கலியுகமும், மனிதர்களின் குண நலன்களும்...!

Author: தோழி / Labels: ,

கலியுகம் துவங்கிய நாள் முதல், இறுதி நாள் வரையிலான விவரங்களை கோரக்கர் தனது ”சந்திரரேகை” நூலில் விவரித்திருக்கிறார். கலியுலத்தின் அரசியல், சமூகம், வாழும் மனிதர்களின் குண நலன்கள் பற்றிய தகவல்களும் இந்த நூலில் காணக் கிடைக்கின்றன.

மனிதர்களின் குண நலன்களை பற்றி பின்வருமாறு கூறுகிறார்.

"சின்னம் மிக ஆகிடுமே செகம் பிறந்து
சீரியதோர் நாகம்போல மாந்தரெல்லாம்
பின்னமுற்றும் பேதமையால் மயக்கம் கொள்வார்
பிரபலமாம் அரசர்கட்கும் ஆனிமெத்த
இந்நிலத்தில் எங்கெங்கும் சங்கம் கூட்டி
இதமுடனே நிலைநாட்டி ஈசன்தன்னை
நன்னயமாய் வழிபடுவர் நாட்டில் எங்கும்
நற்சமய வாதிகளும் அநேகம் உண்டே "

- சந்திர ரேகை -

உலகமே மாற்றங்களுக்கு உள்ளாகி, மக்கள் நாகம் போல் சீறிக் கொண்டு, ஏற்றத்தாழ்வு பேசி, ஒருவரை ஒருவர் அழித்துக் கொள்ள முற்படுவர். இந்த நிலத்தில் அரசர்களுக்கு இடையில் சங்கங்களும் பிரிவினைகளும் உண்டாகும். ஈசனை வழிபடுபவர்களும், நற்சமய வாதிகளும் அதிகம் இருப்பார்கள் என்கிறார்.


"இன்றியமை யாதொரு இழிகுலத்தோர்
என உரைத்த பறையர்களும் பாக்கியம் பெற்று
நன்றெனவே வையகத்தில் நாளும் ஓங்க
நவிலொண்ணாப் புகழுடனே வாழப்போகும்
குண்றாதோர் முட்டையினில் இரெண்டு குஞ்சு
செனித்துவிடும் மிருகங்கள் வினோதம் காட்டும்
அன்றாகும் காலம் அந்தணர் கட்காகா
அறிகுறியாம் இவை எல்லாம் சின்னமாமே"

- சந்திர ரேகை -

இழிகுலத்தோர் என்று கூறப்படும் தாழ்த்தப்பட்ட மக்கள் பாக்கியம் பெற்றுச் சிறப்பாக புகழுடன் வையகத்தில் வாழ்வார்கள் என்கிறார். ஒரு முட்டையில் இரண்டு குஞ்சுகள் பிறப்பதுடன், மிருகங்களில் வினோதமான பிறப்புக்கள் உருவாகும் இந்தக் கலியுகமானது, அந்தண குலத்தவர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும். இவைகள் எல்லாமே கலியுகத்தின் அறிகுறிகளாவதுடன் சின்னமாகவும் விளங்கும் என்கிறார்.

இத்தகைய கலியுகத்தில், பாரத தேசத்தை யாரெல்லாம் ஆள்வார்கள் என்றும் கூட விவரமாய் குறித்திருக்கிறார். அதன் விவரங்கள் நாளைய பதிவில்....

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

12 comments:

Rakesh said...

i want sidha book.

chandru2110 said...

கலியுகத்துக்கு அப்புறம் என்ன யுகம் வரும். இதைவிட மோசமா இருக்குமா?

Slakshmanan said...

Please make it as eBook, through that every one will be gained good knowledge

anbu said...

ஆச்சரியமான தகவல்கள்
கண்டெடுத்து படைத்திடும்
தங்களது பணி கண்டு வியக்கிறேன்
வாழ்த்துகிறேன்
தொடருட்டும் தங்கள் பணி

Murali V said...

@chandru2110

யுகங்கள் நான்கு. 1. சத்யுகம் (லக்ஷ்மி-நாராயணன் ஆட்சி), 2. திரேதாயுகம் (ராமர்-சீதை ஆட்சி), 3. துவாபரயுகம் (துன்பங்கள் ஆரம்பிக்கும் யுகம்), 4. கலியுகம் (துன்பங்கள் உச்ச கட்டத்தை அடையும் யுகம்). கலியுகம் முடிந்த பின் மீண்டும் சத்யுகம் ஆரம்பமாகும். ஆனால் கலியுகத்தை முடித்து வைத்து சொர்க்கத்தை ஸ்தாபனை செய்ய மனிதர்களால் முடியாது. பிறப்பு இறப்பிற்கு அப்பாற்பட்ட, மனித சரீரமற்ற, ஜோதி சொரூபமான இறைவனால் மட்டுமே முடியும். அவர் ஒருவரால் மட்டுமே ஒவ்வொருவரிடமும் உள்ள அசுர குணங்களை அழித்து தெய்வீக குணங்களை அளிக்க முடியும். கலியுக கடைசியில் (அதாவது இப்போது) யார் ஒருவர் படைப்புகளை விட்டு விட்டு படைப்பவனை இறுகப்பற்றிக் கொள்கின்றார்களோ அவரே தெய்வீக குணங்களை அடைய முடியும். அடுத்த யுகத்திற்கு தகுதி ஆக முடியும்.

Madhi said...

மிக நல்ல முயற்சி தோழி ...

nan mathiyan said...

தோழி,
எனக்கு ஒரு சந்தேகம்,
கலியுகமும் மனிதர்களின் குண நலன்களும் என்ற தலைப்பில் உள்ள சுட்டியில்,

"கலியுகத்தில் இழிகுலத்தோர் என்று சொல்லப்படும் தாழ்த்தப்பட்ட மக்கள்" என்று சித்தர்கள் யாரை சொல்கிறார்கள்?

இவன்,
மதி.

Gienbee said...

What the Siddhas have written is a vast treasure house of knowledge, and there are innumerable predictions about the days to come. The article was very interesting and we need several such articles to educate us and eradicate our ignorance. Pl continue your effort to shed light on the myterious lore of antiquity. God bless you.

K. Sankar said...

அகத்தியர் அருள் வாக்கு புத்தகம் (நாடி சொல்லும் கதைகள்- ஹனுமத்தாசன் எழுதியது) எங்களிடம் கிடைக்கும் - 5 பாகங்கள் - தொடர்புக்கு அறந்தாங்கி சங்கர் 9444160161 சென்னை

kirubalini thiyagarajah said...

arumayana padhivugal. ungal pani melum thodara en manamarntha vazhthukkal :)

kirubalini thiyagarajah said...

arumayana padhivugal. ungal pani melum thodara en manamarntha vazhthukkal :)

kirubalini thiyagarajah said...

ok

Post a Comment