யோக முத்திரை ஓர் தெளிவு!

Author: தோழி / Labels: ,

இந்தப் பூமியானது பஞ்ச பூதங்களின் கூட்டால் உருவாகியது என்பதையும், அந்த பஞ்ச பூதங்களே மனித உடம்பாகவும் உள்ளது என்பதையும் முதன் முதலில் உலகிற்கு உரைத்தவர்கள் சித்தர்களே! . இதனையே அவர்கள் "அண்டத்தில் உள்ளதே பிண்டத்திலும் உள்ளது" என்று குறிப்பிட்டனர்.

மனித உடலானது ஒரு குறிப்பிட்ட விகித அளவில் பஞ்ச பூதங்களின் கலவையாக உள்ளது. இந்த மூலங்களை உடம்பிலிருந்து வேறு படுத்த முடியாது. இந்த பஞ்சபூத கலவையின் விகித அளவுகள் மாறது பேணப்படுவதன் மூலமே யோகம் சித்திக்கும் என்று சொல்லும் சித்தர்கள். அந்த விகித அளவுகளில் ஏற்படும் மாற்றங்களே மனிதர்களுக்கு உடல் நலிவையும், நோயையும் உருவாக்குகின்றன என்கின்றனர்.

இந்த பஞ்ச பூத கலவையின் விகிதாசாரங்களை மாற்றம் அடையாது ஒரு சீரான சம நிலையில் வைத்திருக்க சித்தர்களால் அருளிய முறைகளில் ஒன்றுதான் முத்திரைகளாகும். இவற்றை இரண்டு வகைகளாக வகுத்துள்ளனர் ஒன்று ”யோக முத்திரைகள்” மற்றயது மருத்துவ முத்திரைகள் எனப்படும் ”தேக முத்திரைகள்”. இந்தத் தொடரில் நாங்கள் பார்க்கப் போவது யோக முத்திரைகள் பற்றியே...!

தன்வந்திரி தனது ”தன்வந்திரி வைத்தியம் 1000” என்கிற நூலில் யோக முத்திரைகள் பற்றி பின்வருமாறு கூறுகிறார்.

"சுத்தமுள்ள முத்திரைகள் தன்னிலேதான்
சுகமான ஆறுவகை முத்திரைகள் நன்று
பக்தியுடன் ஆறுவகை முத்திரையினாலே
பகுத்தறிந்து ஆதார தெரிசனைகள் பெற்று
வித்தான பிறவிதனை நன்றாய் நீக்கி
வேதாந்த பூரணமாய் விளங்கு முக்தி"

- தன்வந்திரி வைத்தியம் 1000 -

யோக முத்திரைகளில் பல வகை இருந்தாலும் தனித்துவமான சிறந்த முத்திரைகள் ஆறு உள்ளன என்றும், இவற்றை தவறாது செய்பவர்களுக்கு பிறவித் துன்பம் நீங்கி வேதாந்த பூரணமாய் முக்தி நிலை கிட்டும் என்கிறார்.

இந்த யோக முத்திரைகளை வரிசை தவறாமல் பிரம்ம முகூர்த்தத்தில், ஒரு முத்திரைக்கு ஏழு நிமிடங்கள் வீதம் மொத்தமாக நாற்பத்தியிரண்டு நிமிடங்கள் செய்தல் வேண்டு என்கிறார். இந்த முத்திரைகளை செய்வதில் கை விரல்களே அதி முக்கியமானது என்று குறிப்பிடுகிறார்.

விரல்களின் மகிமையையும், முத்திரைகளை செய்வதன் நுட்பத்தினையும் நாளைய பதிவில் பார்ப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

8 comments:

yuvaraj Anand said...

இந்த தொடர் மிக பயன் உள்ளது, தெவிவாக கூறுங்கள், அனைவரும் பயன்படுத்த உதவியாக இருக்கும்.இந்த முத்திரைகளை யோக + மருத்துவம் இரண்டும் கூறுகள்.மிக்க நன்றி தோழி.

அருட்சிவஞான சித்தர் said...

யோக முத்திரையின் விபரங்களை எதிர்பார்க்கின்றேன் தோழி!.

Shiva said...

முத்திரைகளை வரை படங்களுடன் தெரிவியுங்கள் தோழி

prince said...

mm

ஹேமா said...

சில முத்திரைகள் இந்தப் பிறவியியிலேயே சில நோய்களைத் தீர்க்குமாமே தோழி !

BGN said...

அன்புள்ள தோழி

இந்த நாட்களில் எங்கு பார்க்கினும் சர்க்கரை நோய் காரணமாக அநேகமான மக்கள் அவதி படுகிறார்கள் .ஏதேனும் முத்திரை இருக்குமா அல்லது வேறேனும் வழி சொல்லவும் .அனைவருக்கும் உதவியாக இருக்கும்

பாலா

Unknown said...

i want to know more about siddhargal and their treetments. can u post useful informations to my mail i.d.

senthil said...

The photo of Yoni Mudra is different from the ones in other websites. The mudra shown in other sites are entirely different from the one showed by you. Can you explain pls.. thanks

Post a comment