திருவினி முத்திரை...!

Author: தோழி / Labels: ,

முத்திரைகள் பற்றிய இந்த தொடர் அமோக வரவேற்பினை பெற்றிருக்கிறது. கடந்த மூன்று தினங்களாய் முன்னெப்போதும் இல்லாத வகையில் பாராட்டி மின்னஞ்சல்கள் வந்திருக்கிறது. அத்தனை அன்பு உள்ளங்களுக்கும் எனது பணிவான நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். நேரமின்மையினால் தனித்தனியே பதில் அனுப்பிட இயலாததால், தயவு செய்து யாரும் தவறாக எண்ணிட வேண்டாம்.

மிக முக்கியமாக, பலரும் கேட்டுக் கொண்ட படி இந்த யோக முத்திரை பதிவுகளைத் தொடர்ந்து தேக முத்திரைகளைப் பற்றி தனியே விவரமாய் பகிர்ந்து கொள்கிறேன். இன்றைய பதிவில் யோக முத்திரை வரிசையில் மூன்றாவதும், மிக முக்கியமானதுமான “திருவினி” முத்திரையைப் பற்றி பார்ப்போம்.தன்வந்திரி தனது ”தன்வந்திரி வைத்தியம்1000” என்ற நூலில், திருவினி முத்திரையின் மகத்துவம் பற்றி பின்வருமாறு கூறுகிறார்.

"காணவே திருவினி முத்திரையைக் கொண்டு
கருணையுடன் வங்கென்று தியானஞ்செய்யில்
பூணவே ருத்திரர் முதல் சகல செந்தும்
பூலோக ராசரோடு வசியமாகும்
தோணவே சந்தான சவுபாக்கியம்
சுத்தமுடம் ஐந்தறிவுஞ் சித்தியாகும்
பேணவே ருத்திரியும் சித்தியாகும்
பிலமான திருவினியால் சித்தியாமே"

- தன்வந்திரி வைத்தியம் 1000 -

மேலே படத்தில் காட்டியுள்ளவாறு திருவினி முத்திரையினை இரு கைகளிலும் அமைத்து, கண்களை மூடி, மனதினை ஒருமுகப் படுத்தி மனக்கண்ணால் புருவ மத்தியை கவனித்து பார்த்து ”வங்” என்ற மந்திரத்தை மனதிற்குள் செபித்துக் கொண்டு தியானம் செய்ய ருத்திரன் முதலான அனைத்து தெய்வங்களுடன், பூலோக அரசர்களும் வசியமாவதுடன் புத்திர பாக்கியமும், ஐந்தறிவும், உருவத்தை மாற்றும் தன்மையும் சித்திக்கும் என்கிறார்.

யோக்முத்திரை வரிசையில் மூன்றாவதான இந்த முத்திரையை பிரம்ம முகூர்த்தத்தில் ஏழு நிமிடங்கள் செய்திடல் வேண்டும்.

நாளைய பதிவில் “யோனி முத்திரை”, மற்றும் ”அபான முத்திரை” பற்றி பார்ப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

18 comments:

yuvaraj Anand said...

நன்றி, மிக சிறப்பு, தொடருங்கள் மேலும்.

Shiva said...

படங்களுடன் விளக்கங்கள் ! - அருமை தோழி.

ஹேமா said...

தொடர்ந்தும் வாசிக்கிறேன்.எழுதுங்கள் தோழி !

ramesh said...

என்ன தான் முத்திரைகள் நீங்கள் சொன்னாலும், இது புத்தகத்தில் கூட பார்க்கலாம். நீங்கள் இதை கொஞ்சம் விவரித்து, தியான முறைகளையும் சேர்த்து போட்டு இருக்கீங்க. அனால், இதெல்லாம் படிக்க வேண்டுமானால் சுவாரசியமாக இருக்கலாம். இதை முறையாக செய்ய குரு முகமாக பயில்வது நன்று. இதில் நீங்கள் சொல்லியுள்ளது போல் "வங்" என்று ஒருவரும் தியானம் செய்யப்போவதில்லை. என்னவோ, முத்திரையை நீங்கள் தான் கண்டு பிடித்தது போல் பெருமைப் பட்டு கொள்கறீர்கள்

தோழி said...

@ramesh

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி. அநேகமாய் தாங்கள் முதல் முறையாக இந்த பதிவுகளை வாசிக்கிறீர்கள் என நினைக்கிறேன்.

அழிந்து வரும் பழம் தமிழ் சித்தர்களின் தகவல்களை மின் ஊடகத்தில் பகிர்ந்து கொள்ளும் ஒரு முயற்சிதான் இந்த பதிவுகள்.இதை இந்த வலைமனையின் முதலும் கடைசியுமான நோக்கம் அது மட்டுமே...

எனது கண்டு பிடிப்புகள் இவை என எங்கேயும் நான் பெருமை அடித்துக் கொண்டதும் இல்லை.அதற்கான அவசியமும் எனக்கு இல்லை.

மேலும் இவற்றை பழக நினைப்பவர்கள் குருமுகமாக மட்டுமே பழகிட வேண்டும், அதுவே சிறப்பு என்பதை முந்தைய பல பதிவுகளில் குறிப்பிட்டு இருக்கிறேன்.தங்களுக்கு நேரமும்,பொறுமையும் இருப்பின் பழைய பதிவுகளை வாசித்திடுமாறு வேண்டுகிறேன்.

ramesh said...

@தோழி
உங்கள் பதிலை நான் எதிர்பார்கவில்லை. பதிலலைத்தமைக்கு மிக்க நன்றி. உங்கள் வலைப்பகுதி மிக நன்று. நான் இந்தமாதிரியான தளத்தை நான் வரவேற்கிறேன். உங்கள் முயற்சி தொடரட்டும். சித்தர்களின் கூரிய நோக்கம் தன்னை அறிதல் என்பதிலேயே இருந்தது. அதற்க்கான பாதையில், உயிரை வளர்த்துக்கொள்வத்தின் பொருட்டே இதெல்லாம். உங்கள் தளத்தில், தன்னை அறிதல் பற்றிய இடுகைகள் கொஞ்சம் குறைவாகவே காணப்படுகின்றன. வெறும் சுவாரசியமான தொகுப்புகளே அதிகம் பார்க்கிறேன்.இரண்டையும் சரி சமமாக கையாள வேண்டுகிறேன். நன்றி.

jaya said...

ungal valyvpaguthe nice . naagal entha thagaval eallam endha bookstal la pooi thyduoom house la eerun du koonday padythu vedukeerom. nandree,nandree.

holistic said...

sir I am not able to see the picture of tiruvini mtuththirai. kindly load the picture

A.Gowtham Ram said...

ithil ulla anaithum yenakku migavum pidithu irukirathu thozhi>>>>>>> nandri

raja vijay said...

அருமை.

raja vijay said...

அருமை.

raja vijay said...

அருமை..

zakeer hussain said...

super arumai..toli

zakeer hussain said...

arumaiyana padippu tholi nandry

zakeer hussain said...

arumaiyana padippu tholi nandry

Mythili Deenadayalan said...

I like this.How can i findout guru to learn this?

Mythili Deenadayalan said...

I like this . How can I find the guru to learn this?

thalavai samy said...

paraveli sagothiri

muthirai payichigali first la erunthu sollama
ivan koncha nalaga seithu varukiren namaigal theriyuthu

pls

samytut@gmail.com

Post a Comment