காலத்தே மறைந்து போக இருந்த, அல்லது பலரும் மறந்து விட்ட, இம்மாதிரியான அரிய தகவல்களை தேடித்திரட்டி, இங்கே பகிர்வதில் கிடைக்கும் பெருமிதமும், மனநிறைவும் வார்த்தைகளால் விளக்கிட இயலாத ஒன்று.
இன்றைய அறிவியல் வளர்ச்சியினால், ஸ்கேன் செய்து கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை கண்டறிகின்றனர்.அது கூட கருவானது ஓரளவிற்கு வளர்ந்த பிறகே கண்டறிய இயலும். ஆனால் எந்த வித அறிவியல் வளர்ச்சியோ வசதியோ இல்லாத ஒரு கால கட்டத்தில், கரு உண்டான கணத்தில் குழந்தையின் பாலினத்தை துல்லியமாய் கணிக்கும் முறையினை அருளியிருக்கின்றனர் சித்தர்கள்.
"கெற்பதானங்கள் பண்ணக் கிணர்தனிட் சரணங்கணாசி
வற்பணப் பிராணவாய்வு வலத்திலே யோடி லாணாஞ்
சிற்பன விடத்திலோடிற் சிறந்தது பெண்ணதாகும்
பிற்கர வுதயமாகிற் பிலமில்லாக் குருடு வூமை"
- அகத்தியர் -
கரு உண்டான காலத்தில் நாசியிலே ஓடுகின்ற சரம் அல்லது மூச்சுக் காற்றினை வைத்து கெர்ப்பத்தில் உதித்தது ஆணா , பெண்ணா என்பதை அறிந்திடும் முறையினை அகத்தியர் பின் வருமாறு கூறுகிறார்....
பிராண வாயு என்னும் மூச்சுக்காற்று வலது நாசியில் ஓடினால் கெர்ப்பத்திலிருப்பது பெண் குழந்தை எனவும், மூச்சுக் காற்றானது இடது நாசியில் ஓடினால் ஆண் குழந்தை பிறக்கும் என்றும், மூச்சு காற்றோட்டமானது சீராக முழுமையாக இல்லாதிருப்பின் பிறக்கும் குழந்தை குருடு, ஊமை போன்ற குறைபாட்டுடன் பிறக்கும் என்கிறார்.
புலிப்பாணி சித்தர் தன்னுடைய பாடல் ஒன்றில் குழந்தை பிறக்கும் நாளை கணிக்கும் முறையினை பின்வருமாறு விளக்குகிறார்.
"சித்திரை பத்தாந் தேதியில் தூரம்
சென்றிடிலது முதற்பத்து வரையில்
பத்தாகு மதிலேழு சேரில் பதினேழ் தேதியில்
பகர்தறி தைமாதம் பதினேழ் தேதியிலே
ஆமாப்பா போகருட கடாட்சத்தாலே
தெளிவாகப் புலிப்பாணி பாடினேனே"
- புலிப்பாணி -
சித்திரை மாதம் பத்தாம் தேதியில் வீட்டுவிலக்கு நின்று விட்டால் அது முதல் பத்து மாதங்களை கணக்கு வைத்தால் தை மாதம் பத்து மாதமாகும், அந்த மாதத்தில் எழு நாட்களை சேர்த்துக் கொண்டால் தைமாதம் பதினேழாம் திகதி பிரசவிப்பாள்.
சித்திரை மாதம் பதினைந்து தேதிக்கு முன்னதாக மாதவிலக்கு நிற்கிறவர்களுக்கு பத்து மாதக் கணக்காகும்.
சித்திரை பதினைந்தாம் தேதிக்கு மேல் மாத விலக்கு நிற்கிறவர்களுக்கு பதினோரு மாதம் என்கின்ற கணக்கில் பார்க்கவேண்டும் என்கிறார் புலிப்பாணி சித்தர்.
கருவுற்ற காலத்தில், கருவில் இருக்கும் குழந்தையின் வளர்ச்சி பற்றி சித்தர்கள் அருளியதை அடுத்த பதிவில் காண்போம்.
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...
Post a Comment



15 comments:
தங்களின் பதிவுகள் ஒவ்வொன்றையும் பார்த்து வியக்கிறேன்.. உங்கள் மூலம் எமக்கு மகான்களின் இராச்சியத்தை பற்றிய தகவல்களை கொடுத்த பரந்தாமனுக்கு நன்றி...
very nice work thozhi. Keep up your wonderful job and it will be very helpful for many people for years together.
Dear Madam,
Great and useful information.
I regualry read your blogs.
Thanks again
//சித்திரை பத்தாம் தேதியில்// இந்த பாராவில் பத்து மாதம் ஏழு நாட்களாகுமென்கிறீர்கள்
//சித்திரை மாதம் பதினைந்து தேதிக்கு முன்னதாக// இந்த பாராவில் ஒன்பது மாதம் ஆகுமென்கிறீர்கள்
ஒரே குழப்பமாக இருக்கிறது :-)
தோழி,
உங்களின் சிறந்த இடுகைகளில் ஒன்று. அறியும்போது ஆச்சரியமாக இருக்கிறது. அறிவியல் கருத்துக்களை அன்றே அழகுத்தமிழில் சித்தர்கள் மக்களுக்குத் தானம் செய்துவிட்டன்ர்.
ஸ்ரீ....
What mohan said is right, please clear the doubt by example.
தோழி ஆணா பெண்ணா என்று அறியும் முறை அறிந்தாலும் -கண்டு பிடிக்காமல் இருப்பதே நல்லது ..
ஆணுக்கு பெண் எந்த விதத்திலும் குறைவில்லை ..ஆயுர்வேதத்தில் பும்சாவன விதியை (ஆண் குழந்தை பெரும் முறை )பற்றி அதிகம் ஆராய்ந்தாலும் (என்னிடம் இதை பற்றிய பவர் பாயின்ட் தொண்ணூறு ஸ்லைட் அடங்கிய மிக விளக்கமான -முப்பது வகையான முறைகள் )-யாரிடமும் சொல்வதில்லை என்று உறுதியாக இருக்கிறேன் ..
உங்களைபோல் ஒரு சகோதரி கிடைக்க என்னைப்போல் எல்லா சகோதரனும் விரும்புவான் ..
@Mohan
குழப்பத்திற்கு காரணம், எனது கவனமின்மைதான்...சுட்டிக் காட்டியதற்கு நன்றி. தற்போது தவறை திருத்தியிருக்கிறேன்...
வணக்கம் தோழி... தங்களின் தேடலுக்கு யாரும் போட்டிக்கு நிற்க முடியாது. இவற்றை ஆங்கிலத்தில் மாற்றினால் எம் புகழை உலகம் பருகுமல்லவா... தொடரட்டும் தங்கள் பணி..
இனிய தோழியே.. அகத்தியர் பாடலில்.. வலப்புறம் நாசியில் ஓடினால் ஆணும் .... இடப்புறம் நாசியில் ஓடினால் பெண்ணும் என்றுதான் கூறப்படுகிறது.. எனக்கு தெரிந்தவரை.....
விளக்கவும்- நன்றி
i can't understand,plz tell me clearly
தோழி வணக்கம்!!
எங்களது விட்டில் புதிதாய் ஒரு ஆண் குழந்தை பூத்திருக்கிறது அண்ணிக்கு இவர்களுக்கு சித்தர் பெருமக்கள் கூறிய மருத்துவ குறிப்புகள் மற்றும் ஆலோசனைகள் உங்களிடம் இருந்து பெற விரும்புகிறேன். நீங்கள் விரும்பினால் இந்த சிறு உதவியை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன், இவை உங்கள் தளத்தின் லிங்குகளை முலமாக வேண்டுகிறேன். குழந்தைன் வயது பதினெட்டு நாட்கள்.சிரமதிக்கு மன்னிக்கவும்! E-Mail ID:g.prabubcs@gmail.com
@ஸ்ரீ....
தோழி! சரம் வலத்தில் ஓடினால் ஆணும், இடத்தில் நடந்தால் பெண்ணும் பிறக்கும் என்றே அகத்தியர் பாடலில் உள்ளது....தங்கள் விளக்கம் முரண்பட்டுள்ளது...திருத்தவும்.
daily you are giving wonderful information.Long live
Post a Comment