ஜீவன் முக்தி என்றால்...!

Author: தோழி / Labels: ,

”சிவலோக பதவி”, “வைகுந்த பதவி”, “முக்தி அடைதல்” இவையெல்லாம் இறந்து போனவர்களை அடையாளப் படுத்தும் வார்த்தைகள் என்றே பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். உண்மை அதுவல்ல....

முக்தி அடைதல் என்பதன் தூய தமிழ் வடிவம் ”விட்டு விடுதலையாதல்” அல்லது ”வீடு பேறடைதல்” என்பதேயாகும். யோகத்தில் உயர் நிலையான சமாதி நிலைக்கு அடுத்த நிலைதான் இந்த முக்தி நிலை. இதனை மீண்டும் பிறவா பேரின்ப நிலை என்றும் சித்தர்கள் குறிப்பிடுகின்றனர்.

இறப்பிற்குப் பின்னர் முக்தி அடைதல் என்பது வெறும் வாய் வார்த்தை எனச் சொல்லும் சித்தர்கள், வாழும் காலத்தில், இந்த உடல் இருக்கும் போதே அத்தகைய பிறவா பேரின்ப நிலையினை அடைந்திட வேண்டும் என்கின்றனர்.

இந்த முக்தி நிலையை அடைய ஒரே வழி யோக மார்க்கம் என்று சொல்லும் சித்தர்கள், இந்த யோக உறுப்புக்கள் எட்டு நிலைகளைக் கொண்டதாக கூறியிருக்கின்றனர். அவை முறையே கடிவு (இமயம்), நோன்பு (நியமம்), இருக்கை (ஆசனம்), வளிநிலை (பிராணயாமம்), ஒருக்கம் (பிரத்தியாகாரம்), நிறை (தாரணை), ஊழ்கம் (தியானம்) , ஒன்றுகை (சமாதி) என்பதாகும்.

கொங்கணவர் தனது வாத காவியத்தில் முக்தி பற்றி இவ்வாறு சொல்கிறார்.

காணப்பா குருசொன்ன சாத்திரத்தின் படியே
கைமுறையாய் நடக்கிறதே விபரமென்பார்
பூணப்பா யெந்தெந்தக் காரியங்கள் வந்தும்
புகழாகத் தயக்கம் வந்தும் பிரமமென்றும்
தோணப்பா நிரந்தரமும் வேதாந்தம் பார்த்துச்
சொன்னமுறையாய் நிற்பதுவே விரதமாச்சு
ஆணப்பா நியமமென்ற பத்துஞ் சொன்னே
னறிந்திந்த விருபதையும் மறுட்டித்தேறே

- கொங்கணவர் -

குரு அருளிய யோக வழிமுறையின் படி நடப்பது தான் விரதம் என்பார்கள். இதன் வழி நிற்போர் எக்காரியம் வந்தாலும், எவ்வளவு தடங்கல் ஏற்பட்டாலும், அனுதினமும் தானே பிரம்மம் என்பதை உணர்ந்து தியானித்து வருவதே விரதம் ஆகும். இதுவே நியமம் என்ற பத்து வகை ஆகும். மற்றயது இயமம் என்று அழைக்கப்படும் பத்துவகை ஆகும். இயம,நியமமாகிய இந்த இருபதையும் முறையாக கடைப் பிடித்தாலேயே யோகத்தில் முன்னேற முடியும் என்று சொல்லும் இவர் தொடர்ந்து...

எறியிந்த விருபதையும் மநுட்டியாட்டால்
என்னசொல்வேன் சீவனில்லாச் சித்திரம் போலாம்
தேறியிந்த வடிப்படையை வைக்குமுன்னே
சிற்றெடுத்த சுழிகைக்கு மொக்குமொக்கும்
ஆறியிந்தக் காயசித்தி பண்ணுமுன்னே
யாயிரமாங் கலியுகத்தைக் கண்டதொக்கும்
மாறியிந்தச் சடத்தோடே முத்தி காணான்
மாண்டபின்பு முத்தியென்ற வாறுபோமே

- கொங்கணவர் -

இவ்விருபதையும் முறையாக கடை பிடிக்காதவன் ஜீவனில்லா சித்திரம் போலனவன். அத்தகைய செயல் முறையாக தொடங்கப்படும் எந்தக் காரியமும் பதியளவு நிறைவடைந்ததுக்கு சமானாகும் என்கிறார். அத்துடன் காய சித்தி செய்ய வெண்டும் என்று நினைத்தாலே ஆயிரம் கலியுகத்தை கண்டதற்க்கு சமனாகும் என்றும், இவ்வுடலுடன் இருக்கும் போதே முக்தி அடையாதவர்கள், இறந்த பின் முக்தி அடைவது என்பது வாயளவில் வார்த்தையாக ஆகிவிடும் என்கிறார்.

நாளைய பதிவில், வேளாண்மையில் விளைச்சலை பெருக்கும் ஜாலம் பற்றி பார்ப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

13 comments:

வானவன் யோகி said...

தங்களின் விளக்கங்கள் அறியார்க்கு விளக்குகள்..

பெரும்பாலும் தங்கள் பதிவுகளைப் படித்தாலும் பின்னூட்டமிட ஏனோ ஒரு தயக்கம்.(பதிவு இடவும்தான்)

சித்தர்களின் பாடல்களின் விளக்கங்கள் பொழிப்புரையாக உள்ளதாகத் தோன்றுகிறது.
பல பாடல்களின் விளக்கம் உலகியல் நோக்கே தெரிகிறது.இன்னும் ஆழ்ந்த,சுத்த சித்தாந்த உரையாகத் தோன்றவில்லை.

எனது அபிப்பிராயம் தவறு எனில் மன்னிக்கவும்....

தங்களின் சேவை போற்றற்குரியது....

தங்களுக்கு சித்தர்தம் நல்லாசி கிட்டட்டும்.....

ஹேமா said...

ஒவ்வொரு விஷயங்களும் சுவாரஸ்யம்தான்.
தொடர்ந்தும் வாசிக்கிறேன் தோழி.

sury said...

சித்தர்கள் குறித்து நீங்கள் எழுதுவதை நான் அவ்வப்பொழுது வந்து படிக்கிறேன்.
ராஜயோகத்தில் குறிப்பிடும் யமம், நியமம், ப்ரத்யாஹாரம், தாரணம், தியானம்
இவற்றினை சித்தர்கள் இயற்றிய பாக்கள் வழியே படிப்பது மனதிற்கு இதமாக உள்ளது.
தியான நிலையை அடைந்த ஒருவன் அதில் தன்னை நிறுத்தி, தன் ஐம்புலன்களையும்
ஒடுக்கி, தான் எனும்அகந்தைபாற் செல்லும் அறிவினை அகற்றி, புத்தியை நீக்கி, சித்தத்தைச்
சிவன் பாலே வைத்தாலே மட்டுமே அடுத்த நிலைதனை எட்டிப்பார்க்கவும் இயலும்.

உலகாயதமாக இருப்போர்க்குப் பெரும்பாலும் இது சாத்தியம் இல்லை தான். இருப்பினும்
தியான நிலை கடந்து சமாதிக்குச் செல்லும் வழிதனை அறிய நினைப்பதும், அறிய தலைப்படுவதும்,
வினைப்பயனே. அவன் அருளாலே அவன் தாள் அடைந்து என்கிறது தேவாரம்.

தியானம், சமாதியில் உண்டான இருவகையாவனையும் தொடர்ந்து சித்தர்கள் வாயிலாக நீங்கள்
தொடர்ந்து சொல்லவேண்டும்.

முதியவனின் ஆசிகள்.

சுப்பு ரத்தினம்.
http://vazhvuneri.blogspot.com

Premalatha said...

good. very interesting matter.

Premalatha said...

can you tell about 'Garudapuranam'?

bala said...

ungal anubhavathil therinthavaya idhu...pls ans me

bala said...

idhu ungal anubhavama illai padippa

Srinivasan Rajagopalan said...

Bala nanba, ungal anubavathil therindavaya idhu? Kelvikku thozhiyin saarbaaga badhil. Therindhu kolla palakkad vishayangal pahirndhavarkku nandri solli naamellam anubavathil kondu varaka paarpom. Solvadgu mukkiyam. Solvadhu yaaravadhu enbadhu alla. Dubai pogadha, naanum ungalukku angus eppadi pogadha vaendum endru solla mudiyum. Anubavam thani thani nabarudaiyadhu. End anubavam ungalukku kidaikkamal pogalaam. Aanaal adair vida periyar anubavam kidaikkamal vaayppu undu. Vazhikaatti palagai chennai endru kaattum. Aanal koodavae varadhu. Thozhi oru vazhikaatti palagai mTtumae. Payanam ungaludayadhu.

Chandrammohan Subramanian said...

@ Bala
Pls read Mr Srinivasan Rajagopalan's response to your question.

maheeji said...

nice thanks, mahendran

maheeji said...

nice thanks,
mahendran
maheeji@yahoo.co.in

elangonambirajan said...

all right om om om

elangonambirajan said...

om om om nama sivaya

Post a Comment