பசியினை வெல்ல அகத்தியர் அருளிய முறையினை முந்தைய பதிவொன்றில் பார்த்தோம். அதே வகையில் போகரின் சீடரான புலிப்பாணி முனிவர் கூறிய முறையினை இந்த பதிவில் பார்ப்போம்.
"நீர் முள்ளி விதை எடுத்து நசுக்கி
அதன் அரிசியை பசுப்பால் விட்டு அரைந்து
பசுப்பலுடன் கலந்து அருந்து
வாரம் ஒன்றாகும் வரை பசியெடுக்காதே
நாதனார் போகருட கடாட்சத்தினாலே
நலமாக புலிப்பாணி பாடினேனே"
- புலிப்பாணி -
நாயுருவி செடியின் விதைகளை சேகரித்து அவற்றை உரலில் இட்டு குற்றியெடுத்து உமி நீக்கி, அந்த அரிசியில் சிறிது பசும்பால் விட்டு மை போல அரைத்து, அந்த விழுதினை பசும் பாலில் கலந்து அருந்தினால் ஒரு வாரம் வரையில் பசி எடுக்காது என்கிறார். இதனை தன் குரு நாதர் போகரின் அருளால் கூறுவதாக சொல்கிறார்.
தீவிரமான ஆன்மீக தேடல்கள் மற்றும் ஆராய்ச்சிகளின் போது பசி என்பது ஒரு இடராக இருந்து விடக்கூடாது என்பதற்காகவே இத்தகைய உபாயங்களை சித்தர்கள் தங்களின் சீடர்களுக்கு அருளியிருக்க வேண்டும்.
இந்த பதிவின் விவரங்களை தகவல்களை பகிரும் ஒரு முயற்சியாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டுகிறேன்.
அடுத்த பதிவில் மிகவும் அரிதான “உதக நீர்” பற்றிய தகவல்களைப் பார்ப்போம்.
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...
Post a Comment



13 comments:
அருமை தோழி. நோயிலே தீர்க்கமுடியாதது பசி. அதை வென்ற சித்தர்கள், இறைவனை போல வணங்கப்பட வேண்டியவர்கள்.
நல்ல செய்தி . எனக்கு ஒரு சந்தேகம் , ஒரு வாரம் பசி எடுக்காது என்றால் , அடுத்தவாரம் அசுர பசி எடுக்குமே? பிறகு ஒரு வாரம் பட்டினி கிடந்த்தது வினாகிவிடுமே . அதற்க்கு என்ன உபாயம் ?
அது என்ன " உதக நீர்" ?
அன்புத் தோழி!
இப்பதிவில், பாடலில் நீர்முள்ளி விதை என்றும், உரையில் நாயுருவி விதை என்றும் உள்ளது.
பாடலில் உள்ள நீர்முள்ளி விதைதான் உரையிலும் வரவேண்டும். சரி செய்ய அன்போடு வேண்டுகின்றேன்.
அகத்தியர் கூறியது நாயுருவி என்பதும் சரியே.
தோழி..
குட நீர் என்றால் ஏன்ன ?
நன்றி
சதீஸ்
அது என்ன பாடலில் நீர் முள்ளி விதை ( அரிசி ) என்று இருக்க .. விளக்கத்தில் நாயுருவி ன்னு சொல்லி இருக்கீங்க ....
ஏதாவது பிழையா இருக்குமா ??
பசும்பால் க்கு துணைக்கால் விட்டு போன மாதிரி ??
@அருட்சிவஞான சித்தர்
நீர்முள்ளி என்பது நாயுருவியின் மறைபெயர் ஆகும்.
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி..
@praveen
உதக நீர் பற்றிய விவரங்கள் அடுத்த பதிவில் தருகிறேன்.
சூப்பர்
Great...
Neermulli enbathu veru,naayuruvi enbathu veru
irandum veruveru aagum
Pareetchithu vittu minnanjall anuppugiren
Post a Comment