கலியுகம் - இந்தியாவின் வரலாறு!

Author: தோழி / Labels: ,

கலியுகம் பிறந்த பின்னர் பாரத நாட்டை யார் யார் எல்லாம் ஆள்வார்கள், எத்தனை ஆண்டுகள் ஆட்சியில் இருப்பார்கள் என்கிற விவரங்களைக் கூட கோரக்கர் தனது நூலில் விளக்கியிருக்கிறார்.

"பழியில்லா பரீட்சித்து ஐந்நூறே ஆண்டான்
பரிவாக சனமேசெயன் முந்நூறாண்டான்
இழிவில்லா நரேந்திரனாம் என்ற மன்னன்
இரண்டு நூற்றெண்பத் தெட்டாக ஆண்டான்
செழிப்பாக சாரங்கன் எண்பத் தைந்து
செகமுழுவதும் விக்கிரமாதித்த வேந்தன்
வேந்தனவன் இரெண்டாயிரம் ஆண்டதப்பால்
வினயமுற்றுச் சாலிவாகனனும் தோன்றிப்
பாந்தமிகு முன்னூற்று நாற்பத்தொன்பது
ஆண்டுஅகிலம் அரசுரிய செங்கோலோச்சி
எந்துகங்குல் நற்போசன் ஐநூ றாண்டான்
சுப்பராயலு அறுநூற்றுத் தொண்ணூற்றைந்து
போந்தவே கர்த்தாக்கள் எண்பத் தைந்து
பிறைஇசுலாம் அறுபத்து இரெண்டாண்டு"

- சந்திர ரேகை -

"ஒருமையில்லா ஆழிக்கரைக்கு அப்பாலுற்றோன்
ஓதுஅந்தப் பறட்டையன் செம்மூஞ்சி சுக்கன்
பெருமாவ்யுடன் எழுபத்து மூன்றதாண்டு
பேதமற ஆண்டிடவே இவன் சார்புற்றோன்
கருமையில்ல வெள்ளை நிறமாகத்தானே
கபடுற்று கவர்ந்து தொண்ணுற்றுறாறதாண்டு
வறுமைசெய்து ஆண்டபின் இது குலத்தான்
வந்திடுவன் விஜயன்போன்றோர் அரசன்
தோன்றி ஈருறவு நாற்பது வருடமாகும்
துறைதவறா முறைபிசகா திருந்துஓங்கும்
மேன்மை பெற இதுகடந்த நாள்துய்ய
ஆன்மநலம் அறிந்த கிள்ளுநாமக்காரர்
அகிலசக்கர கொடியுடனே அழியாமல்
பான்மையுடன் அரசாள நான் மட்டல்ல
பகரவில்லை சிவனேந்திரமாமுனியும் சொன்னார்"

- சந்திர ரேகை -

இந்த பாடல்களின் படி பாரத தேசத்தை ஆட்சி செய்தவர்களின் பெயரையும், ஆண்டுகளையும் பட்டியலிட்டால்......


ஆட்சியாளர்கள்
ஆண்டு
பரீட்சித்து மன்னன்
500
சனமேசெயன்
300
நரேந்திரன்
288
சாரங்கன்
85
விக்கிரமாதித்தன்
2000
சாலிவாகனன்
349
போசனராசன்
500
சுப்பராயலு
695
கர்த்தாக்கள்
85
இஸ்லாமியர்
62
பறட்டையன் செம்மூஞ்சி சுக்கன்
73
பறட்டையன் செம்மூஞ்சி சுக்கன்
96
பறட்டையன் செம்மூஞ்சி சுக்கன்
40

இதன் பின்னர் கிள்ளுநாமக்காரர் கலி முடியும்வரை ஆட்சி செய்வர் என்கிறார்....

இந்த பட்டியலில்..

"ஒருமையில்லா ஆழிக்கரைக்கு அப்பாலுற்றோன்
ஓதுஅந்தப் பறட்டையன் செம்மூஞ்சி சுக்கன்" 73 ஆண்டுகள்

"இவன் சார்புற்றோன்கருமையில்ல வெள்ளை
நிறமாகத்தானே கபடுற்று கவர்ந்து வறுமைசெய்து ஆண்டபின்" 96 ஆண்டுகள்

"வறுமைசெய்து ஆண்டபின் இது குலத்தான்
வந்திடுவன் விஜயன் போன்றோர் அரசன்" 40 ஆண்டுகள்


இவ்வாறு குறிக்கப்படும் ஆட்சிக்காலம் ஆங்கிலேயர் இந்தியாவை ஆண்ட காலமாகக் கொள்ளலாம், மொத்தமாக 209 ஆண்டுகள் என்று கோரக்கர் குறிப்பிடுகிறார். ஆங்கிலேயர்கள் இந்திய நாட்டை எறத்தாழ 200 ஆண்டுகளுக்கு மேல் ஆண்டமை எல்லொருக்கும் தெரிந்ததே..கோரக்கர் கூறியுள்ள கணக்கின் படி இந்தியா சுதந்திரம் அடைந்த போது கலியுகத்தின் வயது 5073 ஆண்டுகளாகும்.

கடைசியாக ஆங்கிலேயரின் ஆட்சிக்குப் பின்னர் "ஆன்மநலம் அறிந்த கிள்ளுநாமக்காரர் அகிலசக்கர கொடியுடனே அழியாமல் பான்மையுடன் அரசாள" என்று குறிப்பிட்டுள்ளார். இங்கே "ஆன்மநலம் அறிந்த கிள்ளுநாமக்காரர்" என்பது அநேகமாய் மகாத்மா காந்தியையும் "அகிலசக்கர கொடியுடனே" என்பதை அசோகச்சக்கரம் பொறித்த இந்தியக் கொடி என்பதாக அனுமானிக்கலாம்.

இந்தச் எதிர்வு கூறல்களை தான் மட்டுமல்லாது சிவனேந்திரமாமுனியும் சொல்லியுள்ளார் என்று கோரக்கர் குறிப்பிட்டுள்ளது கவனிக்கத்தக்கது. ஆக பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சித்தர்கள் இந்திய நாட்டை ஆங்கிலேயர்கள் முதல், சுதந்திரம் பெற்ற இந்தியாவை மகாத்மா காந்தியும், அவர் வழியில் வந்தவர்களும் அதாவது சனநாயக ஆட்சி முறையில் ஆள்வர் என்று எதிர்வு கூறியிருப்பது ஆச்சர்யமான செய்தி!

“போகர்” பூமிக்கு திரும்ப வரும் தினம் பற்றிய விவரங்களைக் கூட தனது நூலில் கோரக்கர் விவரித்திருக்கிறார். நாளைய பதிவில் அந்த தகவல்களுடன் சந்திக்கிறேன்...

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

28 comments:

Slakshmanan said...

Really nice and amazing please make it as eBook

yogananda said...

amazing - Boganathar varavu padri

Sai said...

மிக மிக பயனுள்ள செய்திகள்
நன்றி தோழி

Anonymous said...

நல்ல பதிவு , ஆயினும் எனக்கு ஒரு சந்தேகம் , சித்தர்கள் அனைவரும் காற்றில் கலந்து , எங்கும் இருப்பார்கள் என்று சொல்வார்கள் , அப்படிருக்க , கோரக்கர் மட்டும் என்ன புதியதாய் பூமிக்கு வருவது என்பது .

Anonymous said...

சரி தோழி இப்போது உள்ள ஆட்சியார்களை பற்றி கோரக்கர் ஒன்றும் சொல்லவில்லையே ? ஏன் ?

Ravi said...

Amazing information. Our siddargal are really great. Looking for second part.

- Raviii

Mohan said...

நீங்கள் கூறும் தகவல்கள் எல்லாம் மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. பகிர்விற்கு நன்றி!

Vijai said...

ningalaaa gandi nu mudivu panitta eppadi vera meaning kuda irukalaam illayaa??

Valaakam said...

Supeeeeeeeeeeeeeerb... :)

Ramesh said...

இதெல்லாம் தலைக்கும், கெண்டைகாலுக்கும் முடிச்சு போடறது. அப்படி முடிந்தால், தற்போதைய அல்லது வருங்கால ஆட்சியாளர்களை பற்றி ஏன் விட்டுவிட்டீர்கள். கடந்ததை பற்றி எப்படி வேண்டுமானாலும் justify பண்ணலாம். உங்கள் முயற்சியை நான் குறை கூறவில்லை, நான் சொன்னதையும் சற்று சிந்தித்து பாருங்களேன்.

தோழி said...

என்னிடம் இருப்பது 1826ம் ஆண்டு பதிப்பிக்கப் பட்ட புத்தகம். இந்த புத்தகத்தில் அநேக பக்கங்கள் அழிந்து விட்டது. என்னால் சேகரிக்க முடிந்த சில பாடல்களின் விவரங்களை மட்டுமே இந்த பதிவில் பகிர்ந்திருக்கிறேன்.

இலங்கையில் தற்போதைய சூழலில் இந்த நூலை தேடிக் கண்டு பிடிப்பது சாத்தியமில்லை. எனவே தமிழகத்தில் உள்ள நண்பர்கள் சிலரிடம் கேட்டிருக்கிறேன். கிடைக்கப் பெற்றால் பல சந்தேகங்களுக்கும், அனுமானங்களுக்கும் விடை தெரியலாம்.

எனவே இந்த பதிவுகளை ஒரு தகவல் பகிர்வு முயற்சியாக மட்டுமே கருதிட வேண்டுகிறேன்

ம.தி.சுதா said...

அருமையாக ஆராய்ந்து எழுதியிருக்கிறீர்கள்.. அடுத்த பதிவிற்காய் காத்திருக்கிறேன்...

Anonymous said...

:D

Lakshmanan said...

திரு தோழி

கீழ்கண்ட நூலகத்தின் மூலம் வெளியிடப்பட்ட “கோரக்கர் சந்திரரேகை” என்ற நூலை 2005 ஆம் ஆண்டு சென்னை புத்தகக் காட்சியில் பார்த்ததாக ஞாபகம். தொலைபேசியில் தொடர்புகொள்ள முயற்சியுங்கள்.

Name: Thamarai Noolagam
Tel: (044) 23620249
Address: #7, 3rd Street NGO Colony
Vadapalani, Chennai - 26

ராவணன் said...

இஸ்லாமியர் ஆண்டது 62 ஆண்டுகளா?அது எந்த பாரத நாட்டை?கதை விடுவதற்கும் ஓர் அளவு வேண்டும்
அது யாரு சுப்பராயலு?
இது போன்ற பாக்களை யார் வேண்டுமானாலும் எழுதலாம்.
அய்யர்கள் இதுபோன்ற பொய்களைக் கூறியே வேதகாலம் என்று இல்லாத ஒன்றைக் கூறித்திரிகின்றனர்.
தமிழர்களின் வாழ்க்கை தொன்மையானது,
அதற்காக இல்லாத கட்டுக்கதைகளை கூறுவது சரியா?
உங்களுக்கு இதுபோன்று பாடல்கள் வேண்டுமா?..நான் தருகின்றேன்.

ready 123 said...

islamiyar india mooluvathum kaipatri aandathu 60 year enru ninaikiren , Mohiuddin Muhammad Aurangzeb Alamgir kaalathil thaan ithu saathiyam ayitru , athuvum thentamilagathai avargalal nerunga mudiyavillai , ayya thozhi ungalai namba vaika muyarchikavillai , avarkaluku therithathai kooriyullar ,subbarayilu aatchikalam , indiavin irunda kaalam aga kooda irukalam

Unknown said...

it is quite unusal but useful information to each and every human soul get in touch with this web.
girid haran

Unknown said...

நல்ல தகவல் அருமை

Unknown said...

thangal muyarchikku..en INIYA NANDRIGAL PALA...Melum yethir parkiren sithargal patriya unmai sambavangalai...

sanathana tharmam said...

jkurukkal

Author said...

Are you need this book...sister?

கோரக்கர் அருளிய சந்திரரேகை - 7 நூல்கள் தொகுப்பு
-------------------------------------------
http://www.noolulagam.com/product/?pid=7095

Mylon said...

sarvam sivamayam

chandrasekaran108 said...

சித்தர்கள் நேர்மை வழியை போதிப்பவர்கள். தனி ஒரு மனிதன் தன்னை தான் ஆளுகிறானா என்பதில் தான் முடிவாக இருப்பவர்கள். 'இப்படி கொள்ளாலாம்' யென்பது போன்ற ஹேஷ்ய்த்தில் ஈடுபடமாட்டார்கள்!

B Raja said...

mikka nandri

Ananth Sozhan said...

@தோழி
Any update about this book? You got this book?

Anonymous said...

Very valuable information's, please continue your Honorable work, let the Sitharkal will give you good health and more knowledge for ever.

Guruswamy Sundar Raj. I am 93 years old, my son is helping me to read your blog.

saalaikannan said...

http://www.youtube.com/watch?v=ebJTcBOpuhk

தோழி - அவர்களிடம் மேற்குரித்த பாடல்களை சார்ந்த (இந்த வீடியோவில் கொடுக்கப் பெற்றுள்ள) தீர்க்க தரிசன குறிப்புகள் குறித்து விரிவாக கலந்தாலோசிக்க முனைகிறேன் - (வீடியோவில் பேசியது அடியேனே) - சாலை கண்ணன் kannan.consultant@gmail.com 9940391834

Unknown said...

உண்மையா

Post a Comment