இஸ்லாமும், சித்தர்களும்!

Author: தோழி / Labels: , ,

சித்தர்கள் குறிப்பிட்ட மதத்துக்கோ, மொழிக்கோ, இனத்திற்கோ சொந்தமானவர்கள் இல்லை. சுருங்கச் சொல்வதாயின் அவர்கள் அரும்பசியை தீர்க்கும் உணவைப் போன்றவர்கள். உணவிற்கு பசியை தீர்க்கத்தான் தெரியும் என்பதைப் போல, தாங்கள் வாழ்ந்த சமூகத்தை நல்வழிப்படுத்த மட்டுமே சித்தர்கள் முயன்றார்கள்.

உயர்ந்த மெய்ஞான தேடலில் ”மெய்யுணர்வு” நிலையான இறை நிலையை உணர்ந்தவர்கள் அனைவருமே சித்தர்கள்தான், இதனை இந்து மதத்தில் முக்தி நிலை என்கின்றனர். இஸ்லாத்தில் இதனை ”தாவ்ஹீத்” என்றழைக்கின்றனர்.

இத்தகைய உயர் நிலையினை எய்தியவர்களே இஸ்லாத்தில் ”நபிமார்கள்” என்று அழைக்கிறார்கள். இவர்கள் உலக மக்களை உய்விக்க பல முயற்சிகளைச் செய்து இன்றும் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். பூவுலகில் மக்களின் மனதில் அன்பும், சகோதரத்துவம் நிலைத்திருக்கவும், நீடிக்கவும் வழி காட்டும் இவர்களை மக்கள் இறை தூதர் என போற்றுகின்றனர்.

இதற்கு ஆதாரமாக யாகோபு சித்தரின் ”யாகோபு சுண்ணகாண்டம்” என்னும் நூலின் கடவுள் வணக்கப் பாடலைப் பார்க்கலாம்...

"ஆனந்தமாய் நிறைந்த அல்லா பாதம்
அடுத்துநின்ற அடுத்துநின்ற சித்தநபிமார்கள்
பாதம்போற்றி தானந்த மகமதுவை தொழுது
போற்றி தாட்டிகமாய் சுண்ணமென்ற காண்டம்
தன்னை வானந்த மாகவே அறுநூறாக
வகயாகப் பாடினேன் வண்மையாகக்
கோனந்த மெய்ப்பொருளா மின்னூல்தன்னை
குறிப்பாகப் பாடினேன் கூர்ந்து பாரே"

- யாகோபுச் சித்தர் -

எங்கும் ஆனந்தமாய் நிறைந்து நிற்கின்ற அல்லாவின் பாதங்களையும், அல்லாவின் வழிநடக்கின்ற சித்தர்களான நபிமார்களின் பாதங்களையும் தானே தானாய் நின்ற முகமதுவின் பாதங்களையும் போற்றி உறுதியுடன் சுண்ணமென்ற இந்தக் காண்டத்தை உண்மையுடன் பாடினேன். உண்மைப் பொருளான இன் நூலை மிகவும் குறிப்புடன் பாடினேன் ஆழ்ந்து கவனித்துப்பார் என்று தனது நூலை தொடங்குகிறார்.

இதன் மூலம் இஸ்லாம் மதத்தில் தெய்வத்தன்மை பொருந்திய சித்த புருசர்களை நபிமார்கள் என்றழைக்கிறார்கள் என்பது புலனாகிறது.

இராமதேவர் என அழைக்கப் பட்டவரே பின்னர் இஸ்லாமிய கோட்பாடுகளில் ஆழ்ந்து தன்னை யாக்கோபு சித்தர் என அழைத்துக் கொண்டதாக தகவல்கள் கூறுகின்றன. இவர் அழகர் கோவிலில் சமாதி அடைந்ததாக தெரிகிறது.

அடுத்த பதிவில் இது தொடர்பான வேறு சில தகவல்களுடன், இஸ்லாத்தில் இரசமணி எவ்வாறு பயன்படுத்தப்பட்டது என்பதையும் பார்ப்போம்.

பின்குறிப்பு: எனது வாசிப்பனுபவத்தின் தெளிவுகளையே இங்கே பகிர்ந்து கொண்டிருக்கிறேன். பதிவின் கருத்துக்கள் எவரது நம்பிக்கையினையும் புண்படுத்துவதாக இருப்பின் சுட்டிக் காட்டினால் திருத்திக் கொள்ளவும், வருத்தங்களை பகிரவும் தயாராக இருக்கிறேன்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

24 comments:

Unknown said...

தங்களின் கருத்துகள் அனைத்தும் மத நல்லினக்கமகவே உள்ளது. கவலை வேண்டாம் தோழி தொடருங்கள் மேலும் பல நல்ல தகவல்களை.
உதயகுமார்.s

curesure Mohamad said...

உங்களின் இவ்வளவு விஷய ஞானம் என்னை ஆச்ர்யபடுட்டுகிறது ..
முக்தி நிலை என்பதும் -தவ்ஹீதும் ஒன்றாகாது ..முக்தி நிலை என்பது மறுமை. (இறப்பிற்கு பின் சுவர்க்கம் அடைவத்தர்க்காக இந்த உலகில் வாழும் vaalkai )..தவ்ஹீத் என்பது நேர்வழி -ஓரிறை கொள்கை ..வணக்கத்திற்கு உரியவன் இறைவன் ஒருவனே ..என்பதே தவ்ஹீத் ..
முக்தி நிலை அடைந்தவர்கள் -நபிமார்கள் -இதுவும் தவறு -இறைவன் ஒருவன் ஒரு சமுதாய மக்களுக்காகவோ ஓரிறை கொள்கைக்கு மாற்றமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்களோ -அவர்களை நேர் வழி பெறுவதற்காக நபிமார்களை இறைவன் தேர்ந்து எடுத்து அனுப்பினான் ..மறுமைக்காக வாழும் எல்லாரும் நபிமார்களாக முடியாது ..
தெய்வத்தன்மை பெற்றவர்கள் நபிமார்கள் -இது மனதிற்கு ஏற்றுகொள்ள முடியாது ...நபிமார்கள் ஒழுக்க சீலர்களாக ,நல்ல மனிதர்களாக ,வழிகாட்டியாக வாழ்ந்திருக்கிறார்கள் ..ஆனால் அவை தெய்வதன்மை என்று ஆகிவிடாது ..எந்த ஒரு காரணத்திற்காகவும் தெய்வத்தின் தன்மை மனிதன் பெற முடியாது ..இது இஸ்லாத்தின் அடிப்படை
கடைசி நபி -நபிகள் நாயகம் ரசூல் ஆவார் ................யோகோபு சித்தர் -இஸ்லாமியராய் வாழ்ந்தார் ..உண்மை ..

bogan said...

நபிமார்களை சித்தர்களாக கொள்வது சற்று கடினமே.ஆனால் சூபிக்களை சித்தர்களாக கொள்ளலாம்.சூபிக்களின் சித்தாந்தத்துக்கும் சித்தர்களின் தத்துவக்கும் நிறைய தொடர்பு உண்டு.நமது தர்க்காக்களில் அடங்கி இருக்கும் வலிமார்களை சித்தர்களுடன் ஒப்பிடலாம்

Unknown said...

muthal variyee thavaru.

Sitharkal sivanaiyee vazhipattanar. vazipaadu plain simpliaaka irukku veendum enbathuvee avarkal kolkai.

sitharkalaippatri ezuthukireen enru avarkalukku thuroham pannaathiirkal

தோழி said...

@curesure4u

தவறினை சுட்டிக் காட்டியதற்கும், தெளிவான விளக்கத்திற்கும் மிக்க நன்றி.

teenmoon5 said...

முயற்சியை கைவிடாதீர்கள். எந்த மதம் ஆனாலும் சித்தர்கள் சித்தர்கள் தான். சித்தத்தை (மனம்) வென்றவர்களே சித்தர்கள். மதங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் சித்தர்கள் என்பது முற்றிலும் உண்மை. மேலே ஒருவர் கூறியது போல் சித்தர்கள் சிவனை மட்டும் தொழுதவர்கள் அல்ல அல்ல, ராமரையும், முருகனையும் கூட வழிபட்டார்கள். மனம் தளராமல் உங்கள் முயற்சியை தொடருங்கள்

teenmoon5 said...

@Harihara Subramanyam
dont be narrow minded. Sidhars worshipped other gods also.

SABARI said...

SUPERRRRRR.mam unkala mathiri nanum intha visayankala theduren. aana neenka romba aalama poirukeenka.nan ithula ulla data va time kedaikurappa padikirean. romba thanks.

SABARI said...

NICE ithu varakum paatha blogs ellathulaium enaku rombapidicha blog unkalodathuthan akka.
neenka enna padicchirukeenka?

Tamilan said...

தோழி , தயவு செய்து சித்தர்களை , முகமதுவுடன் ஒப்பிட்டு, சித்தர்களை கேவலப்படுத்தாதிர்கள்.

roshan said...

PLS YAARAIYUM PIRITHTHU PAARKAATHEERKAL TAMILAN.....

கராத்தே வெங்கடேசன் said...

நாம் மனிதர்கள்..நம்மிடம் உள்ள இச்சைகளும் மிருகங்களைப் போலவேதான்.. மிருகங்களுக்கு இச்சையை கட்டுப்படுத்த முடியாது.. மனிதர்கள் நினைத்தால் கட்டுப்படுத்தி வாழ முடியும்.. அவ்வாறு கட்டுப்படுத்தி அந்த கட்டுப்பாட்டினால் இறைநிலையை கண்டு வாழ்ந்தவர்கள்தான் சித்தர்கள்.. எல்லா மதங்களுமே இச்சைக்கு ஆட்பட்டு வாழ்ந்த மனிதர்களும் அதனை கட்டுப்படுத்தி வாழ்ந்த சித்தர்களும் உட்கொண்டதுதான்.. நாம் முதலில் மனிதனாகவும் பின்பு சித்தராகவும் ஆக முயற்சி செய்வோம்..

கராத்தே வெங்கடேசன் said...

உலகில் உள்ள எல்லா ஜீவராசிகளுமே இச்சைகளுக்கு உட்பட்டவைதான்.. இச்சைகளை நினைத்தால் கட்டுப்படுத்த கூடிய ஒரே ஜீவராசி மனித இனம்தான்.. அப்படி கட்டுப்படுத்தி இறைநிலையை கண்டு வாழ்ந்த மனிதர்கள்தான் சித்தர்கள்.. இப்படிப்பட்டவர்கள் எல்லா மதத்திலுமே இருந்துள்ளார்கள்.. இன்றும் இருக்கிறார்கள்.. நம்மில் பலபேர் இன்னும் இச்சையை கட்டுப்படுத்தி வாழ இயலாத காரணத்தினால்தான் நம்மால் சித்தர்களை அடையாளம் கண்டு கொள்ள இயலவில்லை..

SYED said...

Dear தோழி நீ என்ன படிக்குறே!
அல்லாஹ்வை முன்று முறை தொழுஹன்னுமா யங்க படிச்சா தெரியத்ததா எழுதாத எல்லாம் தெர்யுமா உன்னக்கு! நல்லா தெருஞ்ச மட்டும் எழுது அல்லாஹ்மன்னிப்பனாஹ, ஏயே, ஐ வேலை தொழுஹனும் கடமை (பார்லு) நிறை படி அப்பாரம் எழுதலாம் சும்மா

Anonymous said...

சித்தத்தை அடக்கியவர்கள் சித்தர்கள் உண்மை
அதுபோல நபிமார்கள் சித்தத்தை அடக்கவில்லையா?
அடக்கினார்கள் அவரே நபிகள் நாயகம் எப்படி என்று நீங்கள் கேட்கலாம்?
நபிகள் நாயகம் ஹீரா குகையில் முன்று வருடம் தவம் புரிந்தார்கள்.
சித்தம் என்பது மனம், புத்தி, அகங்காரம், இவற்றை அடக்கி ஆன்மாவை தரிசித்தவர்களே சித்தர்கள்.சித்தர்களும் மனிதன் வாழ நல்ல விசயங்களை எடுத்துரைத்து இருக்கிறார்கள் அதுபோல நபிமார்கள் இறைவனை அடையும் பாதையும் சொல்லி இருக்கிறார்கள் வாழ்கையில் சிறந்து விளங்கிடவும் உபதேசம் புரிந்து இருக்கிறார்கள் .சித்தத்தை உணர்ந்தவன் ஞானி உணராதவன் மனிதன்.

Anonymous said...

சித்தத்தை அடக்கியவர்கள் சித்தர்கள் உண்மை
அதுபோல நபிமார்கள் சித்தத்தை அடக்கவில்லையா?
அடக்கினார்கள் அவரே நபிகள் நாயகம் எப்படி என்று நீங்கள் கேட்கலாம்?
நபிகள் நாயகம் ஹீரா குகையில் முன்று வருடம் தவம் புரிந்தார்கள்.
சித்தம் என்பது மனம், புத்தி, அகங்காரம், இவற்றை அடக்கி ஆன்மாவை தரிசித்தவர்களே சித்தர்கள்.சித்தர்களும் மனிதன் வாழ நல்ல விசயங்களை எடுத்துரைத்து இருக்கிறார்கள் அதுபோல நபிமார்கள் இறைவனை அடையும் பாதையும் சொல்லி இருக்கிறார்கள் வாழ்கையில் சிறந்து விளங்கிடவும் உபதேசம் புரிந்து இருக்கிறார்கள் .சித்தத்தை உணர்ந்தவன் ஞானி உணராதவன் மனிதன்.

jamalmba said...

sithargal matrum yogigal yen kadugalil valthargal entru thirinthal pls sollungal....

Unknown said...

Friend u continue ur view points. Those who are interested in taking the essence without religious coating or fighting are going tobe benefitted. Prophats, avatharam purushas, siddhargal, valimargal these descriptions are secondary. What is described is more important. God's glory is explained. Anybody who is above ordinary human being , you are unfurling. If Mohamed is last prophat, it means there were many prophats beefier him and thst one god's could have told something to them what was not told to Sal.

Unknown said...

தமிழன் என்ற பெயருக்கு நீ தகுதி அற்றவன் Mr. தமிழன் , தமிழன் தாழ்த்தி பேசகூடிய பண்பு அற்றவன்...

New*inOz said...

அறியாமை.

சலீம் said...

Friend , here Thozhi talking about mahribath, not shariath. Ihsan not Islam. Even she doesnt know about this but she is in that.

சலீம் said...

Very true

Saheed Ul Hasan said...

மன்னிக்கவும் இஸ்லாத்தில் எந்த நபிமாருக்கும் தெய்வீகத் தன்மை இல்லை. இஸ்லாமியர்களின் நம்பிக்கை அவர்களும் சாதாரன மனிதர்களே. அவர்களிடம் இருந்த ஒரு சிறப்பு அவர்களுக்கு இறைவன் மலக்குகள் மூலம் இறைச் செய்தியை அறிவித்ததே. அதுமட்டுமல்லாமல் இஸ்லாம் கூறும் எந்த இறைதூதரும் சித்தர்கள் போன்று திருமணம் செய்யாமல் காதில் சென்று வாழவில்லை. அவர்கள் இல்லற வாழ்கையே வாழ்ந்தார்கள். எனவே சித்தர்களை நபிமார்களோடு ஒப்பிடாதீர்கள். அதுமட்டுமல்ல தோழியே நீங்கள் குறிப்பிட்ட ஒரு நூல் யாகோபின் "சுண்ணகாண்டம்" இப்படி ஒரு நூலை ஒரு முஸ்லிமாக நான் அறியவில்லை. முஸ்லிம்களான எங்களுக்கு வேதம் புனித அல் குர்ஆன் தான். எனவே இஸ்லாத்தை பற்றி குறிப்பிட விரும்பினால் அதிலிருந்து அறிந்து குறிப்பிடுங்கள். யார் யாரோ எழுதி வைத்த நூல்களில் இருந்து குறிப்பிட்டு மாற்று மதத்தவர்களை இஸ்லாம் தொடர்பான தவறான கருத்துக்கு இட்டுச் செல்லாதீர்கள்.

Unknown said...

thozi innum oru uthavi ennaku ramadevar ezhuthiya book ethavathu irrunthal email seiyavum athuvum intha article book irruthal nallathu

Post a comment