சித்தர்கள் வணங்கிய தெய்வம்...!

Author: தோழி / Labels: , ,

சித்தர் மரபியலில் குருவின் மகத்துவம், குரு வணக்கம், குரு தரிசனம் போன்றவைகளைப் இதுவரை பார்த்தோம். அந்த வரிசையின் தொடர்ச்சியாகவே இந்த பதிவுகளை வாசிக்க வேண்டுகிறேன்.

ஓமெனும் ஓங்காரத்துள்ளே ஒரு மொழி
ஓமெனும் ஓங்காரத்துள்ளே ஒரு அழகு
ஓமெனும் ஓங்காரத்துள்ளே பல பேதம்
ஓமெனும் ஓங்காரம் ஒண்முத்தி சித்தியே!

- திருமூலர் -

அனைவருக்கும் மேலான குரு இறைவனே! சாதித்த புண்ணியர்களுக்கும், சாதிக்க நினைக்கும் அனைவருக்கும் இறைவனே மேலான குருவாக இருப்பார். இதை உணர, அல்லது உணர்த்தி வழிகாட்டிட, ஒரு நல்ல மானிட குரு தேவை.

அத்தகைய உண்மையான குருவினைத் கண்டறிந்து யோகம் மற்றும் ஞான பயிற்சிகளை அறிவதுடன், அவற்றை நம்பிக்கையுடனும், வைராக்கியத்துடனும், முழுமையான அர்ப்பணிப்புடனும் தொடந்து செய்து வர வேண்டும். தொடர் பயிற்சி உள்ளவர்களுக்கே சித்தியும், ஞானமும் கிடைக்கும். விதைகளை நசுக்கி எண்ணை எடுப்பது போல ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்க வேண்டும். இவ்வாறு ஊனினை உருக்கி உள்ளொளி கண்டவர்களே சித்தர்கள்.

இந்தகைய உயர்நிலை ஆன்மாக்களாகிய சித்தர்கள் போற்றி வணங்கிய மேலான தெய்வம் எது?

சித்தர்கள் எல்லோரும் அந்த ஒரே தெய்வத்தைத்தான் வணங்கினரா?

இது பற்றி பரவலாக பல்வேறு கருத்தாக்கங்கள் இருக்கின்றன. விவாத பொருளாகவும் இது இருந்து வருகிறது. யார் எதைச் சொன்னாலும் நமக்கு கிடைத்திருக்கும் தகவல்களின் அடிப்படையில் சித்தர்கள் அனைவரும் ஒரேயொரு தெய்வத்தையே பூசித்திருக்கின்றனர்.அந்த தெய்வத்தை பூசிக்காமல் சித்திபெற்ற சித்தர் எவருமே இல்லை என்று அறுதியிட்டுக் கூறலாம்.

அத்தனை சிறப்பும் மகத்துவமும் வாய்ந்த தெய்வம் எது?

விவரங்கள் அடுத்த பதிவில்.....

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

8 comments:

Anonymous said...

அத்தனை சிறப்புவாய்ந்த தெய்வம் சிவபெருமான் என்று நினைக்கிறேன் . சரியா?

அருட்சிவஞான சித்தர் said...

அத்தனை சிறப்பு வாய்ந்த தெய்வம் சிவம் என்னும் பரம்பொருள்.
இஷ்ட சித்தி அளிக்க கூடிய பெண்பால் தெய்வம்
வாலை (எ) மனோன்மணி (எ) புவனேஸ்வரி
சரியா தோழி ?

ஆன்மா:
சரி இல்லையென்றால் அடுத்த பதிவில் தோழியே உரைப்பாள் அவசரப்படாதே.

Unknown said...

வேறு யாரக இருக்க முடியும் ? சித்தர்களுக்கெல்லாம் சித்தன் மகா சித்தன் அந்த ஈசன்.

சிவபெருமான, பரமேஷ்வரன் என்று பலவாறு அழைக்கப்படும் அந்த மூலாதாரம் சிவபெருமானதான் சித்தர்களின் மூலாதரமான தெய்வமாக விளங்குகிறார்.

ஆனால் சித்தர்களின் இஷ்ட தெய்வங்கள் வேறு வேறாக இருக்கின்றன என்றே நான் நினைக்கிறேன். அதைப்பற்றி விரைவில் சில தகவல்கலுடன் வருகிறேன்

Anonymous said...

அன்பு சகோதரி அவர்களுக்கு,
பனியின் காரணமாக தங்கள் பதிவுகளை அடிக்கடி வந்து படிக்க முடியவில்லை மின்னஞ்சல் வழியாக உங்கள் பதிவுகளை படிக்க விழைகிறேன். உதவி செய்யுங்களேன். ( FEEDBURNER SUBSCRIPTION )

Unknown said...

sivan mattumey antha kadavul.

Unknown said...

SIVAN SIVAN SIVAN

Unknown said...

http://mayamma.org/

Unknown said...

http://mayamma.org/

Post a Comment