யோக முத்திரையில் விரல்கள்...

Author: தோழி / Labels: ,யோக முத்திரைகளை செயல்படுத்துவதில் விரல்களே பிராதானமாக உள்ளது. தன்வந்திரி தனது “தன்வந்திரி வைத்தியம்1000” என்ற நூலில் பின்வருமாறு விளக்குகிறார்.

"முத்தியுள்ள கரத்தின் விரல் மகிமைதன்னை
முக்கியமுடன் சொல்லுகிறேன் நன்றாய்க்கேளு
பத்தியுள்ள அங்குட்டம் பெருவிரலால் நிற்கும்
பதிவாக அடுத்த விரல் தர்ச்சினையாமைந்தா
சித்தமுள்ள நடுவிரல்தான் மத்திமையாநிற்கும்
திறமான பவுத்திரந்தான் அனாமிகையாய்நிற்கும்
சுத்தமுள்ள சுண்டுவிரல் கனுட்டிகையாய்நிற்கும்
சுகமாக இதையறிந்து முத்திரையுஞ் செய்யே"

- தன்வந்திரி வைத்தியம் 1000 -

விரல்களின் மகிமையை முக்கியமாக சொல்கிறேன் நன்றாகக் கேளு என்று விரல்களின் மகிமையை கூறத் தொடங்குகிறார்...

பெருவிரலை ”அங்குட்டம்” என்றும், அதற்கு அடுத்த விரலை ”தர்ச்சினை” என்றும், நடுவிரலை ”மத்திமை” என்றும், பவுத்திர விரலை ”அனாமிகை” என்றும், சுண்டு விரலை ”கனுட்டிகை” என்றும்...இவற்றை அறிந்து முத்திரையை செய்யவேண்டும் என்கிறார்.

கட்டை விரலானது நெருப்பையும், சுட்டு விரலானது காற்றையும், நடுவிரவிரலானது ஆகாயத்தையும், மோதிர விரலானது நிலத்தையும், சுண்டு விரலானது நீரையும் குறிக்கிறது என்றும் குறிப்பிடுகிறார். இவற்றை தெளிவாக உணர்ந்தே முத்திரைகளைப் பயன்படுத்த தொடங்க வேண்டும் என்கிறார்.

அத்துடன் இவற்றை பிரம்ம முகூர்த்தத்தில், தூய, அமைதியான அறையினில் நிமிர்ந்த நிலையில் அமர்ந்து, உடலை தளர்த்தி, இரண்டு கைகளையும் முழங்கால்கள் மீது தளர்வாய் வைத்து முத்திரை பிடித்து அதற்கான மந்திரங்களை மனதில் செபித்தல் வேண்டும்.

அத்துடன் இந்த முத்திரைகளை செய்ய தொடங்கும் போது...

"சித்தியுள்ள முத்திரைகள் ஆறுக்குந்தான்
சிவாயகுரு முத்திரையைச் சொல்லக் கேளு
பத்தியுடன் சொல்லுகிறேன் புருவ மத்தி
பதிவாக இருகரமும் ஒன்றாய்க் கூட்டி
சுத்தமுடன் லாடவிழி கண்ணின் நேரே
தொழுது மனம் நினைத்தபடி சுத்தமாக
முக்தியுடன் வரங்கொடுக்க வேண்டுமென்று
மோனமுடன் மனோன்மணியை தியானம்பண்ணே"

- தன்வந்திரி வைத்தியம் 1000 -

சித்தி பெற செய்யும் முத்திரைகளுக்கு மூலாதாரமாய் உள்ள சிவாய குரு முத்திரையைச் சொல்கிறேன் கேள் புருவ மத்திக்கு சமீபமாக இருகரங்களையும் ஒன்றாகக் குவித்து கண்களை மூடிக் கொண்டு முக்தியுடன் வரங்கள் வேண்டும் என்று மனதால் மனோன்மணி தாயை வேண்டிக் கொண்டு அந்த ஆறு முத்திரைகளையும் செய்ய தொடங்க வெண்டும் என்று சொல்கிறார்.


இனி வரும் பதிவுகளில் மற்ற ஆறு முத்திரைகளையும், அவற்றை செய்யும் முறைகளைப் பற்றிப் பார்க்கலாம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

11 comments:

yuvaraj Anand said...

மிக்க நன்றி, தொடருங்கள் மேலும்.

வேல் said...

சாகாமல் இருப்பது நெடிது நாள் நோயின்றி வாழ்தல் இதைப்பற்றி தாங்கள் அறிந்திருக்கிறீர்களா? மேலும் சித்தர்களின் ரகசியங்களான வான மண்டல சாஸ்திரம், பிண்டத்திற்குள் இருக்கும் சக்கரங்கள், அண்டத்தில் கிரக நிலைகள் பிண்டத்தில் எவ்வாறு இடைவிடாது வேலை செய்கிறது என்பதை பற்றி கூற முடியுமா? சிவானந்தரின் வாசி பற்றி தெரியுமா?

அருட்சிவஞான சித்தர் said...

நன்றாக உள்ளது. தொடருங்கள்.

curesure4u said...

சகோதரி ..மிக நன்றி ...சூப்பர் ..கட்டை விரல் நெருப்பையும் ..இதற்குள்ள ஆதாரத்தையும் சேர்த்தால் நன்றாக இருக்கும் ...

Anonymous said...

பயனுள்ள பதிவு
நன்றி

knm said...

மிக்க நன்றி உங்களது சேவை மேன்மேலும் தொடர வாழ்த்துக்கள். படித்து அறிவதோடு நில்லாமல் அதை எங்களோடும் பகிர்ந்துகொள்வதற்கு மீண்டும் நன்றிகள்.

knm said...

நன்றி - மேன்மேலும் படிக்க ஆவலாக உள்ளேன்.

THALAVAI SAMY said...

மேலே சொன்ன ஆறு முத்திரைகள் என்ன என்ன என்று சொல்லலாமா
thalavai samy
samytut.blogspot.com

Bairavam said...

mika nandri

Bairavam said...

mika nandri, Sivayanama

chandra sekaran said...

இதை எல்லோரும் தங்கள் கணினியில் save செய்து வைத்துக் கொள்ளும் வசதி இல்லாவிட்டால், இந்தப் பதிவால் அதிக பயன் இருக்காது என்றே தோன்றுகிறது. ஒவ்வொரு முறையும் இணைய பக்கத்துக்கு வந்து பார்த்து கற்பதைவிட, பதிவை word file ஆக பதிவு செய்து வைத்துக் கொண்டால் offline-ல் கூட அதைப் பார்த்து, முயற்சி செய்து பயன்பெறலாம்.

Post a Comment