சொக்குப் பொடி தயாரிக்கும் முறை!

Author: தோழி / Labels: ,

இந்த பதிவின் விவரங்கள் அனைத்தும் தகவல்களை பகிர்ந்து கொள்ளும் ஒரு முயற்சி மட்டுமே. இதன் சாத்தியங்கள் மற்றும் பலன்கள் ஆய்வுக்கும், விவாதங்களுக்கும் உட்பட்டவை. எனவே ஒரு தகவலாக மட்டுமே இந்த பதிவினை எடுத்துக் கொண்டிட வேண்டுகிறேன்.

சொக்குப் பொடி தயாரிக்கும் முறையை புலிப்பாணி சித்தர் தனது "புலிப்பாணி பலதிரட்டு சூத்திரம்" நூலில் இவ்வாறு விளக்கி இருக்கிறார்.

"பகரவே பொடியொன்று சொல்லக் கேளு
பாங்கான செருக்குடைய பாக்கை வாங்கி
திகழவே யப்பையுட மூலத் தோடு
சிறப்பான திலப்பனையுந் தாளி வேரும்
புகழவே பேயத்தி யால வேரும்
பொலிவான குப்பையுட மேனி வேரும்
அகலவே வேளைவேர் கழற்சி வேரும்
அப்பனே யூமத்தம் வித்துஞ் சேரே"

நல்ல செழிப்புள்ள பாக்குகளை வாங்கி , அத்துடன், அப்பைக் கோவைக் கிழங்கு , நிலப் பனங் கிழங்கு , தாளி வேர், பேயத்தி வேர், ஆலம் வேர், குப்பைமேனி வேர், வேளை வேர், கழற்சி வேர் ஆகியவைகளை ஒன்றாக சேர்த்து, இவைகளுடன்...

"சேரப்பா தலைமஞ்சங் கொடியுங் கூட்டி
பாராப்பா பித்தனுட சாம்பல் மண்டை
பாங்கான வூமை மண்டைப் பொடி சேர்த்து
தீரப்பா விதுவெல்லஞ் சமனாய்க் கூட்டி
திறமாக பொடிசெய்து வைத்துக் கொண்டு
கூரப்பா பேயத்தி யாலம் பாலும்
கூடவே தான் சேர்த்துப் பொடித்திடாயே"

தலைமஞ்சங் கொடி, பைத்தியம் பிடித்து இறந்து போனவரின் சாம்பல் மற்றும் மண்டை ஓடு, இறந்து போன ஊமையின் மண்டையோடு இவற்றை நன்கு தூளாக்கி முன் சொன்னவற்றுடன் சமனாக சேர்த்து, நன்றாக தூளாக்கி எடுத்துக் கொண்டு அதில் பேயத்திப் பால் , ஆலம்பால், இவைகளையும் சேர்த்து நன்றாக காயவைத்து தூளாக்கிக் வைத்துக் கொள்.

இதுவே சொக்குப் பொடி தயாரிக்கும் முறை!....இனி இந்த பதிவின் முதல் பத்தியினை மீண்டும் ஒரு முறை வாசித்து விடுங்கள்.

நாளைய பதிவில் வேறொரு தகவலுடன் சந்திக்கிறேன்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

15 comments:

தமிழ் அமுதன் said...

பைத்தியம் பிடித்து இறந்து போனவர் சாம்பல்,மண்டை ஓடு,இறந்து போன ஊமை மண்டை ஓடு...!!!!!!!!!!!!!

சரிதான் ...! ;;)

jagadeesh said...

ஆஹா. முதல் பாடல் வரை நல்லா தான போய்கிட்டு இருந்தது. ரெண்டாவது பாட்டுக்கு ரெண்டு கொலைகள் பண்ணனும் போல. அருமை. சுவாரசியமான ஒன்று.

curesure Mohamad said...

சகோதரி ..ஹோமியோ பதியில்-மலர் மருத்துவத்தில் இதை போன்று வசிய மருந்து உள்ளது என்று தெரியும் ..
மண்டை ஒட்டு விசயம் -சித்தர்கள் சொன்ன விஷயம் தான் -வலிப்புக்கு பேரண்ட பற்பம் -இப்போதும் எளிதாக கிடைக்க கூடிய விஷயம் தான் ..

நாடி நாடி நரசிங்கா! said...

O my God!
Narayanaa! Narayanaa!

prince said...

intha sothanai namakku venam saami...

பட்டுப்பூச்சி said...

Pcohu daaa.. manda ootuku nan enga povein :(
Kuppai meni ver vendumnaa kedaikum..

If possible, please tell us the local names of herbs you have mentioned like peyathi, thali, kazharchi.

LOVESTAR KANNAN said...

@பட்டுப்பூச்சி

Peeyathi enpathu oru vakaiyaana maramee...... aththi marathin ilaikal, kaaikal poolavee irukkum aannal alavil periyanavaka irukkum..... kalarchi enpathu oru vakaiyaana kodi yaakum.... athillirunthu kidaikkum kaai kalarchi kaai. ithu penkal malattu thanmaikku mikka marunthuu.... thaali enpathuvumj oru vakaiyaana maramee....

nandri

iraa.kannan
mumbai

rajendran said...

ஊமையின் மண்டை ஓடு என்பதற்கு ஊமத்தை நெற்றின் ஓட்டு சாம்பலை குறிக்கும் என்று நினைக்கிறேன். ஏனெனில் ஊமத்தைக்கு மதி மயக்கும் தன்மை உண்டு என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.ஆனால் பைத்திய்த்தின் ஓடு எது என்று தெறியவில்லை.என்து சந்தேகத்தை தீர்க்கவும்.நன்றி alrkkdi@gmail.com

nagen said...

THERIYATHA THAGAVALAI THERINTHUKONDEN
MIKKA NANDRI

Jeyapalan said...

ஊமத்தம் வித்தை விட்டு விட்டீர்கள்.
ஊமத்தங் காயினுள் இருக்கும் கொட்டை.

vijay said...

good news

vijay said...

good news

THIRUMAL said...

uyaramaha valara ethum marunthu erunthal sollungal

B. KARUNANITHI said...

Karunanithi Jothidar, Killukudi, Nagapattinam District Said this news for UYARAMAHA VALARA Vivarangal - Naan Engeyo, eppotho Padithathil Gnabaham Keelaye Padikkavum.
Oru Uyaramana Suvatrin Adiyil - Naeraha Nirkkavum, Kaalgal "V" entra Vadivathil Irukkumaru Vaithukkollavum, Pin, Ungalathu oru Kaiyinai antha Suvattrin meethu uyarae, uyarae Neetavum. Ippothu athigapatcham neetiya idathinai sakpice- all kodittu kollavum. piragu, antha kottirkku malae oru centimeter uyarathil matroru kodu varainthu (2-vathu kodu) kollavum. Intha nilaiyil Keel kanda payirchiyinai thodarnthu orumatham cheiyavum - athavathu, antha suvatrinai otti mun sonnathupol nintrukondu, oru kaiyai maelay thooki (appothu kaalgal nilathil nangu pathinthirukka vendum) irandavthaga varaintha kottai thoda muyarchikkavum, ithupol adutha kaiyinalum maerpadi irandavathu kottai thoda muyarchikkavum. Ithupol dhinamum oru kaikku pathu (10 ) ennikkai veetham Kaalai, Maalai irandu vaelaiyum seithu vanthal oru mathathil oru centimeter uyaram valara mudiyum. Appadi thottu mudithathum irandavthu kottirkku mel oru centimeter uyarathil moontravthu kottai varainthu marchonnathupol adutha orumatham seithuvaravum. orumathathil mudiyavillai entral irandavathu kottai thodum varai thodarnthu seithu varavum, munnathagavey (oru mathathirkullaga) irandavathu kottai thottuvittal adthu Moontravthu kodu varainthu athanai thoda muyarchikkavum, ithupol ungalukku evvalavu uyaram vendum antha alvukku payirchi eduthkollungal. Ithu rombavum easyana vazhi.

Unknown said...

Please send me a copy thanks.

Post a Comment