உதக நீர்...ஓர் அறிமுகம்!

Author: தோழி / Labels:

நீரானது மலையிடுக்குகளில் சுரந்து,கசிந்து, வழிந்து, காடுகளின் ஊடாக ஓடையாக செல்வதை பார்த்திருப்பீர்கள். இத்தகைய பயணத்தில் இந்த நீர் மலை முகடுகளில் உள்ள பள்ளங்களில், குழிகளில் தேங்கியிருப்பதைக் காண இயலும். இவ்வாறு தேங்கியிருக்கும் நீர் பற்றியதே இந்த பதிவு.

மலை காடுகளின் ஊடான பயணத்தின் போது பல்வேறு பாஷாணங்கள், உப்புகளை கரைத்துக் கொண்டு, காடுகளின் மூலிகை செடிகளுடன் ஊடான பயணத்தில் இந்த நீரின் பண்பும் தன்மையும் செறிவாக மாறியிருக்கும். மலைகளின் மேல் கிணறு போல மிக ஆழமாகவும் குறுகலாகவும் உள்ள குழிகளில் தேங்கிய இம்மாதிரியான நீர் காலப் போக்கில் வெயில்,இடி ,மின்னல் போன்ற பருவ மாற்றங்களினால் வேதி மாற்றம் அடைந்து அதி வீரியமான, சக்திவாய்ந்த , ஆற்றல் மிக்க நீர்மை பொருளான திரவமாக ஆகிவிடும்.இந்த நீரினையே சித்தர்கள் உதக நீர் என்கின்றனர்.

இதன் மகத்துவத்திற்கு உதாரணம் கூறுவதானால் இந்த நீரில் விழும் இலை கூட கல்லாய் மாறிவிடுமாம். இந்த மாதிரி திரவம் எல்லா இடங்களிலும் கிடைத்து விடாது என்றும், இதை கண்டறிவது அத்தனை சுலபம் இல்லை என்றும் சித்தர்கள் கூறியிருக்கின்றனர். மேலும் எல்லா இடத்தில் இருக்கும் உதக நீரும் ஒரே மாதிரியான வேதியல் மற்றும் பௌதீக தன்மை உடையவனாகவும் இருப்பதில்லையாம்.

இத்தகைய உதக நீரைப் பற்றி ”போகர் மலைவாகடம்”, ”கோரக்கர் மலைவாகடம்”, ”அகத்தியர் வாகடம்” போன்ற நூல்களில் விரிவாக கூறப் பட்டிருக்கிறது. இதன்படி பத்து வகையான உதக நீர் உள்ளதாகவும் அவற்றை அடையாளம் கண்டு சாபநிவர்த்தி செய்து பயன் படுத்தும் முறைகளை பாடல்களில் காண முடிகிறது. இந்த நீரை விசேடமான பாத்திரங்களில் சேமிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

விஞ்ஞானம் வளர்ச்சியடையாத ஒரு கால கட்டத்தில் பழந்தமிழர்களான சித்தர்கள், தங்களின் அரிய ஆற்றலினால் இத்தகைய விஷயங்களை அறிந்தாய்ந்து தெளிவுடன் உரைத்திருப்பதை நினைக்கும் போது தமிழனாக நாம் பெருமை அடையாமல் இருக்க முடியாது.

அடுத்த பதிவில் இந்த உதக நீரின் வகைகளைப் பற்றியும் அவற்றை கண்டறியும் முறைகளையும் , அதன் பயன்பாடுகளை பற்றியும் பார்ப்போம்.

காத்திருங்கள்....

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...



Post a Comment

4 comments:

அருட்சிவஞான சித்தர் said...

அன்புத் தோழி !
உதகநீர் பற்றி தெளிவாக கூறியுள்ளீர்கள். ஆசிகள்.
உதக நீரின் வகைகள் பற்றி தாங்கள் கூறுவதை கவனிக்க ஆவலாய் உள்ளேன்.
இவை போன்ற உண்மையான, தெளிவான விஷயங்களை சித்தர்கள் உங்களுக்கு உணர்த்துவார்கள். அதை நீங்கள் மற்றவர்களுக்கு உணர்த்துங்கள்.
வாழ்த்துக்கள்.

jagadeesh said...

அருமை. இதனால் தான் நீலகிரிக்கு உதகமண்டலம் என்ற பெயர் வந்திருக்கிறது போலும்!

praveen said...

நல்ல தகவல் , ஆனால் அத்தகைய நீரை அடையாளம் கண்டு கொள்வது எப்படி? மேலும் அதனை எப்படி பயன்படுத்த வேண்டும்? ஏதேனும் மந்திரம் சொல்லி தெளிக்க வேண்டுமா?

பிரவின்குமார் said...

அறிமுகம் அருமை. இன்னும் இதுபோன்ற தகவல்களை மேலும் அறிய ஆவல்.

Post a Comment