குரு வணக்கமும்... குரு தரிசனமும்...!

Author: தோழி / Labels: , , ,

குரு வணக்கத்தின் மிக முக்கியமான பகுதி இது....

ஆத்ம சுத்தியுடன், எதிர்பார்ப்புகள் எதுவும் இல்லாது குருவருளை நாடுவோர் மட்டுமே இத்தகைய முயற்சிகளில் ஈடுபட வேண்டும். கபட எண்ணங்களை முன்வைத்து செய்யப்படும் முயற்சிகள் தோல்வியில் முடியும். சித்தர்கள் என்பவர்கள் ஆசாபாசங்களை கடந்தவர்கள். வழிபாடுகள் என்கிற பெயரிலான ஆராதனைகளை அவர்கள் விரும்புவதும் இல்லை, ஏற்றுக் கொள்வதுமில்லை. ஆனால் இன்றைக்கு பலர் ஆயிரத்தெட்டு போற்றிகளை கொண்ட பூசை முறைகளை சித்தர்களுக்கானது என கூறிவருகின்றனர்.

இனி வணங்கும் முறையினை பார்ப்போம்....

அமைதி நிறைந்த தூய்மையான, வெளிச்சம் மிகுந்த அறையொன்றில், கிழக்கு முகமாய் நாம் வணங்க விரும்பும் சித்தரின் படம் ஒன்றினை வைத்து, அதன் முன்னால் ஒரு திரியினைக் கொண்ட விளக்கு ஒன்றினை ஏற்றி வைத்திட வேண்டும். சுத்தமான குவளை ஒன்றில் நீர் நிரப்பி வைக்க வேண்டும்.ஒரு அங்குலம் விட்டமும் மூன்று மில்லிமீட்டர் தடிப்பான ஒரு செப்பு நாணயம் ஒன்றை சித்தர் படத்தின் முன்னர் வைத்திட வேண்டும்.

இப்போது சித்தரின் படத்திற்கு முன்னால் ஒரு துணி விரித்து அதில் பத்மாசனத்தில் அமர வேண்டும். பத்மாசனத்தில் அமர சிரமப் படுவோர் சாதாரணமாக அமர்ந்து கொள்ளலாம். மூச்சினை சீராக்கி, உடம்பை தளர்த்தி அமைதி நிலைக்கு வர வேண்டும். இந்த தருணத்தில் முந்தைய பதிவில் நாம் குறிப்பிட்ட மூல மந்திரத்தினை (நாம் வைத்த படத்திலுள்ள சித்தருக்குரிய) நூற்றியெட்டு முறை மனதில் மட்டுமே ஜெபிக்க வேண்டும். இந்த முறையில் தினமும் சூரிய உதயத்தின் போதும், அஸ்மனத்தின் போதும் தொடர்ந்து தினசரி இரண்டு முறை செய்திட வேண்டும்.

இந்த பூசை முறையில் சிலவற்றை ஒழுங்குடன் செய்தல் வேண்டும். ஒவ்வொரு முறையும் குரு வணக்கத்திற்கு முன்னர் குவளையில் புதிய நீர் நிரப்பிட வேண்டும். எக்காரணம் கொண்டும் மலர்களையோ, பழங்கள் அல்லது உணவு பொருட்களை படையல் போடுவது போன்றவற்றை செய்திடக் கூடாது. சித்தர்கள் புறவழிபாட்டினை வெறுப்பவர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

இந்த முறையில் குரு வணக்கத்தினை எத்தனை ஆர்வத்துடனும், ஆத்ம சுத்தியுடனும் செய்து வருகிறோமோ அத்தனை விரைவில் நாம் வணங்கும் சித்தரின் அருளாசி கிடைக்கும். நமது முயற்சியின் தீவிரத்தினை பொறுத்து குறிப்பிட்ட அந்த மகா புருஷரின் திருவுருவ தரிசனமும் கிடைக்குமாம்.

மெய்யான குருவருள் நாடுவோருக்கு இந்த முறை கிடைத்தற்கரிய ஒரு வாய்ப்பு.

இதுவரை சித்தர்களை வணங்கும் முறையினை பார்த்தோம், அடுத்த பதிவில் சித்தர்களே வணங்கிய தெய்வம் பற்றி பார்ப்போம்...



சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...



Post a Comment

11 comments:

jagadeesh said...

மிக மிக அருமை. //சித்தர்கள் புற வழிபாட்டினை விரும்பாதவர்கள்// நிறைய ஆன்மீக தேடல் உள்ளோர் சித்தர் தரிசனத்துக்காக மலர், ஆராதனை நடைமுறையில் செய்து வருகிறார்கள்.அவர்கள் பார்த்து புரிந்து கொள்ள வேண்டிய இடுகை.

Shiva said...

" சித்தர்களை காணும் " வழி முறைகளை சொல்லியது பற்றி மகிழ்ச்சி.
சித்தர்கள் மறை பொருள்/ ரகசியம் என்று உரைத்தவற்றினை ,ஸ்ரீ ராமானுஜர் திருகோட்டியூர் மதில் மேல் நின்று " ஓம் நமோ நாராயணா" என்று உலகுக்கு உரைத்தார் போல் , நீங்கள் எல்லோருக்கும் ஆகுக என்று சொல்லி இருக்கிறீர்கள். சித்தர்கள் அனுமதியுடன் தான் இதை சொல்லியிருக்க இயலும். (நீங்களே சித்தர் என்பதால் அனுமதி தேவை இல்லைதான்) "இயன்றவரை இனியவளாய்" என்பதினை ஏன் "எல்லோருக்கும் இனியவளாய்" என்று மாற்றி அமைக்க கூடாது.
"வாழ்க வளர்க்க வளமுடன்". என்னுடைய வாழ்த்துக்கள்.

praveen said...

தங்களுக்கு நன்றி கூற வார்த்தைகளே இல்லை , மிகவும் அருமை , நான் ஏற்கனவே கூறியது போல் தங்களுக்கு சித்தர்களின் ஆசி நிறைய உள்ளது . எனக்கு நீண்ட நாளாகவே அகத்தியரை நேரில் காண வேண்டும் என ஆசை , அதற்க்கு பதில் இன்று தான் கிடைத்தது . இதை போல திக்கு வாய் போவத்கற்கு மருந்து கூறினால் மிகவும் சந்தோஷபடுவேன் . நன்றி

praveen said...

ஒரு அங்குலம் விட்டமும் , முன்று மில்லிமீட்டர் செப்பு நாணயம் எங்கு கிடைக்கும்?

gopal said...

Hai Thozhi,

Have you tried? I think you must have tried and you must have got a positive response also.
Please share the experience

gopal said...

Hai Thozhi,

Have you tried. I am sure you must have tried and you must have got the positive response also.

Please share the experience

தோழி said...

@praveen

பழைய செப்பு நாணயங்கள் போதுமானது. இல்லையேல் செப்பு தகட்டினை நாணயவடிவில் வெட்டியும் பயன்படுத்தலாம்

தோழி said...

@gopal

இந்த அனுபவங்கள் விளக்குதலுக்கு அப்பாற்பட்டவை, அனுபவத்தில் உணர்வதே சிறப்பு...

அண்ணாமலை..!! said...

தங்களின் பணிகளுக்கும்,பகிர்வுகளுக்கும்
நன்றிகளும்,வணக்கங்களும்!

Uday JR said...

மிகவும் ஆர்வத்தைத் தூண்டும் கட்டுரைகள்.
இம்முயற்சிகளில் தாங்கள் அனுபவித்ததையும் பகிர்ந்துகொண்டால் மிகவும் பயனடைவோம்.
நன்றி

ganges said...

வாழ்க வளமுடன் தோழி,
எல்லாம் வல்ல இறை அருள் தங்களுக்கு துணை புரியட்டும்
வணங்கும் முறையிலோ அல்லது மனதிலோ சிறு தவறு ஏற்பட்டால் அதன் பின்விளைவு என்னவாக இருக்கும், திர்வு உண்டா
விளக்கம் எதிர் பார்க்கின்றான்

வாழ்த்துக்கள்

Post a Comment