கலியுகமும், சந்திர ரேகையும்!

Author: தோழி / Labels: ,

சமீபத்தில் எனது புத்தக அலமாரியை ஒழுங்கு செய்து கொண்டிருந்த போது...அநேகமாய் அழிந்து விட்ட நிலையில் இருந்த நூலொன்று கிடைத்தது. புத்தகத்தின் பெரும் பகுதி அழிந்துவிட்ட நிலையில் மிச்சமிருந்த நூலின் பாடல்களை சேகரிக்க முயற்சித்த போது, அது கோரக்க சித்தர் அருளிய ”சந்திர ரேகை” என்று தெரிந்தது. என்னிடம் இருக்கும் இந்த புத்தகம் 1826ம் ஆண்டில் அச்சில் பதிப்பிக்கப் பட்ட நூல். இன்றைக்கு அந்த நூல் முழுமையான வடிவில் கிடைக்கிறதா என தெரியவில்லை. விவரம் அறிந்தவர்கள் தகவல் தந்தால் பேருதவியாக இருக்கும்.

நாம் வாழ்ந்து வரும் இந்த கலியுகத்தின் பிறப்பு முதல் கடைசிவரையிலான நிகழ்வுகளை விவரித்திருக்கிறார். ஒவ்வொரு கால கட்டத்திலும் என்னென்ன நிகழ்வுகள் நிகழும் என்பதை என்றைக்கோ கோரக்கர் தனது நூலில் விவரித்திருப்பது ஆச்சர்யமான ஒன்று. இந்த நூலில் நான் சேகரித்த சில பாடல்களையும் அதன் தெளிவுகளையும் இனி வரும் பதிவுகளில் பகிர்ந்து கொள்கிறேன்.

கலியுகத்தின் தோற்றம்..

"யோகி பரமானந்த கலியின் தோற்றம்
உண்மை நிற சாதிமதபேதம் மெத்த
பாகிதமாய் பிரபலங்கள் பெண்பால்விருத்திப்
பாருலகில் ஆண்மக்கள் குறைவுண்டாகும்
மோகித்தே முன்பின்னும் முறைமை கெட்ட
மூதரிய தாயினையே சேய்தான் சேர்ந்து
போகிதமாய் மதனையது பயில்வார் பங்கில்
பூவுலகில் கலியினுடை பான்மை கேளே"

- சந்திர ரேகை -

"கேளேநன் மனுக்கள் நூற்றுக் கொன்று
கொடியாகப் பிறந்திருந்தல் அரிதேயாகும்
நாளேமுன் கலியவனும் வளர்ந்து ஓங்க
நரங்கிடுவர் மனிதர்களும் உயரம் கட்டை
வாளே முன்பின் வயது ஆண்டு நூறு
வழங்கிடுவேன் கலியுதிக்கும் இடத்தை - தென்பால்
சூளேமெய்க் கம்பல பட்டன் வைணவ தத்தன்
கொல்லை புன்னை மரத்தின் கீழ்ப்பிரமாதி ஆண்டு
ஆனசித்திரைவெள்ளி நவமிமூலம் கலிசெனிப்பே"

- சந்திர ரேகை -


பிரமாதி ஆண்டு, சித்திரை மாதம், வெள்ளிக் கிழமை, நவமி திதியுடன் மூல நட்சத்திரம் சேர்ந்த நாளில் ”கம்பல பட்டன் வைணவ தத்தன்” கொல்லையில் புன்னை மரத்தின் கீழ் யோகி பரமானந்த கலிபுருஷன் பிறந்தான் என்று சொல்லும் கோரக்கர் மேலும், கலியுகத்தின் தன்மை சொல்கிறேன் கேள் என்று தொடர்கிறார்...

கலியுகத்தில் சாதி மத பேதம் அதிகமாக இருப்பதுடன், சனத் தொகையில் பெண்களின் எண்ணிக்கை அதிகமாகவும் ஆண்கள் குறைவாகவும், இருப்பார்கள்...., காமவெறி அதிகரித்து பெற்ற தாயைப் பெண்டாளும் மகனும் இருப்பதுடன், நல்லவர்கள் நூற்றுக்கு ஒருவர் பிறந்திருந்தால் அரிதாக இருக்கும் என்கிறார். அத்துடன் கலியுகம் வளரவளர மனிதர்களின் உயரம் குறைந்து கொண்டே போகும் என்றும் நூறுவயதுக்கு மேல் வாழ்பவர்கள் மிக அரிதாகிவிடுவர் என்கிறார்.

பதிவின் நீளம் கருதி, மிகுதியை நாளை தொடர்கிறேன்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

19 comments:

azhageri said...

இந்த புத்தகத்தை மின்னூல் வடிவில் தர வேண்டுகிறேன்

நன்றி.

Shiva said...

உங்கள் கருவூலத்தில் இல்லாத தலைப்புக்களே இல்லை எனலாம். இவற்றை பெற நீங்கள் எவ்வளவோ பாக்கியங்கள் செய்து பிறந்திருக்க வேண்டும். Nostradamus மாதிரி நம்மவர்களும் எதிர்கால நிகழ்வுகளை எழுதி வைத்திருகிறார்கள் போல் தெரிகிறது. இந்தியாவை பற்றி, இலங்கையை பற்றி எதிர்கால செய்திகள் ஏதேனும் உண்டா..... மற்ற அலமாரிகளையும் சிறிது ஒழுங்கு படுத்தினால் அரிய பிற தகவல்களும் கிடைக்க கூடும்!! வாழ்க வளர்க தோழியின் தொண்டு.

ramesh said...

நன்று. அப்படியென்றால், இந்த தவறுகள் செய்ய மனிதன் விதிக்கப்பட்டானா அல்லது மனிதர்களாகவே மனம் கெட்டு திரிவார்களா?. கொஞ்சம் பதில் அளிக்கவும். நன்றி.

jagadeesh said...

அற்புதம். எப்படியாவது, தேடி எடுத்து, இதன் தலைப்பில் நிறைய இடுகைகள் போடுங்கள். தூசு தட்டுங்கள், சாப்பிடவே வேண்டாம்.

Anonymous said...

என்ன ' பெற்ற தாயை மகன் பெண்டாலயுவான " என்ன இதை நம்பமுடியவில்லை , அதேசமயம் நம்பாமல் இருக்கவும் முடியவில்லை .

ப்ரின்ஸ் said...

நான் தேடி(எதிர்பார்த்து)க்கொண்டிருந்த தகவல்....
எல்லாம் குறித்தாகிற்று, நடப்பது என்ன என்பதை அறிந்து கொள்ள மட்டுமே இவைகள், ஞானமுள்ளவன் சிந்தித்து தன்வழியை சீர்படுத்தக்கடவன்.

ravikumar said...

keep publishing it will be useful to us

நிகழ்காலத்தில்... said...

மின்னூலாக்க முயலுங்கள்..

Altruist said...

கலியுகம் முடிய இன்னும் 4 லக்ஷம் வருஷங்கள் இருக்கிறதாக கேள்வி பட்டிருக்கிறேன்... கலி யுகத்தின் முடிவில்...மனிதர்களுக்கு நல்ல எண்ணங்கள் குன்றி போய்....ஒரு ஜான் உயரத்தோடு இருப்பார்கள் என்றும்...அதற்க்கு பிறகு தான் கடவுள் அவதாரம் எடுப்பார் என்றும் ...பிறகு கலி யுகம் ஒரு வழியாக முடியும் என்றும் ....கேள்வி பட்டிருக்கிறேன்...

Lingeswaran said...

Please refer and compare the Concept 'Electra Complex' proposed by Sigmund freud,a psychologist on 'Sexual attachment of Boy to his mother' in the stages of one's personality development.

Lingeswaran said...

Sorry for the mistake. It's not Electra complex. It is 'Oedipus Complex'.

suban said...

Call Tamarai Noolagam they have that book I bought it from them. Phone number 04423620249
Write me back if you need more info also akka can you let me know what are the varmam manuscripts you have and wat names and which are the good ones .

Saththiriyan@gmail.com
Canada

Ameertharuoban Sivahgnaanam said...

​தொடரட்டும் உங்கள் சீரிய பணி வாழ்த்துக்கள்...

Gopal said...

publish more pls

Badri said...

super.

a.maruthavanan Angappan said...

arputhamana thakaval parimaartraththukku nanringa...

kingofking said...

Korakar appa aruliya chandra rekai mattrum inum pala ariya noolkal kidaikum idam www.thamarainoolagam.com

Sri Kandan said...

தொடர்ந்து இதை வெளியிட வேண்டுகிறேன் தோழி

Sri Kandan said...

thodarnthu idhai veliyida vendugiren

Post a Comment