உதவிட வேண்டுகிறேன்....!

Author: தோழி /

நண்பர்களே!

அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி தின வாழ்த்துக்கள்.

எனது தாய் வழிப் பாட்டனார் தனது வாழ்நாள் சேகரிப்பாக, எனக்கு விட்டுச் சென்ற ஆயிரக் கணக்கான சித்தர்களின் நூல்கள் அழிவதில் இருந்து தடுக்கும் பொருட்டு அவற்றை மின்னூடகத்தில் பாதுகாக்கும் முயற்சியாகவே இந்த வலைப் பூவினை துவங்கினேன். ஆனால் கடந்த எட்டு மாதங்களில் கிடைத்த ஆசிகளும், ஆலோசனைகளும், ஊக்கமும் என்னை உற்சாகத்தின் விளிம்பில் அமர்ந்து பதிவுகளை எழுதத் தூண்டியது என்பதுதான் உண்மை. இத்தனை தூரம் இந்த பதிவு சென்றடையும் என கனவிலும் நான் நினைத்தது இல்லை.

இந்த நிலையில் நண்பர் ஒருவர், எனது இந்தப் பதிவுகள் இன்னும் பல லட்சம் தமிழர்களை சென்றடைவது அவசியம், எனவே இந்த வலைப்பூவினை வாசிக்கும் நண்பர்களிடம் இந்த வலைப் பூ பற்றி மற்றவர்களை அறிமுகப் படுத்தக் கூறுங்கள் என கூறினார். மேலும் சக பதிவர்கள் இந்த வலைப் பூவினை தங்கள் பதிவில் தொடுப்பு கொடுப்பதன் மூலம் மேலும் பலருக்குப் போய்ச் சேர்ந்திட செய்யலாம் எனக் கூறினார். இது தொடர்பான நிரல் ஒன்றினையும் தந்திருக்கிறார். அதனை இத்துடன் இனைத்திருக்கிறேன்.

என்னோடும், என் சார்ந்த சில நூறு நண்பர்களோடும், இந்த பதிவின் தகவல்கள் முடங்கி விடுவதில் எனக்கும் விருப்பமில்லைதான்.....எனவே விருப்பம் உள்ள நண்பர்கள் தங்கள் பதிவில் அந்த நிரலை இனைப்பதன் மூலம் இந்த வலைப்பூ மேலும் பலருக்கும் சென்றடைய உதவிட வேண்டுகிறேன்.


கீழே பெட்டியில் இருக்கும் நிரலை நகலெடுத்து தங்கள் பதிவில் இனைத்திடலாம்.

code


என்றும் நட்புடன்

தோழி
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

14 comments:

ஜோதிஜி said...

தோழி அவர்களுக்கு

தங்களின் பயம் அவஸ்யம் இல்லாதது. தற்போதைய விஞ்ஞான உலகில் இரண்டு கருத்துக்கள் உண்டு,

எல்லாமே மூடநம்பிக்கை,
எதையும் நம்பக்கூடாது,

காரணம் நம்பிக்கை சார்ந்த அத்தனைவிசயங்களும் பலரின் பொறுப்பற்ற தன்மை காரணமாக இவ்வாறு தான் மேலும் மேலும் கெட்ட பாதையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது,

இந்த வலைப்பூ என்பது உங்களின் அடுத்த மூன்று தலைமுறைக்கும் அப்பாலும் இணையம் இருக்கும் வரையிலும் எவருக்கோ பயன்படும்,

தொடரருங்க........

ஹேமா said...

பயப்பட வேண்டாம் தோழி.உங்கள் பதிவை நிறையப்பேர் வாசிக்கிறாங்க.

jagadeesh said...

இது பயம் அல்ல. சித்தர்கள் கூறிய நெறிகளும், அதன் மகத்துவமும் குறுகிய வட்டத்துக்குள் முடிந்து விட கூடாது என்ற ஆதங்கம் தான். "யாம் பெற்ற இன்பம் வையகமும் பெருக" என்ற கோணத்திலையும் எடுத்துக்கொள்ளலாம். சில பேர் இது பற்றி தேடல் இருக்கும், அவர்களுக்கு இந்த தளம் உதவட்டும்.. அவர் கூறியவாறு, நம்மளால் முடிந்த உதவி செய்வோம். இது அவசியம்.

மயில் said...

உங்கள் பதிவு வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஆரூரன் விசுவநாதன் said...

அன்பிற்குரியீர்,

வணக்கம். உங்கள் உயர் பண்பிற்கு வாழ்த்துக்கள். உங்கள் இடுகைகளை மின் தமிழ் குழுமத்தில் பதிவேற்றினால் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

http://groups.google.com/group/minTamil

http://www.tamilheritage.org

ஸ்ரீ said...

என்னால் முடிந்த அளவு உதவுகிறேன் தோழி...

teenmoon5 said...

i cant copy that link...

தோழி said...

@teenmoon5

தவிர்க்க இயலாத சில காரணங்களினால் இந்த பதிவில் நகலெடுக்கும் வசதி தடை செய்யப் பட்டிருக்கிறது. தற்போது எனது மற்றொரு பதிவான http://manakanavugal.blogspot.com/ இந்த நிரல் இருக்கிறது, பயன் படுத்திக் கொள்ளலாம். சிரமத்திற்கு வருந்துகிறேன்.

அருட்சிவஞான சித்தர் said...

சித்தர்கள் இராச்சியம் அனைவரையும் சென்றடைய நானும் ‍கைகொடுக்கின்றேன் தோழி!
அருட்சிவம் வலைப்பதிவில் அதற்குண்டான தொடுப்பு நிரலை இணைத்துவிட்டேன்.
சென்று பாருங்கள்.
http://www.siddharkal.blogspot.com

balaji said...

இதை எனது வலை தலத்தில் சேர்த்து விட்டேன். இறை அருள் இருக்க கவலை வேண்டாம். உங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறேன்.

siva said...

great...

dr siva said...

vungal aanmeega panigal valarattum.---by dr siva my email id:lionrssv@gmail.com

alwarexpress said...

nichayam siththarkal rachiyam anaivaraiyum senradayum.siththarkal pokkisathai ilavasamaga valangiyamaikku nandri.

alwarexpress said...

pokisathai ilavasamaga thanthamaikku nandri

Post a Comment