நாகதோஷம்...நிரந்தர தீர்வு!

Author: தோழி / Labels: ,

சித்தர்கள் எதனைச் செய்தாலும், தங்களின் ஆதி குருவான சிவனை வணங்கியே துவங்குகின்றனர். தங்களைப் போலவே நாகங்களும் ஆதி குருவான சிவனையே பூசிப்பதாக போகர் தனது நூலில் குறிப்பிடுகிறார்.

இனி நாகதோஷத்திற்கான பரிகாரத்தினைப் பார்ப்போம்...

ஆவனி மாதத்து வளர்பிறை பஞ்சமியான,அதாவது அம்மாவாசை கழித்து ஐந்தாவது நாளான ”நாக பஞ்சமி திதி” அன்று, அரச மரம் ஒன்றின் அடியில் நாக எந்திரம் ஒன்றினை பீடத்தில் அமைத்து அதன் மேல் சிவலிங்கத்தினை ஏந்திய வண்ணம் இருக்கும் நாகத்தின் கருங்கல் சிலையினை பிரதிஷ்டை செய்து வணங்கி வருவதன் மூலம் நாக தோஷத்தில் இருந்து நிரந்தரமாக விடுபட்டு நலமுடன் வாழலாம் என்கிறார் போகர்.

பிரதிஷ்டை செய்ய வேண்டிய நாக விக்கிரகத்தின் உருவ அமைப்பையும், நாக யந்திரம் தயாரிக்கும் முறையையும் தனது நூலில் தெளிவாகவும் விளக்கமாகவும் போகர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த நாக விக்கிரகத்தின் மாதிரி படம்..நாகத்தின் சிலையானது இரண்டரை அடி (பீடத்துடன் சேர்த்து) உயரத்திற்க்கு குறைவாகவும், பாம்பின் உடல் மூன்று அல்லது ஐந்து சுற்றுக்களைக் கொண்டதாகவும் இருக்கவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். பிரதிஷ்டை செய்யும் தினத்தன்று, பாலும், பழமும் மட்டுமே உணவாக எடுத்துக் கொண்டு விரதமிருந்து, பயபக்தியுடன் இந்த கடமையை செய்திடல் வேண்டும் என்கிறார்.

நாகதோஷம் உள்ளவர்கள், அடுத்த சில நாட்களில் வர இருக்கும் ஆவனி வளர்பிறைப் பஞ்சமி திதியன்று, நாகர் சிலையினை பிரதிஷ்டை செய்து வணங்கி, நாகதோஷத்தில் இருந்து நிரந்தரமாய் விடுபட்டு சீரும் சிறப்புடனும் வாழ்ந்திடுங்கள்....

இத்துடன் நாக தோஷத்திற்கான பரிகாரம் முற்றியது.

நாளைய பதிவில் இஸ்லாமும், சித்தர்களும் என்கிற தலைப்பில் தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறேன்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

12 comments:

Netrikkan said...

புதிதாக நாகலிங்கம் செய்யவேண்டுமா?
அல்லது ஏற்கனவே இருக்கும் சிலையை வணங்கலாமா?

பதில் அளிக்கவும்

Shiva said...

நன்றி தோழி, நாக பிரதிஷ்டை என்பது காலம் காலமாக உள்ளதுதான். அனால் அதை செய்ய வேண்டிய நாளும், முறையும் , சிலையின் அளவும், வடிவவும் ஒரு சிலருக்கு மட்டுமே தெரிந்து இருக்க கூடும். தங்கள் மூலம் இப்போது எல்லோருக்கும் பயன்படும் வகையில் தெரிய படுத்தியமைக்கு நன்றி. அப்படியே நாக யந்திர வரை படத்தையும் சேர்த்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

மங்கை said...

காலம் அறிந்து தரப்பட்ட உபயோகமான தகவல்... நாக தோஷத்திற்கு பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்று பலர் கூறினாலும், அதைச் செய்ய வேண்டிய முறையைப் பற்றி யாரும் இது வரை கூறியதில்லை

மிக்க நன்றி

நாடி நாடி நரசிங்கா! said...

:)நாக யந்திரம் மாதிரி??

jagadeesh said...

மிக்க நன்றி. அருமை.

curesure Mohamad said...

நாளைய பதிவை எதிர் நோக்குகிறேன் ..

சத்ரியன் said...

தோழி,

மிகப்பயனுள்ள பதிவுகளாகப் பதிந்து வருகின்றீர்கள்.

தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்.

பட்டுப்பூச்சி said...

தெளிவாக புரியவில்லை தோழி..
நாக எந்திரம் அமைப்பது என்றால் என்ன?
அதை எவ்வாறு அமைக்க வேண்டும் என்பதையும் கூறினால் பயனுள்ளதாக இருக்கும்.
புதியதாக நாகலிங்க சிலை வாங்க வேண்டுமா??
சற்று விரிவாக விளக்கவும் தோழி. நன்றி.

யோகம் said...

புற்று வழிபாடு என்று மக்கள் வழிபடுகிறார்கள், புற்றிலே பாம்பு இருந்தாலும் இல்லாவிட்டாலும் , அது பயன் தருமா?

Unknown said...

very nice and useful information to all

Rangith said...

Thanks Good and Great News

Unknown said...

it's very useful for everyone.. Thank you.

Post a comment