சில தினங்களுக்கு முன்னர் வந்த மின்னஞ்சலில், சித்தர்கள் வைணவம் பற்றி ஏதேனும் கூறியிருக்கிறார்களா என்றும் வினவியிருந்தார். அவருக்கான பதிலை மின்னஞ்சலில் அனுப்புவதைக் காட்டிலும் இங்கே பதிவாக பகிர்வதால் தகவல்கள் பலருக்கும் போய் சேரும் என்பதால் இந்த பதிவு.
சித்தர்கள் சிவமயமாய் வாழ்ந்திருந்தாலும், வைணவ தெய்வங்களான மஹாவிஷ்ணு, இராமர் பற்றியும் குறிப்பிட்டிருக்கின்றனர். சிவவாக்கியர் பின் வரும் பாடலில் ராமநாமத்தின் மகத்துவத்தைப் பற்றி இவ்வாறு கூறுகிறார்.
"அந்தி காலம் உச்சி மூன்றும் ஆடுகின்ற தீர்த்தமும்
சந்தி தர்ப் பணங்களும் தபங்களும், செபங்களும்
சிந்தைமேவு ஞானமும் தினம் செபிக்கும் மந்திரம்
சிந்தை ராம ராம ராம ராம என்னும் நாமமே”
ராம! ராம! என்று செபித்துக் கொண்டிருந்தால் போதும்; வேறு எந்த பூசையோ, சந்தி, ஜெப, தபங்களோ செய்ய வேண்டியதில்லை. எல்லா நன்மைகளும், கிடைக்கவேண்டிய எல்லாப் பலன்களும் இராம நாம உச்சரிப்பினால் மட்டுமே கிடைத்து விடும் அந்தி, காலை, நடுப்பகல் ஆகிய மூன்று வேளைகளும் புண்ணிய தீர்த்தமாடுகின்ற பலன் இராம நாம உச்சரிப்பில் கிடைக்கும் என்கிறார் சிவவாக்கியர்.
மேலும் அவர் ராம நாம மகிமையை இவ்வாறு உரைக்கிறார்..
"சதாவிடாமல் ஓதுவார் தமக்குநல்ல மந்திரம்
இதாம்இதாம் இராம ராம ராமஎன்னும் நாமமே".
அகத்தியரும் விஷ்ணு மோகினி வேடம் பூண்டதை குறித்து இவ்வாறு பாடியுள்ளார்...
"பணியனையன் பாலாழி யமுர்தம் தனை
நேரப்பா பெண்ணுருவாய் தேவர்க்குப் படைத்தார்
நிகரில்லா ராட்சதர்கள் பெண்ணைப் பார்த்து
சாரப்பா மயங்கி நின்ற ரசுரர்ககளி லொருவன்"
"ஓம் நாராயணா என செபிப்போர் நமனையும் வெல்வர்" என்று திருமூலர் உரைக்கிறார்.
இதுபோல வேறு சில சித்தர்களும் திருமாலின் பெருமையையும், அவர் அவதார சிறப்புக்களையும் பாடியுள்ளனர்.
இதில் இருந்து சித்தர்கள் சிவனை தங்களின் பிரதான தெய்வமாக போற்றி இருந்தாலும், வைணவ தெய்வங்களைப் பற்றியும் அவர்தம் சிறப்புகளையும் போற்றிப் பாடியிருக்கின்றனர் என்பது தெளிவாகிறது.
இந்த வலைப்பூ ஆரம்பித்த காலந்தொட்டு பலரும் கேட்டிருந்த அல்லது எழுத வலியுறுத்தி வந்த தலைப்பினை முன்வைத்து ஒரு தொடரினை நாளை முதல் பகிர்ந்திட துவங்குகிறேன்...
காத்திருங்கள்...!

இதாம்இதாம் இராம ராம ராமஎன்னும் நாமமே"

Post a Comment

7 comments:
பலரும் கேட்டிருந்த தலைப்பினை முன் வைத்து தொடர் என்றவுடன் நாமும் கேட்டோமே அது பற்றியதாக இருக்குமோ என்ற ஒரு ஆவல். பலரும் என்பதால் அது பயன் உள்ளதாகவே இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
அன்புள்ள தோழி ,
மிக்க நன்றி
மிக்க நன்றி தோழி. மிக்க மகிழ்ச்சி.ஜெய் ஸ்ரீ ராம்.
ராதேக்ருஷ்ணா ! தெய்வக்குழந்தைக்கு....இல்லை...இல்லை...சித்தர்களின் குழந்தைக்கு . . .உன் நற்பணி தொடர பகவான் ஸ்ரீ க்ருஷ்ணனும்,சித்தர்களும் ஆசிர்வதிப்பார்களாக . . .
மிக்க நன்றி ...
ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம்
தோழி கிருஷணா மற்றம் ராம என்பன நாம் வணங்கும் கடவுள்களை குறிக்காது. இந்த உச்சரிப்புகள் அவர்களுக்கு முன்னதாகவே இருந்தன என்பதாலே அவர்களுக்கு இந்த பெயர்கள் சூட்டப்பட்டன..இவ்வுச்சரிப்புகள் தரும் அதிர்வுகளாளே நாம் பயன் அடைகிறோமே அன்றி அவர்களால் அல்ல என்பது என்னுடை தாழ்மையான கருத்து...பாலாஜி
நன்றி தோழி
இரண்டும் ஒன்றே என்று சொல்லக் கோட்டதுண்டு
"அரியும் சிவனும் ஒன்னு அறியாதவர் வாயில் மன்னு" என்ற பழமொழியும் நடையில் கோட்டதுண்டு
ஆழ்வார்களூம் நாயன்மார்களூம் போற்றியுள்ளனர் என்பதுவும் அறிந்ததுண்டு
உங்களது இந்த சித்தார்கள் பாடல் பதிவு அறுமை
குரு அருளும் திரு அருளும் உங்களூக்கு துணை நிற்க்கட்டும் வாழ்க வளமுடன்
வாழ்க நின் பணி
Post a Comment