குரு வணக்கமும், சித்தர் வணக்கமும் ஒன்றா?, என நேற்று நண்பர் ஒருவர் மின்னஞ்சலில் சந்தேகம் எழுப்பி இருந்தார். அது பற்றிய சில விவரங்களை தந்துவிட்டு நமது குரு வணக்கத்தை தொடர விரும்புகிறேன்.
சித்தர் வணக்கம் என்பது குழந்தைகள் குருகுல வாசத்தினை ஆரம்பிக்கும் போது குருவானவர் ”சித்தர் வணக்கம்” என்கிற மந்திரத்தை உச்சரித்து துவங்குவார். ‘‘ஹரி நமோத்து சிந்தம்’’ என்பதே சித்தர் வணக்க மந்திரம். நமக்கு முந்தைய தலைமுறை வரையில் பின்பற்றப் பட்ட இந்த பழக்கம் சமீப காலத்தில் வழக்கொழிந்து போய்விட்டது. மற்றபடி இந்த சித்தர் வணக்கத்துக்கும், சித்தர்கள் மரபியலுக்கும் தொடர்பிருப்பதாக தெரியவில்லை.
இன்னமும் துல்லியமாக சொல்வதானால் இந்த சித்தர் வணக்கம் சமண மதத்தோடு தொடர்புடையது என்பதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன.திருத்தக்க தேவர் என்னும் சமண முனிவர் இயற்றிய சீவக சிந்தாமணி என்னும் நூலில் கடவுள் வாழ்த்தாக முதல் பாடலை சித்தர் வணக்கம் என்று பின்வருமாறு எழுதியிருக்கிறார்.
"மூவா முதலா உலகம் ஒரு மூன்றும் ஏத்தத்
தாவாத இன்பம் தலை ஆயது தன்னின் எய்தி
ஓவாது நின்ற குணத்து ஒள் நிதிச் செல்வன் என்ப
தேவாதி தேவன் அவன் சேவடி சேர்தும் அன்றே".
எனவே இந்த சித்தர் வணக்கத்திற்கும் நாம் எழுதிக் கொண்டிருக்கும் குரு வணக்கத்திற்கும் தொடர்பில்லை.
இனி நம்முடைய குரு வணக்கத்தினை பார்ப்போம்.
நேற்றைய பதிவில் குறிப்பிட்ட சித்தர்களுக்கான மூல மந்திரங்கள் ஒவ்வொன்றும் தொடர்புடைய சித்த புருஷர்களை என்றும் தங்கள் தொடர்பில் வைத்திருக்க சீடர்கள் பயன்படுத்திய சூட்சுமமாகவே கருதப் படுகிறது. இந்த மந்திரங்களை முறையாக பயன் படுத்துவதன் மூலம் தாங்கள் முன்னெடுக்கும் எந்த ஒரு செயலுக்கும் தங்கள் குருநாதரின் அருளும், ஆசியும் கிடைப்பதுடன்....சமயங்களில் அவர்களை நேரடியாக தரிசிக்கும் வாய்ப்புக் கூட கிட்டுமாம்.
ஆமாம்! , நம்ப முடியாத செய்தி இதுதான்....என்றைக்கோ சமாதியடைந்த சித்த புருஷர்களை இந்த மூலமந்திரங்களின் துணை கொண்டு நேரில் தரிசிக்க முடியுமாம். சித்த புருஷர்களை நேரில் சந்திக்க வாய்ப்புள்ள அந்த முறையினை அடுத்த பதிவில் பகிர்ந்து கொள்கிறேன்.
காத்திருங்கள்....!

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...
Post a Comment

7 comments:
அந்த மந்திரத்தை அறிய நானும் காத்துகொண்டிரிக்க்றேன் , ஆகவே விரைவில் அதனை கூறவும் .
தமிழின் முதல் மகளிர் திரட்டி.
மகளிர் கடல்
அனுமதி அனைவருக்குமுண்டு ஆதரவு தாருங்கள்.
நன்றி.
நாமக்கல் அருகில் சேந்த மங்கலம் என்ற ஊரில்
ஸுயம்ப்ரகாஸர் என்ற அவதூதருக்கு ஆராதனை.
மனத்துள் ஒரு சிலிர்ப்பு, என்னுள்
தோழி மிக்க நன்றி. எனக்கு ஒரு சநதேகம். சித்தர்கள் பற்றி இவ்வளவு இருக்க, சில மருத்துவர்கள் சித்த வைத்தியம் என்ற பெயரில் “குழந்தை பேறு ” பற்றி மட்டும் கூறி வருகிறார்கள். சித்தர்கள் “மலடு” பற்றி ஏதேனும் கூறி உள்ளார்களா? சற்று விளக்கமாக கூறவும்...
(கூறும் பாடல் எதேனும் உண்டா?)
மிக்க நன்றி...
@ram
சித்தர்கள் ராச்சியம் பதிவினை வாசித்து வாருங்கள். தங்களின் கேள்விகளுக்கான விடைகள் கிடைக்கும்..
vவித்யாசமான வலைத்த்ளம்,புதிய கருத்துக்கள்
உங்க மெய்ல் அட்ரஸ் என்ன?விருப்பமிருந்தால் தரவும்.cpsenthilkumar20@gmail.com and ph no 9842713441
Post a Comment