விளைச்சலை பெருக்கும் சித்து!

Author: தோழி / Labels: ,

புலிப்பாணி சித்தர் தனது “புலிப்பாணி பலதிரட்டு சூத்திரம்” என்கிற நூலில் விளைச்சலை அதிகரிக்கும் முறை ஒன்றினை அருளியிருக்கிறார். இதனை செய்வதன் மூலம் விவசாயிகள் தங்கள் நிலத்தில் விளைச்சலை அதிகரிக்க முடியும் என்கிறார்.

ஆமாப்பா நாயுருவி செடியை நோக்கி
அப்பனே ஸ்ரீம் என்று லட்ச மோதி
தாமடா காடுசெந்நெல் கரும்பு வாழை
தயவான கொடிக்காலுந் தென்னந்தோப்பும்
நாமதா ஐங்கோலக் கருவும் பூசி
வளமாகக் கலசத்தில் புதைத்தாயானால்
நாமடா இதுகளெல்லாம் மதிகமாகும்
நலமாக போகருட கடாட்சந் தானே "

- புலிப்பாணி -

நாயுருவிச் செடிக்கு ”ஸ்ரீம்” என்கிற மந்திரத்தினை ஒரு லட்சம் தடவைகள் ஓதி விட்டு அந்த செடிக்கு ”ஐங்கோலக் கரு*”வும் பூசி, அந்த செடியைப் பிடுங்கி ஒரு சுத்தமான பானைக்குள் வைத்து நன்றாக மூடி பின்னர் அதை காடு, செந்நெல் விளையும் வயல் , கரும்புத் தோட்டம், வாழைத் தோட்டம் போன்ற இடங்களில் புதைத்து வைத்தால் அங்கு நல்ல விளைச்சல் உண்டாகும்.இது தனது குருநாதர் போகர் அருளால் நடக்கும் என்கிறார் புலிப்பாணி சித்தர்.

* ஐங்கோல கரு என்பது ஒரு வகையான தாவரத்தில் இருந்து கிடைக்கும் பிசினில் இருந்து தயாரிக்கப் படுவது. இது கருமையான நிறத்தில் கூழ்போல மெழுகு பதத்தில் இருக்கும். இது எல்லா நாட்டு மருந்து/சித்த மருத்துவ கடைகளில் கிடைக்கும்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

6 comments:

Anonymous said...

ஐங்கோலக் கரு என்றால் என்ன ?

விஜய் said...

விவசாயம் அழிந்து போகும் நிலையில் இது மிகுந்த உபயோகமான தகவல் சகோ.

மிகுந்த நன்றி.

ஐங்கோல கரு என்றால் என்ன என்று தெரிய வில்லை

தெளிவுபடித்தினால் எனது விவசாய வலைப்பூவில் வெளியிடுவேன்.

www.agasool.blogspot.com

நன்றி

தோழி said...

@winmani
@விஜய்

ஐங்கோல கரு பற்றிய விவரங்களை தற்போது பதிவில் இனைத்திருக்கிறேன்.

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!

bala said...

inkola karu yenpadhu panchaboodham uruvana idam yenbadhu artham

Unknown said...

I like this new message.

Unknown said...

1 lakh times how to do in the same time or 48 days

Post a comment