மோகினி முத்திரை!..சோபினி முத்திரை!

Author: தோழி / Labels: ,

யோக முத்திரைகள் வரிசையில் இன்று “மோகினி முத்திரை” மற்றும் “சோபினி முத்திரை” பற்றி பார்ப்போம். பிரம்ம முகூர்த்தத்தில் இந்த முத்திரைகளை ஒவ்வொன்றையும் தலா ஏழு நிமிடங்கள் செய்திடல் வேண்டும்.

மோகினி முத்திரை"ஆமப்பா மோகினி முத்திரையைச் செய்து
அருள் பெருக்கும் புருவமதில் மனக்கண்சாற்றி
ஓமப்பா யகாரமுடன் உகாரங்கூட்டி
உத்தமனே மகாரமென்ற மவுனத்தேகி
காமப்பால் கானற்பால் சித்தியாகும்
கருணைதரு மனேன்மணியுஞ் சித்தியாகும்
வாமப்பால் பூரணமுஞ் சித்தியாகும்
மகத்தான நால்பதமுஞ் சித்தியாமே"

- தன்வந்திரி வைத்தியம் 1000 -

மேலே படத்தில் உள்ளது மோகினி முத்திரை, இந்த முத்திரையினை இரு கைகளிலும் வைத்துக் கொண்டு கண்களை மூடி, மனக் கண்ணால் புருவ மத்தியைப் பார்த்து ”ஓம்” என்ற மந்திரத்தை மனதிற்குள் செபித்துக் கொண்டு தியானம் செய்ய நான்கு பாதங்களும், பரம்பொருள் பற்றிய தெளிவும், கருணையுள்ள மனோன்மணித் தாயின் அருளும் சித்தியாகும் என்கிறார்.


சோபினி முத்திரை
"பாரப்பா சோபினி முத்திரையைச் செய்து
பக்தியுடன் அம்மென்று தியானஞ்செய்ய
நேரப்பா சொல்லுகிறேன் சர்வலோகம்
நிசமான ஆதாரஞ் சித்தியாகும்
மேரப்பா மேருகிரி தீபஞ்சித்தி
மெய்யான மயேச்வரனும் மீச்வரியுஞ்சித்தி
காரப்ப சோபினி முத்திரையினாலே
கண்ணடங்கா போதசிவ யோகமாமே"

- தன்வந்திரி வைத்தியம் 1000 -


மேலே படத்தில் இருப்பது சோபினி முத்திரை. இந்த முத்திரையை இரு கைகளில் வைத்துக் கொண்டு கண்களை மூடி கொண்டு மனக்கண்ணால் புருவ மத்தியைப் பார்த்து ”அம்” என்ற மந்திரத்தை மனதிற்குள் செபித்துக் கொண்டு தியானம் செய்ய நிஜமான ஆதாரப் பொருளை உணர்வதுடன், மகேச்வரன், மகேச்வரி அருள் கிடைப்பதுடன், சிவயோகம் சித்திக்கும் என்கிறார்.

நாளைய பதிவில் ”திருவினி முத்திரை” பற்றி விரிவாய் பார்ப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

13 comments:

Soundarraju said...

நல்ல பயனுள்ள பதிவு நன்றி !!!!

yuvaraj Anand said...

நன்றி மேலும் தொடருகள்

profit500 said...

simply super !!!

Unknown said...

நன்றி தொடருங்கள் உங்களது நற்பணியை.

அண்ணாமலை..!! said...

செய்து பார்த்து விடுகிறோம்!
தங்களது ஆக்கங்களுக்கு மிக்க நன்றிகள்!

Balaji Palamadai said...

நான் பல முத்திரைகளை பற்றி கேள்வி பட்டு இருக்கிறேன் ஆனால் முத்திரையும் அதற்கான பிரயோக மந்திரத்தையும் இன்று தான் அறிந்தேன்.மிக சிறந்த பதிவு இது.

curesure Mohamad said...

நல்ல விஷயம் ..வாழ்த்துக்கள் ..வளர்க உங்களது சேவை ..

ceylonstar said...

very good. thanks for sharing.

Ramesh said...

வாசகர்களே! இந்த முத்திரைகளை எல்லாம் குருவின் துணையோடு செய்யுங்கள்.அனால், இவர் கூறியது போல், மந்திரத்தை ஜெப்பிக குருவை நாடுங்கள். இவை படிக்க மட்டுமே சுவாரசியம்.

yogananda said...

இந்த அனுபவம் ஏற்படுவ‌துண்டு,
அர்த்தம் அறிந்தேன் இப்பொழுது
(சோபினி முத்திரை. நன்றி.

Unknown said...

intha muthiraigalai padmasanthil amarnthu kondu kaigalai thooki kondu seiya venduma

Anonymous said...

செய்து பார்த்த போது, புருவ மத்தியில் ஏதோ ஒரு நெருடல் நடக்கிறது.

charmvee said...

while doing muthraas.. my hand rest on lap or need to rest alone.. pls give me the exact posture..

Post a Comment