நாகபஞ்சமி !

Author: தோழி / Labels: ,

நாக தோஷம் உள்ளவர்கள், தங்களையும், தங்களின் சந்ததிகளையும் பாதிப்புகளில் இருந்து காத்துக் கொள்ள பரிகாரம் ஒன்றினை போகர் தனது ”போகர்12000” நூலில் கூறியிருக்கிறார். இந்த பரிகாரத்தை வருடத்தின் குறிப்பிட்ட ஒரு நாளில் மட்டுமே செய்திட வேண்டும் என கூறுகிறார். அவர் குறிப்பிடும் அந்த தினம் ”நாகபஞ்சமி திதி”

அதென்ன திதி?

பரிகாரத்தை பார்ப்பதற்கு முன்னர் திதி பற்றி ஒரு சிறிய விளக்கத்தை பார்ப்போம். பிறந்த ஒவ்வொருவருக்கும் நட்சத்திரம் எவ்வளவு முக்கியமோ, அது போல இறந்த முன்னோருக்கு திதி என்பது மிகவும் முக்கியமானது.

பெளர்ணமி முதல் அமாவாசை வரையான பதினைந்து நாட்களை ”தேய்பிறை திதி” என்றும், பின்னர் அமாவாசை முதல் பெளணமி வரையான பதினைந்து நாட்களை ”வளர்பிறை திதி” என்றும் குறிப்பிடுவர். இதனை சமஸ்கிருதத்தில் ”கிருஷ்ணபட்சம்”, ”சுக்கிலபட்சம்” என்பர்.

இவை முறையே...

1. பிரதமை.
2. துவி்தியை.
3. திருதியை.
4. சதுர்த்தி.
5. பஞ்சமி.
6. சஷ்டி.
7. சப்தமி.
8. அஷ்டமி.
9. நவமி.
10. தசமி.
11. ஏகாதசி.
12. துவாதசி.
13. திரயோதசி.
14. சதுர்தசி.
15. அமாவாசை அல்லது பெளர்ணமி.

சோதிடத்தில் இந்த திதிகளின் அடிப்படையில்தான் நல்ல நாட்கள் பார்க்கப் படுகின்றன. அஷ்டமி, நவமி திதிகளில் நல்ல காரியங்கள் எதையும் செய்வது நற்பலனைத் தராது என்றும் சொல்லப்பட்டுள்ளது.

இந்தத் திதிகளில் நாம் பார்க்கப்போவது அமாவாசை கழிந்து வரும் ஐந்தாவது நாளான வளர்பிறை பஞ்சமி திதி பற்றியே.. அதிலும் ஆவணி மாதத்தில் வரும் வளர்பிறைப் பஞ்சமி நாள்தான் ”நாகபஞ்சமி” என்று அழைக்கப்படுகிறது. இந்த நாக பஞ்சமி திதியில் தான் போகர் அருளிய நாக தோஷத்திற்கு பரிகாரத்தினை செய்திட வேண்டும்,அதுவே சிறப்பானது.

போகர் அருளிய பரிகார விவரங்களை அடுத்த பதிவில் பார்ப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

11 comments:

jagadeesh said...

மிக அருமை. கடந்த பதிவோடு மொத்தம் 250 பதிவுகள் முடிந்துவிட்டது. வாழ்த்துக்கள் தோழி. இன்னும் மேன்மேல் வளர எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். இந்தப் புனித சேவை தொடரட்டும்.

அருட்சிவஞான சித்தர் said...

250 பதிவுகள் பதிவேற்றியமைக்கு
வாழ்த்துக்கள் தோழி !.
எல்லாம் வல்ல பரம்பொருளின் ஆசி உங்களுக்கு உண்டு.
தொடருங்கள்.

மதுரை சரவணன் said...

மிகவும் தெளிவாக புரியும்படி எழுதியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்.

Shiva said...

மிகவும் உபயோகமான பரிகாரம். நிச்சயம் அனைவருக்கும் பயன்படும்.. "இந்தத் திதிகளில் நாம் பார்க்கப்போவது அமாவாசை கழிந்து வரும் ஐந்தாவது நாளான வளர்பிறை பஞ்சமி திதி பற்றியே.. அதிலும் ஆவணி மாதத்தில் வரும் வளர்பிறைப் பஞ்சமி நாள்தான் ”நாகபஞ்சமி” என்று அழைக்கப்படுகிறது".ஆவணிமாதவளர்பிறைப் பஞ்சமி நாள் இன்னும் பத்து நாளில்12/9/2010 வரஇருக்கிறநேரத்தில்இதைவெளியிடுவதுமிக்கபொருத்தமானதே.
ஆனால் நாக பஞ்சமி நாள் பற்றி ஒரு சிறிய சந்தேகம். விக்ருதி வருஷத்திய சேலம் நம்பெருமாளையர் பஞ்சாங்கத்தில்(நான் வைத்திருப்பது) ஆடி மாசம் வரும் பஞ்சமியை
14/8/2010 கருட பஞ்சமி/நாக பஞ்சமி என்று குறிப்பிட்டுளார்கள்.- பஞ்சாங்கம் தவறாக இருக்க வாய்ப்புள்ளது. இதை ஒரு தகவலாக மட்டுமே எடுத்துகொள்ள வேண்டுகிறேன்.

skarthee3 said...

இவ்வலை பக்கம் 250 வது பதிவைக் கண்டுள்ளது அறிந்து மட்டற்ற மகிழ்ச்சியடைகிறோம்!!
அனைத்தும் மிகவும் பயனுள்ள பதிவுகள்!!
தங்கள் வாழ்வில் மேலும் பல வெற்றிகள் அடைய
வாழ்த்துக்கள்!!

tamil said...

உங்கள் படைப்புகள் அருமை ...
கணினி டிப்ஸ் மற்றும் பிளாக்கர் டிப்ஸ்
http://www.raghuvarman.co.cc/

Netrikkan said...

ஏன் இன்னும் தாமதம் தோழி..

பரிகாரத்தை வெளியிடவும்

Unknown said...

இந்த வலைபதிவு பல கோடி மக்களுக்கு சித்தர்களின் அருளசியாக விளங்குகிறது என நம்புகிறேன் பல அறிய தகவல்களை கொண்ட இப்பதிவுகள் மற்றும் தோழி பல்லாண்டுகள் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திகிறேன்
என்றும் பிரியமுடன்
சித்தர்கள் ராச்சிய
வாசகர்
சூர்யபிரகாஷ்

Unknown said...

இந்த வலைபதிவு பல கோடி மக்களுக்கு சித்தர்களின் அருளசியாக விளங்குகிறது என நம்புகிறேன் பல அறிய தகவல்களை கொண்ட இப்பதிவுகள் மற்றும் தோழி பல்லாண்டுகள் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திகிறேன்
என்றும் பிரியமுடன்
சித்தர்கள் ராச்சிய
வாசகர்
சூர்யபிரகாஷ்

Unknown said...

இந்த வலைபதிவு பல கோடி மக்களுக்கு சித்தர்களின் அருளசியாக விளங்குகிறது என நம்புகிறேன் பல அறிய தகவல்களை கொண்ட இப்பதிவுகள் மற்றும் தோழி பல்லாண்டுகள் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திகிறேன்
என்றும் பிரியமுடன்
சித்தர்கள் ராச்சிய
வாசகர்
சூர்யபிரகாஷ்

Prakash said...

nalla pathivoo
thanks
by prakash

Post a comment