மிகுந்த தயக்கத்துடனே இந்த பதிவினை துவங்குகிறேன். எவரையும் குறை சொல்வது எனது நோக்கமன்று. பல நாட்களாய் மனதில் ஊறிக் கிடந்த ஒரு ஆதங்கத்தினை பொதுவில் வைப்பதனால் ஏதேனும் ஒரு நல்ல தீர்வு விளைந்து விடாதா!, என்கிற தவிப்பும் எதிர்பார்ப்புமே இந்த பதிவு....!
ஈழத்து சித்தர் பரம்பரை பற்றி முன்னரே ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்தேன். தவற விட்டவர்கள் இந்த இணைப்பில் சென்று அந்த பதிவுகளை வாசிக்கலாம். தமிழகத்தில் வாழ்ந்திருந்த சித்தர்களைப் போலவே, எமது ஈழத்து சித்தர்களும் மருத்துவ, ரசவாத, சோதிட , மந்திரிக, விடயங்களில் சிறந்து விளங்கியதற்கான பல குறிப்புகள் கிடைத்திருக்கின்றன.
தமிழகத்து சித்தர்களைப் போல பெரிய அளவிலான பின்தொடர்தல்கள் இல்லாமையால், ஈழத்து சித்தர்கள் குறித்த தகவல்கள் பெரிய அளவில் வெளியில் தெரியவோ அல்லது பிரபலமாகவோ இல்லை.ஈழத்துச் சித்தர்களின் நூல்கள் பெரும்பாலும் அவரது சீடர்களுடன் முடங்கிவிட்டதும் கூட இதற்கு ஒரு காரணம். தற்போதும் அத்தகைய நூல்களின் சுவடிகள் இங்கே பலரிடம் இருந்தாலும், அவர்கள் மனமுவந்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் விருப்பம் இல்லாதவர்களாகவே இருக்கின்றனர்.
என்னுடைய சொந்த அனுபவத்தில், அவர்களிடம் இருக்கும் சித்தர் பாடல்களை பிரதி எடுக்க அனுமதிக்குமாறு, அல்லது படிப்பதற்கென அனுமதி கேட்டு பலமுறை அணுகியும் கூட அவர்கள் கூறும் சமாளிப்பு, ”சித்தர்கள் இந்த நூல்கள் எப்போது வெளியில் வர வேண்டும் என்று விரும்புகிறார்களோ, அன்று இவை தானாகவே வெளிப்படும்" என்கிறார்கள். தொடர்ச்சியான எனது தேடலில் இதுவரையில் வெறும் இருபத்தி மூன்று பாடல்களை மட்டுமே சேகரிக்க முடிந்திருக்கிறது.
அந்த பாடல்களின் கருத்துச் செறிவும், மொழியாளுமையும் ஈழத்து சித்தர்களின் அறிவையும், தெளிவையும் பறைசாற்றுவதாக இருக்கிறது. எனக்குத் தெரிந்து இன்று கொழும்பில் வசிக்கும் பலரிடம் ஈழத்து சித்தர்கள் பற்றிய சுவடிகள் இருக்கிறது. ஆனால் அவர்கள் அவற்றை வெளியிடவோ, மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவோ மறுப்பது ஈழத்து சித்தர் இலக்கியத்தின் மிகப்பெரிய சாபக் கேடாகும்.
ஈழத்து சித்தர்கள் பற்றி இங்கு வெளியான நூல்களும் மிக குறைவானவை. இரண்டு மூன்று நூல்களே வெளிவந்துள்ளது. அந்த நூலாசிரியர்கள் கூட ஈழத்து சித்தர் பாடல்கள் பற்றிய தகவல்களை தங்களின் நூல்களில் வழங்கிட வில்லை. ஒரு வேளை எனக்கு கிடைத்த வேதனையான அனுபவங்கள் அவர்களுக்கும் ஏற்பட்டிருக்கலாம்.
இந்த பதிவின் மூலம் எனது தாழ்மையான வேண்டுகோள், ஈழத்து சித்தர் பாடல்களை தங்களிடம் வைத்திருப்போர், அல்லது அது பற்றிய தகவல்கள் தெரிந்தவர்கள், ஆர்வமுடைய மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள முன்வர வேண்டும் என்பதே....
என்னிடம் இருக்கும் ஈழத்து சித்தர் பாடல்கள் இரண்டை உங்களுடன் இங்கு பகிர்ந்து கொள்கிறேன்..
"பற்றுமர்றொன்றி பற்றுடன் பற்றிநிப்பார்
பெற்றபேறென பேணிப் பெற்றியனாவர்
கற்றுணர்கலை ஞானம்காதலாய்கண்டுணர்வர்
செற்றுவாழ்வர் சிவனை நினைத்தாலே"
"சிவாயிரெண்டு குருதேவரின் ஞானக்கண்களாகி
நயனதீட்சை செய்திட "ய" குருவிலடங்கிட
"நம" இரெண்டும் திருவடி தீட்சையாலொடுங்கும்
"சிவாயநம" என்னும் திவ்ய மந்திரத்தாலே"
பின் குறிப்பு : என்னிடத்தில் இருக்கும் இருபத்தி மூன்று பாடல்களையும் விரைவில் மின் நூலாக பகிர்ந்து கொள்கிறேன்.
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...
Post a Comment



13 comments:
தள வடிவமைப்பு சரியே. எழுத்து மட்டும் ஏதோ ஒரு நிறத்தில் இருந்தால் சரியாக இருக்கும் போல.
good post
I know few life incidents of Bogar and Babaji which i did read from a reliable siththar's book. I will write it to you...Thozhi. You share it with all people.
i meant,the life incident of bogar and babaji which occured in Srilanka..
ஈழத்து சித்தர்கள் பற்றிய தங்களது ஆய்வும், தங்களிடமுள்ள பாடல்களை மின்நூலாக்கும் முயற்சியும் வெற்றி பெற சித்தர்களிடம் பிரார்த்தனை செய்கின்றேன்.
தொடருங்கள் தோழி!.
கார்த்திகை விரதம் அனுஷ்டிக்கும் முறை. கார்த்திகை விரததீன் பலன்.ஸ்கந்த சஷ்டி விரதம் அனுஷ்டிக்கும் முறை.அதன் பலன்
ஆஞ்சநேயர் மூல மந்த்ரம்
PLS TELL ME
தயயு செய்து சொல்வும்
Kindly visit my Blog at the following link for a article about the Siththars of Ealam..
http://lingeswaran-ise.blogspot.com/2010/09/blog-post_05.html
"tamil ealam vaalga"
anmeega thelivugaludan unmayana thozhi kidaithamaiku sithar [erumangalukku en nandri
aanmeega valiyil nalla thozhi kidaithamaikku sithar permankalukku en nandri
நம பார்வதி பதயே , ஹர ஹர மகாதேவா
தென்னாடுடைய சிவனே போற்றி
என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி
contact me about further help sksk650@gmail.com
Anbu Thozhi,
Ungal Aadhangam Niyayamanadhe!
அன்பு தோழி காலம் கடந்து உங்களை இந்த பதிவின் முலம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது மோகன்குமார்
Post a Comment