நேற்றைய பதிவின் தொடர்ச்சியாக மற்ற ஐந்து வகை உதக நீர் பற்றிய தகவல்களை இந்த பதிவில் பார்ப்போம்.
சப்த வேதி உதகம்
வெளிர் சிவப்பான இந்த நீரில், குச்சியினை போட்டு ஒரு வாரம் வைத்திருக்க நீரில் நனைந்த குச்சியின் பகுதி கல்லாகிவிடுமாம். இதற்கான* மந்திரத்தை கூறி சாப நிவர்த்தி செய்த பின்னர் குதிரை வால் முடியில் முடிந்த பேய்ச்சுரைக் குடுகையில் சேகரிக்க வேண்டுமாம். துளியளவு திரவத்தில் வேப்பெண்ணையை கலந்து நுகர்ந்தால் வேப்பெண்ணையின் மணம் அற்றுவிடும். இதுவே ”சப்த வேதி” உதகம் என்று குறிப்பிடுகின்றனர்.இதைக் கொண்டு பாஷாணங்களை பற்பமாக்குவதுடன் காயகற்ப மருந்துகளும் தயாரிக்க முடியுமாம்.
தச வேதி உதகம்
இது அழுகிக் கிடக்கும் சகதித் தண்ணிர் போல இருக்கும், இந்த நீரில், குச்சியினை போட்டு பத்து நாள் வைத்திருக்க நீரில் நனைந்த குச்சியின் பகுதி கல்லாகிவிடுமாம். இதற்கான* மந்திரத்தை கூறி சாப நிவர்த்தி செய்த பின்னர், குதிரை வால் முடியில் முடிந்த விளாங் குடுகையில் சேகரிக்க வேண்டுமாம். துளியளவு நீரில் எலுமிச்சம் பழச்சாறு விட்டுக் கலக்கி பத்து நாள் வைக்க, எலுமிச்சம்பழ வாடை இல்லாதிருப்பின் அதுவே "தச வேதி" உதகம் என்று குறிப்பிட்டுள்ளனர். இதைக் கொண்டு இரசவாதம் செய்யலாமாம்.
மாத வேதி உதகம்
சிறிது மஞ்சள் நிறமுடன் குழ குழப்பான இந்த நீரில், குச்சியினை போட்டு முப்பது நாள் வைத்திருக்க நீரில் நனைந்த குச்சியின் பகுதி கல்லாகிவிடுமாம். இதற்கான மந்திரத்தை கூறி சாப நிவர்த்தி செய்த பின்னர் குதிரை வால் முடியில் முடிந்த இரும்புக் குடுகையில் சேகரிக்க வேண்டுமாம். துளியளவு நீரில் வசம்புத் தூளைப் போட்டுக் கலக்கி நுகர வசம்பு வாடை இல்லாதிருப்பின் அதுவே "மாத வேதி" உதகம் என்று குறிப்பிட்டுள்ளனர். இதைக் கொண்டு பாஷாணங்களை உலோகம் போல உறுதியான திண்மமாக்கலாமாம்.
மண்டல வேதி உதகம்
சிறிது பச்சை நிறமுடன் பிசுபிசுப்பான இந்த நீரில், குச்சியினை போட்டு நாற்பத்தியெட்டு நாள் வைத்திருக்க நீரில் நனைந்த குச்சியின் பகுதி கல்லாகிவிடுமாம். இதற்கான மந்திரத்தை கூறி சாப நிவர்த்தி செய்த பின்னர் , செப்புக் கம்பியினால் பேரண்டத்தைக் கட்டி சேகரிக்க வேண்டுமாம். துளியளவு நீரில் வெற்றிலைச் சாற்றை விட்டுப் பார்க்க அது முறியாதிருப்பின் அதுவே "மண்டல வேதி" உதகம் என்று குறிப்பிட்டுள்ளனர். இதைக் கொண்டு பாஷாணங்களை உலோகம் போல உறுதியான திண்மமாக்கலாமாம். இதைக் கொண்டு பாஷாணங்களை பற்பமாக்க முடியுமாம்.
அறுபது நாள் வேதி உதகம்
சிறிது கருப்பு நிறமுடன் வழுவழுப்பான இந்த நீரில், குச்சியினை போட்டு அறுபது நாள் வைத்திருக்க நீரில் நனைந்த குச்சியின் பகுதி கல்லாகிவிடுமாம். இதற்கான* மந்திரத்தை கூறி சாப நிவர்த்தி செய்த பின்னர், செப்புக் கம்பியினால் முடிந்த இரும்புக் குடுகையையில் சேகரிக்க வேண்டுமாம். துளியளவு நீரில் கற்பூர வள்ளி இலைச் சாற்றை விட்டு நுகர மணம் இல்லாதிருக்குமாம் அதுவே "அறுபது நாள் வேதி" உதகம் என்று குறிப்பிட்டுள்ளனர். இதைக் கொண்டு பாஷாணங்களை உலோகம் போல உறுதியான திண்மமாக்கலாமாம். இதைக் கொண்டு காயகற்ப மருந்துகளும், தாது புஷ்டி மருந்துகளும் தயாரிக்க முடியுமாம்.
* சாப நிவர்த்திக்கான மந்திரங்கள் தனித்துவமானவை, பதிவின் நீளம் மற்றும் சுவாரசியம் கருதி அவற்றை இங்கே பகிரவில்லை.
நாளைய பதிவில் நான் தொகுத்திருக்கும், இரண்டாவது மின் நூல் பற்றிய விவரங்களுடன் சந்திக்கிறேன்.
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...
Post a Comment



5 comments:
வாழ்த்துக்கள் தோழி தங்களின் உதக நீரின் விளக்கங்கள் அருமை. மேலும் பல நல்ல செய்திகளை உங்களிடம் எதிர் பார்கிறேன். சிறிய வேண்டுகோள் தோழி வாலை பூஜை பற்றி சொன்னிர்கள், அந்த பூஜை எல்லோரும் செய்யலாமா வாலை பூஜையை எப்படி செய்வது என்று தாங்கள் விளக்கினால் நன்றாக இருக்கும்.
நன்றியுடன்
விஜய்.ச
வாழ்த்துக்கள் தோழி தங்களின் உதக நீரின் விளக்கங்கள் அருமை. மேலும் பல நல்ல செய்திகளை உங்களிடம் எதிர் பார்கிறேன். சிறிய வேண்டுகோள் தோழி வாலை பூஜை பற்றி சொன்னிர்கள், அந்த பூஜை எல்லோரும் செய்யலாமா வாலை பூஜையை எப்படி செய்வது என்று தாங்கள் விளக்கினால் நன்றாக இருக்கும்.
நன்றியுடன்
விஜய்.ச
வணக்கம் தோழி!
மண்டல வேதி உதகம் என்ற தலைப்பின் கீழ் முப்பது நாள் என்று சொல்லியிருக்கிறீர்கள் ஆனால் மண்டலம் என்றால் 48 நாள் அல்லவா? மற்றபடி விளக்கங்கள் அருமை. வாழ்த்துக்கள். 2 வது மின்னூலைப் பற்றி அறிய ஆவல்.
அன்புத் தோழி !
தேனி மாவட்டம் கம்பம் அருகில் உள்ள சுருளிமலையில் மண்டலவேதி உதக நீர் உள்ளது. நீரினை சோதித்து பார்த்தில்லை. நண்பரும் நானும் சுருளி மலை சென்ற போது நண்பர் காண்பித்தார்.
சாபநிவர்த்தி மந்திரங்கள் பற்றி, மின்னஞ்சலில் தோழி கூற வேண்டுகின்றேன்.
தண்ணீருக்கு H2O என்பதைப்போல D2O என்று ஒரு தண்ணீர் உண்டு.அதை hevy water என்று அழைப்பர். அனு உலையில் பயன்படுத்தப்படுகிற்து. அதற்கும் உதக நீருக்கும் தொடர்பு உண்டா அறிந்தவர்கள் தெரியப்படுத்தவும். நன்றி. alrkkdi@gmail.com
Post a Comment