நாகதோஷம் !

Author: தோழி / Labels: ,

சித்தர்கள் அருளிய சோதிடம் குறித்த தெளிவுகளை முந்தைய பதிவுகளில் வாசித்திருப்பீர்கள். தவற விட்டவர்கள் இந்த இனைப்பில் சென்று வாசிக்கலாம். அந்த பதிவுகளின் தொடர்ச்சியாக இன்றைய பதிவில் ”நாக தோஷம்” அல்லது ”சர்ப்ப தோஷம்” பற்றி பார்ப்போம்.

சோதிடத்தில், ராகு-கேது கிரகங்களின் பார்வையினால் ஒரு ஜாதகருக்கு ஏற்படும் பாதிப்புகளையும், அதன் விளைவுகளையுமே நாகதோஷம் அல்லது சர்ப்ப தோஷம் என்கின்றனர். சோதிடவியலில் நாகதோஷம் கடுமையானது அல்லது துயரம் மிகுந்த ஒன்றாக வர்ணிக்கப் பட்டிருக்கிறது. இந்த பாதிப்புகளில் இருந்து விடுபடும் உத்திகளைத்தான் பொதுவில் பரிகாரம் என்கின்றனர்.

போகர் தனது ”போகர்12000” நூலில் நாகதோஷம் பற்றிய குறிப்புகளை விரிவாக கூறியிருக்கிறார். அதன் சாரம் பின்வருமாறு.....

பிறப்பினால் ஒருவரின் ஜாதக அமைப்பில் ராகு, கேது கிரகங்கள், சில இடங்களில் அமைவதால் நாகதோஷம் ஏற்படுவது ஒருவகை என்றும், பாம்பு புற்றினை இடித்தல் அல்லது பாம்புகளை கொல்வது போன்ற பாவச் செயல்களினால் நாகதோஷம் ஏற்படுவது இன்னொரு வகை என்கிறார்.

போகர் பாம்புகளை “உயிர் விழுங்கிகள்” என்கிறார். உறுப்புகளற்ற இந்த உயிரினம், ஒன்றுதான் இரையினை உயிருடன் விழுங்குவதாகவும், தினம் தினம் இவற்றில் உயிர்கள் அடங்குவதாகவும் குறிப்பிடுகிறார். இருளுக்குள் அடைந்துவாழும் பாம்பின் பிறப்பு என்பது ஒரு வகையான சாபம் பெற்ற பிறப்பு என்றும், இவற்றைக் கொல்வதால் அந்த சாபம் கொல்பவரை தொற்றிக் கொள்ளும் என்றும் கூறுகிறார்.

பாம்புகள் வசிக்கும் புற்றானது, கோவில் கருவறைகளுக்கு ஒப்பான ஆற்றல் மையம் என்கிறார் போகர். இத்தகைய புற்றுக்கள் எல்லா இடங்களிலும் அமைவதில்லை என்றும், புற்றுகள் அமைந்துள்ள இடம் தனித்துவமான வாஸ்து சக்தியுள்ளவை என்கிறார். கரையான்கள் பூமியின் ஆழம் சென்று சேகரித்து வரும் பிரத்யேக மணலில், தமது உமிழ்நீரைக் கலந்து புற்றுகளை அமைக்கின்றன. இந்த புற்று மணலில் ஒரு வகையான உயர் ரக பாதரசம் கலந்திருப்பதாகவும் அதனை பிரிக்கும் முறையினையும் தனது நூலில் போகர் விளக்கியிருக்கிறார்.

இத்தகைய நாக தோஷம் உள்ளவர்களுக்கு, கல்வி, திருமணம், புத்திர பாக்கியம் போன்றவற்றில் பாரிய தடைகள் மற்றும் பிரச்சனைகள் உருவாகும். முறையான பரிகாரங்கள் செய்வதன் மூலம் இந்த தடைகள் நீங்கி சுக வாழ்வு வாழலாம் எனவும் குறிப்பிட்டிருக்கிறார்.

அதென்ன பரிகாரம்? விவரங்கள் நாளைய பதிவில்.....!

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

19 comments:

Sakthivel said...

Great information......Now only i came to know about snakes....Thank you so much....

Netrikkan said...

ஆவலுடன் காத்திருக்கிறேன்....

அழகிரி..

yuvaraj Anand said...

All the information are good and excellent,

அருட்சிவஞான சித்தர் said...

// பாம்புகள் வசிக்கும் புற்றானது, கோவில் கருவறைகளுக்கு ஒப்பான ஆற்றல் மையம் என்கிறார் போகர். இத்தகைய புற்றுக்கள் எல்லா இடங்களிலும் அமைவதில்லை என்றும், புற்றுகள் அமைந்துள்ள இடம் தனித்துவமான வாஸ்து சக்தியுள்ளவை என்கிறார்.//

தோழி!. மிக அரிய செய்தி. தோழிக்கு வாழ்த்துகள். போகர் 12000 நூல் தங்களிடம் உள்ளதா? தெரிவிக்கவும் அல்லது கிடைக்கும் விபரம் தெரிவிக்க கேட்டுக்கொள்கின்றேன்.

// கரையான்கள் பூமியின் ஆழம் சென்று சேகரித்து வரும் பிரத்யேக மணலில், தமது உமிழ்நீரைக் கலந்து புற்றுகளை அமைக்கின்றன. இந்த புற்று மணலில் ஒரு வகையான உயர் ரக பாதரசம் கலந்திருப்பதாகவும் அதனை பிரிக்கும் முறையினையும் தனது நூலில் போகர் விளக்கியிருக்கிறார்.//
மேற்படி புற்று மணலில் பாதரசம் பிரிப்பதை பற்றி ஒரு பதிவாக போடுங்கள் தோழி!.

Anonymous said...

அடுத்த பதிவை முதலில் படிப்பவன் நானாகத்தான் இருப்பேன் , ஏனெனில் போகர் கூறியது போல எனக்கு கால சர்ப்ப தோஷம் உள்ளது . அதை போக்க என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்

ஹேமா said...

சுவாரஸ்யமாய் இருக்கிறது தோழி!

பட்டுப்பூச்சி said...

very interesting information. Thozi who had given the wrong link 'இந்த இணைப்பில்' Please correct it and eagerly waiting for the next post.

Unknown said...

நாகதோஷம் உள்ளவர்களுக்கு என்ன பரிகாரங்கள் செய்ய வேண்டும். தயவு பண்ணி அறியத் தரவும்.

Revathy said...

hello thozhi,
I am very happy to read your site articles .It is very informative and having truth in it.I think you are blessed with 'siddhargar'.God bless you for doing 'knowlegde seva', which can enlighten a whole society. Continue your seva...Revathy

Unknown said...

I love this site and appreciate all the effort take by you.

But here is my doubt. All the poisionous snake kills the prey by injecting venom and eats. Its not true those snakes eat the prey alive.

Second Raghu and kethu are the poles of sun whose magnetic field pass through like a long line . So this has been compared with snakes because they also look like a long rope.

But I agree with the point that termites tunnel have some mistries in it.

Ganesh S said...

dear thozhi,

unka site-la google search mathiri oru SEARCH option iruntha romba site innum prasithi perum,,it is my personal idea...PLEASE DO IT..

Ganesh S said...

dear thozhi,
naaaga thosam patriya thagaval arumaiyag ullathu...parigarangal patriya thagavalai ethirparkiren. pls send it to my e-mail id
suganesh80@yahoo.co.in

Unknown said...

atha pariakaram enna athai oru prathi annupagal Id:karthikeyan.5396shine@gmail.com

thamarai said...

அன்புள்ள தோழிக்கு

எனக்கு ஒரு சந்தேகம் எண்னுடைய ஜாதகப்படி நான் கடைசி வரை கஷ்டப்பட்டு கொண்டு தான் இருப்பேன் மேலும் இதுபோல் சித்தர்கள் வழியாக இரைவனை சரணடைவது எண்னுடைய ஜாதகப்படி இல்லை என்று கூறுகிறார்கள் இதை மாற்ற வழி இருக்கிறதா

தயவுசெய்து வழிகாட்டவும

நன்றிகள் ்

Unknown said...

Ayya, Naga thosham karanamaga enakum en manaivikkum inru varai kulanthai pirakavillai. envae thangal atharku uriya sigitchai muraiyai koora vendum. Mikka nanri

Unknown said...

Ayya Enakum En Manaivikum naga thosham ullathal aval inru vari karu tharikavillai. enave thangal than engaluku oru nalla vazhi kati, atharku uriya sigitchai muraiyai solli arulavendum.
Mikka Nanri Ayya

Unknown said...

@அருட்சிவஞான சித்தர்

Unknown said...

How to find this naga thosam without jathagam

Unknown said...

How to find this naga thosam without jathagam

Post a comment