இஸ்லாமும் ரசமணியும்.!

Author: தோழி / Labels: , ,

ஏழாம் நூற்றாண்டு முதலே தமிழகத்தில் இஸ்லாமிய மதம் இருந்ததற்கான சான்றுகள் கிடைத்திருக்கின்றன. “சோனகர்”,”துலுக்கர்” என கல்வெட்டுக்களிலும், மெய்கீர்த்திகளிலும் இஸ்லாமியர்கள் குறித்த பல விவரங்கள் காணக் கிடைக்கின்றன.

யாகோபு சித்தர் தனது நூலில் இரசமணி தயாரிக்கும் விதத்தினையும், அதனை பிரார்த்தனைக்கு பயன் படுத்துவதன் மூலம் கிடைக்கும் பலன்களையும் கூறியிருக்க்றார்.இந்த பதிவில் இரசமணியின் பயன் பாட்டினைப் பற்றி கூறிய விவரங்களை மட்டும் பார்ப்போம்.

"பார்த்தியே சூதமது கட்டிப் போகும்
பதிவான இருபத் தொரு மணிகள் செய்து
வாத்தியே தமரிட்டு நூலில் கோர்த்து
வடிவாக கைதனிலே வைத்துக் கொள்ளே
வைத்துமே பிசுமில்லா ரகுமானென்று
வகையான கலிமாவை ஓதித் தீரு
மைத்துமே நாளொன்றுக் கொன்று தானும்
நாடியே முப்போதும் தொழுது போற்று
பைத்துமே இப்படிக்கு தொழுதாயானால்
பதிவாக நபிமார்போ லிருக்க லாகும்"

- யாகோபுச் சித்தர் -

ரசமானது கட்டியாகும், அதை எடுத்து இருபத்திதோரு மணிகளாக உருட்டி ஓட்டை போட்டு நூலிலே கோர்த்து, கையிலே வைத்துக் கொண்டு "பிஸ்மில்லா ரகுமான்" என்று கலிமாவை ஓதிக்கொண்டிரு, இப்படியே ஒவ்வொரு நாளும் முப்பொழுதும் அதாவது மூன்று வேளையும் தொழுது வணங்கி வந்தால் நபிமார்கள் கூட்டத்தில் நீயும் ஒருவனாவாய்!.....என்கிறார்.

இரசமணியின் மகத்துவத்தை உணர்த்தும் இன்னொரு சான்றாக இதைக் கொள்ளலாம்.

பின் குறிப்பு : சித்தர்களின் போக்கில், பார்வையில் இஸ்லாமை அணுகியிருக்கிறேன், என்பதைத்தவிர இஸ்லாம் என்கிற மாபெரும் மதத்தின் நீள அகலங்கள் எனக்கு அத்தனை பரிச்சயமில்லாதவை, எனவே மதம் குறித்த எனது தகவல்களில் பிழையிருப்பின் பொருத்தருள்க...

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

8 comments:

curesure Mohamad said...

சகோதரி ..பின் குறிப்பில் நீங்கள் குறிப்பிட்டது சரி ..சித்தர்கள் போக்கில் இஸ்லாம் என்பது சரி ..

ஆனால் ..யாகோபு சித்தர் ..சொல்வது போல் ..நபிமார்களின் கூட்டத்தில் சேர முடியாது ..அவர் சொல்வது -மனம் சித்தம் பெரும் என்பதாக கூட மறை பொருளாக உணரலாம் ..

GANGAIQADIR said...

Dear THOZHI

MY MAIL ID gangaiqadir@gmail.com

God give more power to write to this world.

Unknown said...

i am abdul kalam. kalam.6263@gmail.com this is my mail id.

siddarkal is an scientist. now a days great modern science all of them occupy to business relations. but india other then tamilnadu most research for this type of books, olai suvadikal, kalvettukal, sirpangal, etc.,

ஜா.முஹையத்தீன் பாட்ஷா said...

Nice article

Unknown said...

best keep up

Unknown said...

nice keep up

Appuvijay said...

Nice thozhi

Unknown said...

thayaripu muraiyai solungal

Post a Comment