சொக்குப் பொடி!

Author: தோழி / Labels: ,

காலத்தே மறைக்கப் பட்ட அல்லது மறந்து போய்விட்ட சித்தர்களின் தெளிவுகளை, மின் ஊடகத்தில் பகிர்ந்து கொள்ளும் முயற்சியின் தொடர்ச்சியாக இன்று நாம் பார்க்க இருப்பது “சொக்குப் பொடி”.

இன்றைய தலை முறையினருக்கு ”சொக்குப் பொடி” பற்றி தெரிந்திருக்க வாய்ப்புகள் மிகக் குறைவே, அதன் காரண காரியங்களை அலசுவது இந்த பதிவின் நோக்கம் இல்லை....பேச்சு வழக்கிலும், திரைப் பட பாடல்களிலும், எதிர் பாலினத்தை கவர்ந்து தன் விருப்பப் படி ஆட்டுவிக்கும் சூட்சுமத்தின் குறியீடாக மட்டுமே இந்த வார்த்தை தற்போது பயன்பாட்டில் இருந்து வருகிறது.

இன்றைய நாகரீக உலகில் சொக்குப் பொடி என்கிற ஒன்றை எவரும் தாயாரிப்பதோ அல்லது அதை பயன் படுத்துவதோ நடைமுறை சாத்தியமில்லை என்றே நினைக்கிறேன்.அதே நேரத்தில் இத்தகைய வசிய முறைகள் தீய எண்ணமுடையோர் கைகளில் சேர்ந்து விடக்கூடாது என்கிற நோக்கத்தில் பொதுவில் வைக்கப் படாமல் மறைத்து வைக்கப் பட்டிருக்கலாம்.

புலிப்பாணி சித்தர் இந்த சொக்குப் பொடியின் பயன்பாட்டினையும், விளைவையும் இவ்வாறு கூறுகிறார்.

பொடியெடுத்து தூவிவிட்டாற் சகல பேரும்
பொறிகலங்கி மதிமயங்கி கிடப்பார் பாரு
மடிபிடித்து தான்விரட்டி பொருள்கொண்டாலும்
தடியேடுத்தே யடித்தாலும் நினைவிராது
தயவாக சலமங்கே தெளிக்கு மட்டும்
வடிவெடுத்த போகருட கடாட்சத்தாலே
வெழுத்தினேன் புலிப்பாணி சொக்குத் தூளே"

தயாரித்துள்ள அந்தத் தூளை எடுத்து எவர் மேலாவது கொஞ்சம் தூவினால், அவர் மதி மயங்கிப் போவார். அந்த சமயத்தில் அவர்களிடம் இருக்கும் பொருட்களை எடுத்துக் கொண்டாலும், அவர்களைப் பயங்கரமாக அடித்தாலும், அவர்களுக்கு எதுவும் நினைவிருக்காது. இந்த மதிமயக்கம் தெளிய வேண்டுமாயின் அவர்களின் மீது கொஞ்சம் தண்ணீரைத் தெளித்தால் சுயநினைவிற்க்கு வந்து விடுவார்கள். இந்த சொக்குப் பொடி பற்றி போகருடைய அருளினால் புலிப்பாணியாகிய நான் இதை கூறுகிறேன் என்கிறார்.

ஆச்சர்யமாய் இருக்கிறதல்லவா!, இத்தனை மகத்துவம் வாய்ந்த சொக்குப் பொடியினை தயாரிக்க முடியுமா?

நிச்சயமாக முடியும்....விவரங்கள் நாளைய பதிவில்!

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

10 comments:

jagadeesh said...

Wonderful,its great.நினைத்தே பார்க்கமுடியாத அதிசியம்.

Lingeswaran said...

Very good. Keep continuing..

prince said...

சீக்கிரமா சொல்லுங்க எப்படி தயாரிப்பது என்று ...ஏன்னா சோதனை செய்து பார்க்கனும் ...(உங்களுடய பொறுமை,விடாமுயற்சி,அற்பணிப்பு இவைகளை வைத்து கணித்து சொல்கிறேன்.வருங்காலதில் மிகப்பெரிய மருத்துவ மாமேதையாக வருவீர்கள்- வாழ்த்துக்கள்)...

Vimal Kumar said...

nambamudiyavillai!!!!!!!!!!!!!!

பட்டுப்பூச்சி said...

:):) Tell us.. a good hit for all the useless husbands watching TV, leaving their pressurised wives in kitchen..

Web Master said...

தோழி எனக்கு சில சந்தேகங்கள் தீர்பாபீர்கள் என நினைக்கின்றேன்.

1. இரசத்தை திண்ம வடிவில் செய்து எடுப்பதற்கான வழி என்ன?
2. முப்பு என்றால் விரிவான விளக்கம் தரவும்?
3. சவுக்காரம் சுத்தி எப்படி?

நன்றி

PRINCE (ALAIS) ELAVARASAN, SALEM said...

சித்தர்கள் ராஜ்ஜியம் வியக்க வைக்கும் பல அறிய தகவல்களுக்கு நன்றிகள்

SAIT said...

Expecting the methods

SAIT said...

Expecting the methods

Unknown said...

where will buy they sokku podi

Post a Comment