பழந்தமிழர்கள் ஐந்து வகையான காயந்திரி மந்திரங்களை பயன் படுத்தியதாக தெரிகிறது. இந்த மந்திரங்களை எவரும் பயன் படுத்தலாம் என்கின்றனர். கருவூரார் அருளிய காயந்திரி மந்திரத்தினை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.
"ஓம் பூர்வ புலன்கள் சுவை ஆகுக.!
தத்துவ வித்துக்கள் அரணாகுக.!
பாரின்கோ தேவர்கள் வசிக்கும் தீ மகிழட்டும்.!
தீயே யோகப் பரஞ்சோதி ஆகட்டும்.!"
இதன் உச்சரிப்புகள் நாம் இப்போது புழக்கத்தில் வைத்திருக்கும் காயத்ரி மந்திரத்தின் ஓசைகளை ஒத்திருப்பதை எவரும் அவதானிக்கலாம். இதன் மகத்துவத்தை காகபுசுண்டர் பின் வருமாறு கூறுகிறார்
"மவுனமே இப்படித்தான் செய்யும் பொய்யோ
வாய்க்குமல்லோ காயந்திரி வலுவே செய்யும்
கெவுனமே மேல்கிளப்பும் தொழிலே தானே
கேசரத்தில் ஏற்றி வைக்கும் சித்தி தானும்
மவுனமேயென்று சொன்னார் முன்னோரெல்லாம்
வந்தவர்கள் கண்டு கொண்ட வகையிதாமே
ரவிதனை மறவாமல் நோக்கி நோக்கி
காயத்ரி செபஞ்செய்து இருந்து பாரே"
- காகபுசுண்டர் -
இந்த காயந்திரியை பயன்படுத்தி எவ்வாறு பலனடைவது என்பதைப் பார்ப்போம்..
காயந்திரி சூரியனை நோக்கி சொல்லப் படும் மந்திரம். அதிகாலையில் சூரியன் உதிக்கும் முன்னர் சூரியனை பார்த்தபடி நின்று கொண்டோ, அல்லது பத்மாசனத்தில் அமர்ந்தோ ஆத்ம சுத்தியுடன் நூற்றியெட்டு முறை மனதுக்குள் உச்சரித்து ஜபம் செய்ய வேண்டும். உடலும்,உதடும் அசையாமல் மனதை ஒரு நிலைப் படுத்தி உச்சரிப்பதே சிறப்பு.
இந்த மகா மந்திரத்தினை காலையிலும், மாலையிலும் தொடர்ந்து ஜெபித்து வர ஆத்மா தன்னிலையறிந்து, பக்தி, தொண்டு, யோகம், தியானம், சமாதி என்கிற ஐந்து உயர் நிலைகளும் சித்திக்கும். இதனை காலையும் மாலையும் தொடர்ந்து செய்வதே சிறந்தது.இந்த மகா மந்திரமே எந்த நிலையிலும் அருள்தரக் கூடியது என்றும், இது நம் காயத்துக்கு (உடலுக்கு) திரியாக (உயிர்) இருந்து காக்கும் என்று கூறியுள்ளனர் சித்தர்கள்.
இதன் மகத்துவம் உணர்ந்து, நாமும் உயர்ந்து, மற்றவர்களையும் உயர்த்திடுவோம்..
வேறொரு தகவலுடன் அடுத்த பதிவில் சந்திக்கிறேன்...

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...
Post a Comment

7 comments:
m ok
I see !!, Your writting could change the world that you want. Express your thoughts!!. Politics , Business , Entertainment , Sports & Games , Life & Events ,and Health what else?. Meet your like minded here. The top social gathering in one place all the top notches meet here. It is not about win the race, participation is all matters. We proud inviting you to the the internet's best Social community. www.jeejix.com .
wow, great
@Lakshmanan
என்னிடம் இருக்கும் தகவல்களின் படி பூர்வபலன் என்பதே சரியானது...
காயத்ரி மந்திரம், ஒரு குருவிடம் இருந்து தீட்சை பெற்றுதானே உபயோகப்படுத்தவேண்டும்? இல்லை, இந்த வலைப்பதிவில் படித்து அப்படியே உச்சரிக்கலாமா?
@Inquiring Mind
குருமுகமாய் பெறுவது சிறப்பு.....குருவினை மனதில் தியானித்தும் இதனை சொல்லலாம்..
காயத்ரி மந்திரம் பற்றிய பின்வரும் பதிவுகளையும் பாருங்கள்: http://yogicpsychology-research.blogspot.com/2011/11/blog-post_05.html
Post a Comment