சுவகரண முத்திரை

Author: தோழி / Labels: ,

யோக முத்திரை வரிசையில் கடைசி முத்திரையான சுவகரண முத்திரை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.தன்வந்திரி, தனது ”தன்வந்திரி வைத்தியம் 1000” என்ற நூலில் சுவகரண முத்திரையை செயல் படுத்திடும் முறையினை பின்வருமாறு விளக்குகிறார்.

"சாற்றுவது சுவகரண முத்திரையைக் கொண்டு
சங்கையுடன் சம்மென்று தியானஞ்செய்யில்
பார்த்திபனே சதாகோடி மந்திரமுஞ்சித்தி
சகலகலை சாத்திரமுஞ் சித்தி
தோற்றியதோர் ஆதார மூலஞ்சித்தி
திருவாசி ஆனதொரு வாசிசித்தி
தோத்திரமாய் நின்றதொரு பூசைசித்தி
சுகமான ஆறான முத்திரையுஞ்சித்தே"

- தன்வந்திரி வைத்தியம் 1000 -

சுவகரண முத்திரையை இரு கரங்களிலும் செய்து கண்களை மூடி மனக்கண்ணால் புருவ மத்தியைப் பார்த்து சம் என்ற மந்திரத்தை மனதிற்குள் செபித்துக் கொண்டு தியானம் செய்ய, பத்துக் கோடி மந்திரமும், சகல சாத்திரங்களும், ஆதாரமான மூலப் பொருளும் சித்தியாவதுடன் வாசியும் சித்திக்கும் என்கிறார்.

இந்த யோக முத்திரைகளை தினமும் அதிகாலையில் அதாவது பிரம்ம முகூர்த்ததில் செய்து வர உடலில் உள்ள பஞ்சபூத அம்சங்கள் நிலைபெறும். இதனால் கிடைக்கும் நன்மைகள் கணக்கில் அடங்கா....யோக முத்திரைகளை முறையாக, குருமுகமாய் பயிற்சினை தொடங்கி, தொடர்ந்து பழகி வருதல் சிறப்பு.

இத்துடன் யோக முத்திரை தொடர் முற்றிற்று. அடுத்த பதிவில் வேறொரு தகவலுடன் சந்திக்கிறேன்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

7 comments:

Unknown said...

இதுவரை சொன்ன அனைத்து முதிரைகளுக்கும் உள்ள மந்திரம் அந்தந்த செய்யுளில் இருந்தது அனால் இந்த செய்யுளில் மந்திரம் கொடுக்க படவில்லை. இந்த மந்திரம் "றீங்" எங்கிருந்து தேர்ந்து எடுத்திர்கள்?

Shiva said...

ஆஹா முத்திரைகள் அற்புதம். தாங்கள் சிரமம் கருதாது முத்திரை களுக்கான, படங்களை எடுத்து - சேர்த்து, விளக்கங்களும் தந்தமைக்கு பாராட்டுக்கள். நன்றி. இவைகளை கிழக்குமுகமாக செய்தல் வேண்டும் என நினைக்கிறேன். சரியா?
இந்த நேரத்தில் ஒன்றை சொல்லலாம் என நினைக்கிறேன்.(சரி இல்லை என்றால் நீக்கி விடுங்கள் தோழி)
நம் முன்னோர்கள் எதை செய்தாலும், சொன்னாலும் அதில் ஒரு தத்துவம் இருக்கும் என்பார்கள். அப்பொழுது உள்ள மண் எண்ணை விளக்கு வெளிச்சத்தில் (லண்டியன் விளக்கு என்பார்கள்), சுவற்றுக்கும் - விளக்குக்கும் நடுவில் துப்பாக்கி சுடுகிறேன் பார் என்று விரல்களை மடக்கி காட்டுவார்கள். கை நிழல் சுவற்றில் தெரியும். - அது தான் திருவினி முத்திரை. நாய் போல் காட்டுகிறேன் என்பார்கள் - அது தான் சுவகர்ண முத்திரை. நம்மையும் காட்டி விளையாட சொல்வார்கள். நான் விளையாடிய அந்த விளையாட்டுக்கு, இப்போது தான் தோழி மூலம் அது எத்தகைய பெரிய விஷயம் அந்த சிறிய விளையாட்டில் அடங்கி உள்ளது என்று தெரிந்ததும் என்னை ஆச்சரிய பட வைத்துவிட்டது !!.

வானவன் யோகி said...

தங்களின் முத்திரை குறித்த பதிவுகள் அத்தனையும் எமது நெஞ்சகங்களில் ”முத்திரை” பதித்தன என்றால் அது மிகையில்லை

rough said...

Thanks for hosting such a brilliant blog... I was alerted to your blog by Sindhuji and after coming here Im amazed by such wonderful information that you have.. I will become a regular visitor and Im sure you have information which will benefit thousands of people around the world. I have a question for you, just a quick question...
while doing the dhyanam with the Suvakarana Muthirai in early morning hours, by concerntarting on the spot between the eybrows do we have to meditate by saying " sam" or it is "sham".

சம் என்ற மந்திரத்தை மனதிற்குள் தியானம் செய்ய வேண்டுமா? அல்லது ஷம் என்று தியானம் செய்ய வேண்டுமா?

Please advice
Continue your excellent work. Best wishes and lots of love,
S

Yoga Yuva Kendra said...

தாங்கள் மேல் குறிப்பிட்ட படத்தில் காட்டியிருப்பது அபான முத்திரை அல்லவா? தயவு செய்து விளக்கம் தருவீர்களா?

charmvee said...

Kindly post full posture to know where the hands to be rest.

Unknown said...

This is the only mudra that will clear all toxins and negative thoughts from our body.
Ever your universel soul loving friend,
SESHYA URPFR.ORG

Post a Comment