யோனி முத்திரை,,!, அபான முத்திரை..!

Author: தோழி / Labels: ,
யோக முத்திரைகள் வரிசையில் இன்றைய பதிவில் “யோனி முத்திரை” மற்றும் “அபான முத்திரை” பற்றிய விவரங்களைப் பார்ப்போம்.

யோனி முத்திரை
யோனி முத்திரையை செயல்படுத்தும் முறையினை ”தன்வந்திரி” தனது நூலில் பின்வருமாறு கூறுகிறார்.

"செய்யப்பா யோனி முத்திரையைக் கொண்டு
தீர்க்கமுடன் றீங்கென்றே தியானஞ்செய்யில்
மெய்யப்பா தேவாதி தேவர்களுஞ்சித்தி
மேலான அண்டமொடு புவனஞ்சித்தி
மய்யப்பா மையமென்ற சுழினைசித்தி
மாலொடு லட்சுமியும் தனங்கள்சித்தி
பையப்பா யோனி முத்திரயைப் பெற்று
பக்தியுடன் சிவயோகம் பணிந்து காணே"

- தன்வந்திரி வைத்தியம் 1000 -

மேலே படத்தில் உள்ளவாறு ”யோனி முத்திரை”யை இரு கரங்களிலும் செய்து, கண்களை மூடிக் மனக்கண்ணால் புருவ மத்தியைப் பார்த்து ”றீங்” என்ற மந்திரத்தை மனதிற்குள் செபித்துக் கொண்டு தியானம் செய்திட தேவாதி தேவர்களுடன், அண்டமும், புவனமும் சித்தியாவதுடன், லட்சுமியும், பொன் பொருட்களும், மையமான சுழினையும் சித்தியாகும் என்கிறார்.


அபான முத்திரை
அபான முத்திரையினை செயல்படுத்திடும் முறையினை ”தன்வந்திரி” தனது நூலில் பின்வருமாறு கூறுகிறார்.

"சித்தான அபான முத்திரையைச் செய்து
தீர்க்கமுடன் கிலியென்று தியானஞ்செய்ய
வத்தான பூரணமாய் சிவயொகஞ்சித்தி
மகத்தான கற்பூர தீபஞ்சித்தி
வித்தான பிரமனொரு சரசுவதியுஞ்சித்தி
வேத மயமான சிவயொகஞ்சித்தி
சத்தான அபான முத்திரயினுடமகிமை
சங்கையுடன் கண்டுசிவ யோகஞ்செய்யே"

- தன்வந்திரி வைத்தியம் 1000 -

மேலே படத்தில் உள்ளவாறு அபான முத்திரையை இரு கைகளிலும் செய்து, கண்களை மூடிக் கொண்டு மனக்கண்ணால் புருவ மத்தியைப் பார்த்து ”கிலி” என்ற மந்திரத்தை மனதிற்குள் செபித்துக் கொண்டு தியானம் செய்ய, பூரணமான சிவயோகமும், வேத மயமான சிவயொகமும் சித்தியாவதுடன் பிரம்மன், சரசுவதி அருளும் சித்தியாகும் என்கிறார்.

நாளைய பதிவில் சுவகரண முத்திரை பற்றிய விவரங்களுடன் சந்திக்கிறேன்.
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

13 comments:

yuvaraj Anand said...

மிக்க நன்றி, மேலும் தொடருங்கள்.

prince said...

தினமும் செய்து பார்க்கப்போறேன்!

அருட்சிவஞான சித்தர் said...

புகைப்படத்துடன் கூடிய முத்திரைகளின் விளக்கங்கள் நன்றாக உள்ளது.
முந்தைய பதிவிற்கு திரு. ரமேஷ் அவர்களின் கருத்துரைக்கு தாங்கள் அளித்துள்ள பொறுமையான பதில் தங்களின் உயரிய மனப்பான்மையை காட்டுகின்றது.
தொடருங்கள்.

Ramesh said...

@அருட்சிவஞான சித்தர்
அடேயப்பா! என்னை வெற்றிகொண்டதில் உங்களுக்கு எவ்வளவு சந்தோசம். அவரிடம் நான் மேற்போர்க்காக தான் கேட்டேன், அவர் இடுகையில் //"முத்திரைகள் பற்றிய இந்த தொடர் அமோக வரவேற்பினை பெற்றிருக்கிறது"//, என்று போட்டதை பார்த்தவுடன்,போட்ட கருத்து அது. அது தேவை இல்லாதது என நினைத்தேன். நன்றி சித்தரே.

அருட்சிவஞான சித்தர் said...

@ ரமேஷ் அவர்களுக்கு
உங்களை வெற்றி கொள்வது என் நோக்கம் அல்ல. உங்களது மனம் புண்படவேண்டும் என்று நான் கருத்து கூறவில்லை. தோழியின் பதிலைக்குறித்துதான் நான் கருத்துரை இட்டேன்.
மன்னிக்கவும்.

curesure Mohamad said...

lசகோதரி ..
நீங்கள் கூறியுள்ள யோனி முத்திரை ..சரியானது என்று எனக்கு படவில்லை ..யோனி முத்திரையில் யோனியை போன்ற வடிவம் வரும் ..
எனக்கு வர்மம் சொல்லிகொடுத்த ஆசான் யோனி முத்திரையை வேறு விதமாக சொல்லிகொடுதுள்ளார் ..
தங்களது பார்வைக்காக ..http://www.fineartbyirenevincent.com/images/yoni6x7.jpg,
http://www.hathayoga.co.za/yoni_mudra.gif,
http://farm1.static.flickr.com/208/475458961_03d2106f5e.jpg-
இவைகளில் ஒன்று நான் எனது ஆசான் சொல்லிகொடுத்தது ..
நீங்கள் கொடுத்துள்ள படத்திற்கான ஆதாரம் சொன்னால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் ..

தோழி said...

@curesure4u
இதே சந்தேகம் பலருக்கும் இருக்கிறது. தன்வந்திரி தனது “தன்வந்திரி வைத்தியம் 1000” என்கிற நூலில் 586 வது பாடலில் யோனி முத்திரை பற்றி பின்வருமாறு விளக்கியிருக்கிறார்.

"தானென்ற யோனி முத்திரையைக் கேளு
சங்கையுடன் சொல்லுகின்றேன் அங்குட்டமோடு
பூனென்ற கனுட்டிகைநுனி விரல்படவே வைத்தால்
தெனென்ற யோனி முத்திரயுமாச்சு மைந்தா
செம்மையுடன் முத்திரையைத் தீர்க்கம்பண்ணி
ஊனென்ற றீங்கென்றே மனதிற்கொண்டு
உறுதியுடன் தான்செபிக்க தெவதைகள் சித்தே"

இதன் அடிப்படையில்தான் அந்த படத்தினை பதிவிட்டேன். தவறேதும் இருப்பின் விளக்கிட வேண்டுகிறேன்.

curesure Mohamad said...

சகோதரி ..நீங்கள் சொன்ன பாடலில் ஒரு கை என்று எங்கே வருகிறது ..இரண்டு கைகளையும் அருகில் வைத்து நீங்கள் பாட்டில் சொல்வது போல் செய்தால் யோனியின் உருவம் வருமே ..?

தோழி said...

@curesure4u
அடிப்படையில் யோக முத்திரைகளும், மருத்துவ முத்திரைகளும் வெவ்வேறானவை என்பது என்னுடைய புரிதல்....தவறிருப்பின் விளக்கிட வேண்டுகிறேன்.

தோழி said...

@curesure4uஉங்களுடைய கூற்றின் சாத்தியத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன்.ஆனால் தன்வந்திரி தனது நூலின் 569 பாடலில் முத்திரைகளை செய்வதைப் பற்றி பின்வருமாறு கூறுகிறார்.

"சுகமான முத்திரையைச் சொல்லக் கேளு
ஆதியான முத்திரையை யார்தான் காண்பார்
குறியறிந்து ஆறுவகை முத்திரையைப் பெற்று
நாட்டமுடன் ஆறுவகை முத்திரையை மைந்தா
இருகையிலும் தனிதனியாய் விரல் கொண்டு
நீமகனே ஆறுவகை முத்திரையைச் சாற்றே"

இதன் அடிப்படையில் பார்க்கும் போது மேலே இருக்கும் படம் சரியானதாக இருக்கும் என்பது எனது தெளிவு...

curesure Mohamad said...

@தோழிசகோதரி ...நீங்கள் சொல்வது போல் மருத்துவ முத்திரையும் ,யோக முத்திரையும் வெவ்வேறு தான் ..
உதாரணதிற்கு..முத்திரைகளை செய்வது ஒன்று போல தோன்றினாலும் முத்திரகளை செய்த பின் அவைகளை வைக்கும் இடம் பற்றி பல விளக்கங்கள் உள்ளன ..அவைகளில் நாபி நோக்கி ..நாபியை குவித்து என்று விளக்கங்கள் பாடல்களில் விளக்கங்களை பெற்றுள்ளேன் ..

தனித்தனியாய் விரல் கொண்டு என்பதால்(உங்களது ஆதாரப் பாடல் ) ......இரு கைகள் சேர்ந்திருக்க கூடாது என்பதில்லை ..

வாழ்த்துக்கள் ..

THIRUMAL said...

@curesure4u

Achyut Babu said...

aasiriyare...
apan mudira patri naan matra puthagangalilum matrum inaiyathalathilum thedi padithullen. Anaal avarril muthirai vadivam veru vidhamaga ulladhu. adhaavadhu modhira viral, nadru viral matrum peruviral munaigal serndhirukka vendum matrum sundu viral aatkatti viral neetirukka vendum endru. en iyathiruku vilakkam alikkavum

Post a Comment