சித்தர்களின் மேலான தெய்வம்!

Author: தோழி / Labels: , ,

பெண்மையை இழிவு செய்தவர்கள், அல்லது தூற்றியவர்கள் என்பதாகவே சித்தர்களைப் பற்றி பெரும் பாலானவர்களால் புரிந்து கொள்ளப் படுகிறது. அத்தகைய ஒரு எண்ணப் போக்கினை இந்தபதிவு தகர்த்திடும் என எதிர்பார்க்கிறேன்.

சித்தமெல்லாம் சிவமயமாய் திளைத்திருக்க, ஆதிசக்தியின் அருளும், ஆசியும் பூரணமாக தேவைப் படும். இதை உணர்ந்திருந்த சித்தர்கள், அத்தகைய ஆதிசக்தியின் அம்சம் ஒன்றினையே போற்றி பூசித்தனர்.இந்த அம்சம் பத்து வயதுக்குறிய ஒரு சின்னஞ் சிறிய பெண்ணின் அம்சம் என்பது ஆச்சர்யமான ஒன்று!, நம்மில் பலரும் அறிந்திராத ஒன்று.

இந்த உயர் தெய்வத்தைப் பற்றி கொங்கணவர் பின்வருமாறு கூறுகிறார்.

"வாலையைப் பூசிக்க சித்தரானார்
வாலைக் கொத்தாசையாய் சிவகர்த்தரானார்
வேலையைப் பார்த்தல்லோ கூலி வைத்தார்
இந்த விதம் தெரியுமோ? வாலைப் பெண்ணே!"

- கொங்கணவர் -

சித்தர்கள் வணங்கிய அந்த பால தெய்வத்தின் பெயர் வாலை என்பதாகும். ஆதி சக்தியின் பத்து வயது பெண் வடிவமே இந்த வாலை. அனைத்திற்க்கும் ஆதி காரணமான இந்த வாலை தெய்வத்தையே சித்தர்கள் அகப்புற வழிகளில் பூசை செய்தார்கள். இந்த வாலையை பூசிக்காத சித்தர்கள் யாருமே இல்லை. இவள் அருமையை போற்றிப் பாடாத சித்தர்களும் இல்லை எனலாம்.

இத்தகைய வாலை தெய்வம் நமது உடலில் இருந்து இயங்குவதை உணர்ந்து கொண்டு அவளே அனைத்திற்கும் காரண காரியமாக இருந்து ஆட்டுவிப்பதை அறிந்து எல்லாவித யோகா ஞானங்களுக்கும் அவளே தலைமைத்தாய் என்று அறுதியிட்டு உரைத்த சித்தர்கள். அவளையே போற்றி பூசித்து சித்தி பெற்றனர்.

சின்னஞ்சிறு பெண்ணான வாலையின் அருளால் சித்தியடைந்து, பின் அவளை கண்ணித் தெய்வமாக வழிபட்டு படிப்படியாக மனோன்மணித் தெய்வமாக பூசை முடித்து, இறுதியில் ஆதிசக்தியின் அருள் பெற்று முக்தி நிலையான மெய்ஞான நிலையினை அடைந்தனர். இதுவே ஞானத்தின் அதி உயர் நிலையாக கருதப் பட்டது. இந்த நிலை எய்தியவர்களே சித்த புருஷர்கள்.

வாலை பூசை என்பது என்ன?

இதன் அருமையினை அகத்தியர் பின் வருமாறு விளக்குகிறார்

"கூடப்பா துரியமென்ற வாலை வீடு
கூறரிய நாதர் மகேச்சுவரியே யென்பர்
நாடப்பா அவள் தனையே பூசை பண்ணு
நந்திசொல்லும் சிங்காரம் தோன்றும் தோன்றும்
ஊடப்பா சிகாரவரை எல்லாம் தோன்றும்
ஊமையென்ற அமிர்தவெள்ளம் ஊறலாகும்
தேடப்பா இது தேடு காரியம் ஆகும்
செகத்திலே இதுவல்லவோ சித்தியாமே
வாமென்ற அவள் பாதம் பூசை பண்ணு
மற்றொன்றும் பூசை அல்ல மகனேசொன்னேன்!"

- அகத்தியர் -

இத்தனை சிறப்பான வாலை பூசையின் இரகசியம் என்ன?

விவரங்கள் அடுத்த பதிவில்........

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

30 comments:

Anonymous said...

மிகவும் அருமை , நன் எதிர்பார்க்காத பதில் , அனைவரும் எற்றுகொள்ளவேண்டிய பதில் . இதை கூறியதற்கு நன்றி .

Unknown said...

வாலை என்பது குண்டலினியின் மறுபெயர் தான்.

சி.பி.செந்தில்குமார் said...

என் ஊரு ஈரோடு மாவட்டம் சென்னைமலை.இங்கே ஒரு சித்தர் இருந்ததா கேள்வி.ஒரு பதிவு போடுங்க

அருட்சிவஞான சித்தர் said...

சரியாகச் சொன்னீர்கள் தோழி.
முந்தைய பதிவிற்கான கமென்ட்டில் கூறியிருந்தேன். சித்தர்களின் அருளால் யாம் அறிந்த உண்மையை மெய்ப்பித்துள்ளீர்கள். நன்றி !
தொடரட்டும் சித்தர்களின் அருளாசி.

டுபாக்கூர் பதிவர் said...

பாலாம்பிகையான வாலைதெய்வம் பற்றிய தகவலுடன் ஒரு இனைப்பு

http://www.treasurehouseofagathiyar.net/15500/15580.htm

Srividhya R said...

i love baalaambaal. she is my fav diety.. i am her fav child! :)

nandhalala said...

இது போன்ற செய்திகள் மிக அரிது. தொடரட்டும் தோழியின் சேவை

Mugilan said...

அரிய தகவல் தோழி!

jagadeesh said...

@சி.பி.செந்தில்குமார்அவர் பிண்ணாக்கு சித்தர். சென்னிமலை கோவில் பின்புறம் சமாதி ஆகியுள்ளார். அவருடைய குகை இன்னும் உள்ளது. சென்று பார்த்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.

Unknown said...

உண்மையிலேயே இது ஒரு புதுமையான செய்தி எனக்கு, ஆனால் ஆதி சக்தி ஆதி மூலம் அனைத்திற்கும் ஆதியாக விளங்கக்கூடிய ஆதிபராசக்தியேதான் சித்தர்களின் மூல தெய்வமாக வாலை என்ற பெயருடன் விளங்குகிறாள் என்றே நினைக்கிறேன்.

உங்களின் இந்த பணி தொடரட்டும். விரைவில் இன்னும் பல தகவல்களை எதிர்பார்த்து அந்த சிவனின் அருளோடு காத்திருக்கிறேன். நன்றி.

Surya said...

negal solvathu unmaitan but sittargal than kadaul veru kadaul eillai

murugan said...

can i ask something tholi

murugan said...

vaasi thanil eari valam en idam mattramal thesi nadai pola thida paduvatekkalam

murugan said...

what is the meaning for this sittar padal?

murugan said...

tholi im not yet receive any anwr from you!

murugan said...

தோழி தாங்கள் சித்தர் ராச்சியம் பகுதியை இன்னும் பயன் பாட்டில் இருக்கிறதா ....காரணம் நான் கேட்ட சித்தர் பாடலுக்கு நீங்கள் பதில் கூறவில்லையே !!

murugan said...

சங்கு ஒன்று தாரை ரெண்டு சன்ன பின்ன லாகையால் மங்கி மாளுதே உலகில் மானிடர்கள் எத்தனை

சங்கையும் தவிர்த்து தாரை ஊத வல்லிரேல் கொங்கை மங்கை யூரோடு கூடி வாழ லாகுமே

murugan said...

இரவோடு பகலுமாக இருபது நடினங் கண்டால் குருபலை நாகை நாதர் கூப்பிட வருவார் நெஞ்சே

murugan said...

மாங்காய் பாலருந்தி மலை மேலிருபோர்ற்கு தேங்காய் பால் ஏதுக்கடி குதம்பாய் தேங்காய் பால் ஏதுக்கடி

murugan said...

வாசி தனில் ஏறி வலம் இடம் என மாட்ராமல் தேசி நடை போல திட படுவதேக்காலம்

Sugmad Eshwar said...

as per my knowledge was she the mother of sri chakra? tripura sundari? =)

அக்ரி ஆனந்த் மெய்மன் said...

பாலாம்பிகா மந்திரம் வேண்டும் தோழி !பதிவு செய்ய வேண்டுகிறேன்.

Unknown said...

Thanks for the information.

Unknown said...

From where u r getting this information...it is useful to know our own tradition.

Unknown said...

விவரம் தொடரும் என நிருத்திவிட்டீர் தொடர்ச்சி அறிய ஆவல். அம்பாள் உபாசனை மந்திரம் வேண்டுகிறேன்

Unknown said...

இதன் தொடர்ச்சிக்காகக் காத்திருக்கிறேன்.

aruna nandhini the tamil writer said...

pl.explain the valai puja murai..and i want a guru to teach the same.u guide me pl

aruna nandhini the tamil writer said...

mention my name as rajeswari pl

Unknown said...

Nice

Unknown said...

Super info

Post a comment