காயந்திரி மந்திரம் மறைந்ததா?,மறைக்கப் பட்டதா...?

Author: தோழி / Labels: , ,

காயத்ரி மந்திரம் என்பது அநேகமாய் நம் எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான்....ஆனால் இந்த தொடர் அது பற்றியதல்ல, தலைப்பை இன்னொரு முறை தீர்க்கமாய் படித்துக் கொள்ளுங்கள்.

குறிப்பிட்ட சில சொற்கள் அல்லது அட்சரத்தை ஒரே சீரான கதியில் திரும்பத் திரும்பச் சொல்லிட அந்த ஒலி அதிர்வுகள் சக்தியாய் உருமாறி ஜெபிப்பவரின் உடலையும் , உயிரையும் கவசம் போல காக்கிறது. இதுவே மந்திரங்களின் அடிப்படை தத்துவம்.

இத்தகைய மந்திரங்களில் தலையாயதாக கருதப் படுவது காயத்ரி மந்திரம். இதை தொடர்ந்து முறையாக ஜெபித்து வருபவர்களுக்கு நலத்தையும், வளத்தையும் அருளக் கூடியது. மேலும் இவர்களுக்கு எந்த தீங்கும் நேராது என்கிற நம்பிக்கையும் உள்ளது.

காயத்திரி மந்திரத்தை ஜெபிப்பவரின் மனம், வாக்கு , காயம் ஆகியவற்றால் செய்த பாவங்களை அகற்றி பிரம்மத்தை உணரவைக்கும் என்றும் கூறப் படுகிறது.ஞானத்தின் உயரிய நிலையான பிரம்மத்தையே உணரவைக்கும் வல்லமை கொண்டு விளங்குவதால் இந்த காயத்ரி உபதேசத்தை "பிரம்மோபதேசம்" என்றும் கூறுகின்றனர்.

"வேத சாஸ்திரங்களில் நான் காயத்ரியாக இருக்கிறேன்" என்று பகவத்கீதையில் பகவான் கிருஷ்ணர் கூறுவது இதன் மகத்துவத்தை உணர்த்தும்.

இத்தனை பெருமை வாய்ந்த காயத்திரி மந்திரத்தை உலகுக்கு அளித்தவர் விசுவாமித்ர முனிவர். இவர் காயத்தையே(உடலை) திரியாக எரித்து மாகா மந்திர சக்தியான காயத்திரி மந்திரத்தினால் வேத மாதாவான காயத்திரி அம்மனை தரிசித்து எண்ணற்ற சித்திகளைப் அடைந்து பிரம்மரிஷி என்ற பட்டம் பெற்றவர்.

விசுவாமித்ர முனிவரால் அருளப்பட்ட காயத்ரி மந்திரம் இதுதான்...சமஸ்கிருத மொழியில் அமைந்திருக்கிறது இந்த மந்திரம்....

"ஓம் பூர்: புவ: ஸுவ:
தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ: யோந: ப்ரசோதயாத்"

இத்தனை சிறப்பான காயத்ரி மந்திரம் பற்றி திருமூலர் தமிழில் இப்படி சொல்கிறார்...

காயத்திரியே கருது சாவித்திரி
ஆய்தற்க்குவப்பவர் மந்திரமாங்குன்னி
நேயத்தேர்ரேறி நினைவுற்று நேயத்தாய்
மாயத்துள் தோயா மறையோர்கள் தாமே!

- திருமூலர் -

இந்த இடத்தில்தான் நெருடல் வருகிறது. பொதுவாக சித்தர்கள் மந்திரங்கள் அனைத்துமே தமிழிலேயே இருக்கின்றது அப்படி இருக்க திருமூலர் சொல்லும் காயத்திரி மந்திரம் வேதங்களில் சொல்லப்பட்ட சமஸ்கிருத காயத்ரி மந்திரமா? அல்லது சித்தர்கள் தங்களுக்கென தனியான காயத்ரி மந்திரம் சொல்லி இருக்கிறார்களா? அப்படி சொல்லி இருந்தால் அது என்ன?

காத்திருங்கள்.....விவரங்கள் அடுத்த பதிவில்.....

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

20 comments:

மங்கை said...

அற்புதமான விஷ்யம்... ஆர்வத்தை தூண்டும் விஷயங்களா போட்டுட்டு வரீங்க... அடுத்த பதிவை படிப்பதற்கு ஆவலா இருக்கேன்

ம.தி.சுதா said...

"ஓம் பூர்: புவ: ஸுவ:
தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ: யோந: ப்ரசோதயாத்"

சகோதரி இது உண்மையில் மிக்க சக்தி வாய்ந்த மந்திரம். நான் சுத்தமாக இருக்கும் தருணங்களில் 108 தரம் சொல்லிக் கொள்வேன். வன்னியில் பல தடவை என் உயிர் காப்பாற்றப்பட இதுவும் ஒரு காரணம் என நினைக்கிறேன். இது ஓதும் முறை பற்றி ஒரு பெரியவர் சொன்னதை நளைய பதிவில் இடுகிறேன்.

jagadeesh said...

அருமை! நான் காட்டுக்குச் சென்று தவமிருந்தால் கூட இப்படி ஒரு செய்திகள் எல்லாம் கிடைக்காது. மிக்க நன்றி.

நரசிம்மரின் நாலாயிரம் said...

unga padiva copy panna mudiyavillai
copy panni offline-la padikkalaam enrirnden.
adiyaargal sottu adiyaargalukke copy set pannunga

om boo buva - meaning?

praveen said...

இந்த பதிவை படித்தவுடன் எனக்கு ஒரு சந்தேகம் , அதாவது காயத்திரி மந்திரத்தை தமிழில் கூறினால் சிறந்ததா அல்லது சமஸ்கிரத்தில் கூறவது சிறந்ததா? விளக்கவும் .

தோழி said...

@praveen

தகவல்களை பகிர்ந்து கொள்வது மட்டுமே இந்த பதிவுகளின் நோக்கம்... வருகைக்கும், கருத்திற்கும் நன்றி..

Ashvinji said...

சுவாரஸ்யமான செய்திக்கு நன்றி தோழி.
அடுத்த பதிவிற்கு காத்திருக்கிறேன்.

RAVINDRAN said...

நன்றி

சங்கர் நாராயண் @ Cable Sankar said...

arumai.

JK said...

Dear Friend,
I am new visitor to the site and i am very much interested to know your interest in Sithargal songs and your messages to all

I request you to send me a copy of Sivavakiyar song to my mail.

JK said...

kripa_1987@yahoo.co.in

MRBROTHERS said...

Sir/ Mam
i am a new visitor the site.
i like that this message.
which is the best of kayathiri Manthiram
tamil or samaskirutham
pls
firstpall how to findout the
orginal or duplicate.

Siva Vakkiyar said...

http://cmmurugesan.blogspot.in/

Suresh Kesavan said...

@தோழி

திருமூலர் அருளிய இந்த காயத்ரி மந்திரம் எத்தனையாவது பாடல். தயவுசேய்து கூறவும்......

Srinivasan Rajagopalan said...

@praveen
You hv to chant any manthra as told by the author. Very simple.

Sakthi Videos said...

arumaiyaka irukirathu

Sakthi Videos said...

nanraka irukirathu

varathan said...

பயனுள்ள பல தகவல்கள்
தங்கள் பணி மேலும் தொடரட்டும்.
வாழ்க வளமுடன்...

Hannah Samuel said...

you said in Tamil there are 5 versions of Gayatri mantra. Which are they?

Subramani Murugesan said...

அன்பு சகோதரியே! இதர மந்திரங்களையும் பகிருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

Post a Comment