் போது பகிர்ந்து கொள்கிறேன்.
இத்துடன் சந்திரரேகை பற்றிய இந்த தொடர் முற்றிற்று. நாளைய பதிவில் வேறொரு தகவலுடன் சந்திக்கிறேன்.
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...
Post a Comment



20 comments:
Ariyatha varalatruth thagaval.
arumai.
ama ippa manakkanavugalil athigam ezuthuvathillaiya thozhi....
சித்தர்களைப்பற்றி என்னவேண்டுமானாலும் எழுதுங்கள். ஆனால், மூடநம்பிக்கைகளைப் பரப்பாதீர்கள்.
@kulasekaram
எந்த ஒரு கருத்தியலையோ அல்லது நம்பிக்கையையோ வலியுறுத்துவது இந்த பதிவுகளின் நோக்கமன்று.இந்த வலைமனையின் பதிவுகள் அனைத்தையும் ஒரு தகவல் பகிர்வாக மட்டுமே கருதிட வேண்டுகிறேன்.
தங்களின் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி.
நான் பூமிக்கு வந்து ரொம்ப நாளாச்சே?
நடப்பது அனைத்தும் இறைவன் செயல், இந்த உலகத்தில் எதுவும் நிரந்தரம் இல்லை , ஆகவே இருக்கும் வரை நம்மால் இயன்ற உதவியை பிறருக்கு செய்து . இறைவன் நாமத்தை கூறிக்கொண்டு , இந்த மானுட பிறப்பை கழிப்பது தான் நல்லது
இங்கு வருபவர்கள் அனைவரும் முதலில் கவனிக்கவேண்டியது என்னவென்றால் தோழி ஏற்கனவே சொல்லியிருப்பது போன்று அனைத்தும் தகவல் பகிர்வுதான். பாடல்களுக்கான தனக்குத் தெரிந்த விளக்கங்களை மட்டுமே பதிவிடுகிறார். தான் சொல்லும் விளக்கம்தான் உண்மையென்றோ அல்லது சரியென்றோ சொல்லவில்லை. அவரவர்களுக்கு மூளை இருக்கிறது. எனவே எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது பதிவை படிக்கும் நமது கடமையே.
தோழி..உங்க வலைப்பூ இப்ப தான் போயி பார்த்தேன்..templete ஏ ரொம்ப வசீகரமா..ஒரு மாதிரி spirtual ஆ இருந்தது..நான் பதிவை படிச்சுட்டு பின்னூட்டம் தரேன்..
நல்ல நோக்கம் கொண்டடுள்ளீர்கள்
தொடருங்கள்.
@ராவணன்
எத்தன பேர் இப்படி கிளம்பியிருக்கீங்க?
@தோழி
Excellent stuff
Keep the good work going
Your website has just simply touched my heart
Nice topic
Korakkarin Chandra Rekhai Book Vilakka uraiyudan Vaangiullen Thozhi. Migavum Arithaana matrum AAcharyamaana thagavalgal Athil Ullathu.
Kadantha maatham, Vadakkupoigainalloore yenra ooril Irukkum Korakkarin Jeeva samathikkum Sendru vanthom Yenpathai Magilchiyudan Therivithukolkiren.
nalla article padichu romba naal aguthu... thaks pa
i saw your website.... Its good & i want talk with you... Because of i like sithargal thoughts......... can you give me any details about sithargal.......
Tagvalugu nanri
அனைத்தும் உண்மையே ஆனால் அவர்கள் இந்த உலகில் மானிட வந்துவிட்டார்கள் .என்பதும் உண்மையே
Purinthu irunthal therinthu vazhnthu iruklam puriyamal epadi suniyama avargal eluthi irupathu en? endru than vilanga villai,
ithai yosithu parkail avargal suyanalam kondavarkalo endru than ena thondru kirathu
Sitharkal katrathai en sunyamaga soli irukirarkal,purinthal nam vaznthu viduvom endru ninathi vitarkalo
vazhthukkal. nalla nikalvukal nalla kalankalil vandhu serum
i think ,he s in chennai.....(bogar)
Post a Comment