காயந்திரி மந்திரம் மறைந்ததா?, மறைக்கப் பட்டதா...? - 02.

Author: தோழி / Labels: ,

கொஞ்சம் தயக்கத்துடன் இந்த பதிவினை எழுதுகிறேன். இந்த கருத்துக்கள் அனைத்துமே கடுமையான விமர்சனம் அல்லது விவாதங்களை உருவாக்க கூடியவை. எனவே பதிவின் சாரத்தினை ஒரு தகவல் பகிர்வாக மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டுகிறேன், பிழையிருப்பின் சுட்டிக் காட்டினால் திருத்திக் கொள்ளவும், வருத்தங்களை தெரிவிக்கவும் தயாராக இருக்கிறேன்.

பழந்தமிழகத்தில் சாதியில்லை, மதம் இல்லை, இயற்கையையே வணங்கினர். மொழி சிறந்து, கலைகள் மிளிர்ந்து, நுட்பங்கள் உயர்ந்திருந்தன. ஆணும், பெண்ணும் சமூகத்தில் சம அங்கமாய் வாழ்ந்திருந்தனர். ஆதியில் இதுவே மெய்யான தமிழர் பண்பாடு மற்றும் கலாச்சாரமாய் இருந்தது.

விந்திய மலைக்கு தெற்கே ஆரியர்கள் மற்றும் களப்பிரர்களின் அழுத்தமான சுவடுகள் பதிய ஆரம்பித்த பின்னர் அவர்களின் கலாச்சாரம் தமிழர்களின் மீது வலுவாக திணிக்கப் பட்டது.இன்றைய நமது தமிழும், கலாச்சாரமும் இந்த இரு பிரிவினரின் பாதிப்புகளின் எச்சம்தான்.

தமிழின் நுட்பங்கள் மற்றும் செறிவான மொழியியலை தாங்கள் உணர்ந்து கொள்ளும் பொருட்டு உருவாக்கப் பட்டதே சமஸ்கிருதம்(சம - இணை , கிருதம் - மொழி ) என்கிற சர்ச்சையான கருத்து உள்ளது. காலப் போக்கில் இவ்வாறு மொழி மாற்றம் செய்யப் பட்டவைகளை ஆரியர்கள் தங்களுடையதாகக் கூறி அவற்றில் தங்களின் கற்பனாவாத மூட நம்பிக்கைகளை உட்புகுத்தி, கடவுளின் பிரதி நிதிகளாக தங்களை நிறுவிக் கொள்ளும் முகமாக சடங்குகள், வழிபாட்டு முறைமைகள், பாவபுண்ணிய தீர்மானங்களை தமிழர்களின் மீது திணித்தனர்.

இன்னும் தெளிவாக சொல்வதாயின், பரிதிமாற்கலைஞரின் ”தமிழ்மொழியின் வரலாறு” என்ற நூலின் எட்டாவது பக்கத்து வரிகளைத் தருகிறேன்....

“தமிழரிடத்திருந்த பல அரிய விஷயங்களையும் மொழிபெயர்த்துத் தமிழர் அறியுமுன்னரே அவற்றைத் தாமறிந்தன போலவும், வடமொழியினின்றுமே தமிழிற்கு அவை வந்தன போலவும் காட்டினர்"

இது தொடர்பாக மேலதிக தகவல் வேண்டுவோர், புலவர் அறிவுடைநம்பி, சிலம்பு நா.செல்வராசு மற்றும்மொழியியல் அறிஞரான Avram Noam Chomsky ஆகியோரின் நூல்களை வாசித்தறியலாம். இனையத்தில் கூட இது பற்றிய தகவல்கள் காணக் கிடைக்கின்றன. இந்த பதிவின் நோக்கம் அவற்றையெல்லாம் அலசுவதில்லை.

தமிழில் இருந்து இவ்வாறு மொழிமாற்றம் செய்யப் பட்டவைகளில் ஒன்றுதான் காயத்ரி மந்திரம் என்ற கருத்து உள்ளது. காயம் = உடல், திரி = உயிர், மந்திரம் = காக்கும், உடலையும் உயிரையும் பேணிக் காக்கும் கவசம் காயந்திரி மந்திரம் எனப்படுகிறது. இந்த மூல மந்திரத்தின் மொழிபெயர்ப்பு அல்லது இனையான உச்சரிப்புகளைக் கொண்டதே தற்போது புழக்கத்தில் இருக்கும் காயத்திரி மந்திரம் எனப்படுகிறது. இந்த மந்திரம் காலம் காலமாக குருமுகமாக மட்டுமே உபதேசிக்கப் பட்டு வந்தது... பரவலாக அறியப் படாமல் காயந்திரி மந்திரம் மறைந்து போனதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.

காயந்திரி மந்திரம், அதனை பயன்படுத்தும் வகையினை அடுத்த பதிவில் காண்போம்...

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...



Post a Comment

10 comments:

prasaad said...

ஆன்மிகத்துடன் தமிழுக்கும் உரிய இடத்தை கொடுக்கிறீங்க அத்துடன் ஒன்று சொல்ல விரும்புகிறேன் உண்மை, விமர்சனத்துக்கு விதிவிலக்கானது அல்ல

போகன் said...

இது தமிழில் மிகைப் படுத்தப் பட்டு கூறப்படும் ஒரு கூற்று எனத் தோன்றுகிறது.நானும் இது பற்றி எனது தளத்தில் எழுதி இருக்கிறேன்.தமிழில் இருந்து நிறைய நூல்கள் மொழி பெயர்க்கப் பட்டன.அதே போல் வடமொழியில் இருந்தும்.இரண்டுக்கும் இடையே ஏற்பட்ட போட்டி பல்லவர் காலத்துக்கு பின்னால் வந்தது.ஆனால் அதற்கும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இரண்டு மொழிகளும் இசைந்து இருந்திருக்கின்றன.சித்தர்கள் பலர் தமிழர் அல்ல.நீங்கள் குறிப்பிட்ட திருமூலர் தமிழர் இல்லை.காச்மீரத்தில் இருந்து வந்தவர்.அவர் தமிழராக 'மாறிய' கதை அவர் நூலிலேயே வருகிறது.காயத்ரி மந்திரம் மட்டுமல்ல தாந்திரீகம் போன்ற அவர் கூறும் பல விசயங்கள் காச்மீரச் சைவத்தில் உள்ளவை.ஆனால் நீங்கள் சொல்வது போல அறுதியாக நாம் எதையுமே சொல்ல முடியாதுதான்.அடுத்த பாகத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

D.Gajen said...

It is intrusting...
Continue your research...!

மங்கை said...

தெரியாத பல தகவல்களை இன்று படித்து அறிந்து கொண்டேன்... ஆர்வத்தை இன்னும் அதிகமாக்குகிறது....ஆரிய ஆக்கிரமிப்பினால் இன்னும் நாம் எதை எல்லாம் நமக்கு தெரியாமலே இழந்து இருக்கோமோ

ம.தி.சுதா said...

வாழ்த்துக்கள் சகோதரி உங்க ஆய்வுக்கிடையில் புகுந்ததற்கு மன்னிக்கவும். எனது அனுபவத்தை வைத்து இம்மந்திரம் பற்றி எழுதியிருக்கிறேன். எனக்கு தெரியாத பலவிடயங்கள் இருக்கிறது. முடிந்தால் முழுவதையும் உலகறியச் செய்யுங்கள்.

Tamilan said...

எப்பொழுது தான் இந்த தமிழர்கள் மாறுவார்களோ , முருகா , ஞானபண்டிதா , காப்பாத்துப்பா எல்லோரயும் !!.
அன்புதோழி , முதலில் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால் , இந்த ஆரியன் , திராவிடன் எல்லாம் கிறிஸ்தவ ஆங்கிலேயர்கள் உருவாக்கியது ,
கிழே கொடுத்துள்ள இணைப்பை படியுங்கள் தெரியும் .

http://www.stephen-knapp.com/death_of_the_aryan_invasion_theory.htm

http://jayasreesaranathan.blogspot.com/2009/10/vedic-roots-of-early-tamil-culture.html

Tamilan said...

தோழி, இந்த பகுதியையும் படியுங்கள் .
http://thamizhan-thiravidana.blogspot.com

karuppu said...

good

Inquiring Mind said...

தமிழின் ஆறியப்பட்ட முதல் இலக்கண நூல் தொல்காப்பியம்.. அந்த தொல்காப்பியம் எழுதியவர் நீங்கள் சொல்லும் "ஆரியர்"..

அந்த தொல்காப்பியத்தில், வடமொழி பற்றியும், வடமொழி சொல்லை எப்படி உபயோகப்படுத்துவது பற்றியும் கூறியிருக்கிறார்..

நீங்கள் சொல்லும் "ஆரியர்" பற்றி எதுவும் கூறவில்லை..

காரணம் ஆரியர் என்பது உயர்ந்தோர் என்னும் பொருளில் குறிக்கும்.. அது ஒரு இனமல்ல..

கிறித்துவ மிஷனரிகளின் வரவால், ஐரோப்பிய இனவாதம் இங்கு தலைதூக்கியது.. அதற்கு முன் இன்வாதம் இல்லை, மொழிவாதம் இல்லை.. மதவாதமும் இல்லை..

இன்று சொல்லும் இந்து மதம் கூட, 200 வருஷத்துக்கு முன்பு வரை இல்லை.. சைவம், வைண்வம் போன்றவைதான் இருந்தது.. அதில் பிராமணர்கள் ஒரு பிரிவினர் மட்டுமே.. அவர்களும் தமிழ்தான் பேசினர்..

பிராமணர்கள் எங்குமே சமஸ்கிருதம் பேசியதாக வரலாறு இல்லை.. சமஸ்கிருதம் அறிவியலுக்குண்டான ஒரு மொழி.. பேசுவதற்குண்டானது அல்ல..


நீங்கள் சொல்லும் பரிதிமாற்கலைஞரின் உண்மையான பெயரே, சூரிய நாராயண சாஸ்திரியார் என்பது.. ஆரிய வர்க்கத்தை சேர்ந்தவர்.. அவர் தமிழில் பெயர் வைத்தார் என்பதற்காக தமிழர் ஆகிவிடுவாரா?

நீங்கள் சித்தரியலில் ஆழ்ந்த ஞானம் உடையவர் .. ஆனால் அதை இதுபோன்ற தமிழ் இனவாதத்தால், சிறப்பு குன்ற செய்து விடாதீர்கள்..

Inquiring Mind said...

பழந்தமிழகம் மட்டுமல்ல.. பாரதம் முழுவதுமே ஆணும் பெண்ணும் சமமாக நடத்தப்பட்டுள்ளனர்..

ஒரு எடுத்துக்காட்டை இங்கு கூறுகிறேன்..

கிரஹஸ்த மடங்களான பாரம்பரிய் ஆதி சைவ மடங்களில், ஒருவர் குருவாக தன் மனைவியுடன் சேர்ந்தே பட்டம் சூட்ட முடியும்.. அதுவும் அவர் குழந்தை பெற்றிருக்க வேண்டும்..

அதே போலத்தான் வைஷ்ணவ மடங்களிலும்..

முன்னோர்களுக்கு சிரார்த்தம் கொடுக்கையில், மனைவியுடன் சேர்ந்தே கொடுக்க வேண்டும் என்பது விதி..

பெண்ணடிமைத்தனம் என்பது நமது சமூகத்தில் இல்லை.. இது பிரிட்டிஷ் ஆதிக்கத்தில் தோன்றிய மேற்கத்திய பொய்யான பரப்புரை..

இந்த வாதத்தை நான் எளிதாக கிராம சூழ்நிலைகளை வைத்து முறியடித்தேன்..

கிராமத்தில் இன்றும் நாற்று நடுவது, களை எடுப்பது போன்ற பல வேலைகள், வெள்ளாளர் மற்றும் இதர ஜாதிகளின் பெண்களே செய்து வருகின்றனர்..

எனக்கு தெரிந்து செட்டியார் கடைகளில், கணவனும் மனைவியும் சேர்ந்தே கடையை நிர்வகிப்பர்..

வெள்ளாள சமூகத்தில், பெண்களே மாடு கன்றை பராமரிப்பர்..

கிராமத்தில் மருத்துவச்சி இருந்துள்ளனர்..

தேவதாசிகள் கோயில் மானியத்தில் உரிமையும் பங்கும் பெற்றிருந்தனர்.. கலைகளில் சிறந்த ஞானம் பெற்றிருந்தனர்.. குடும்ப அமைப்புகளில் இருந்த கட்டுப்பாடு இல்லாமல், சுதந்திரம் பெற்றிருந்தனர்.. தான் விரும்பியவருடன் வாழும் சுதந்திரம் இருந்தது..
(இவர்களை சட்டம் போட்டு அழித்து நடுத்தெருவுக்கு கொண்டுவந்தது, இந்திய சரசாங்கமே)..

நமது பாரம்பரிய சமூகத்தில் குடும்ப தொழிலே இருந்தது.. அந்த குடும்ப தொழிலில் கணவனுக்கும், மனைவிக்கும் சமமான உரிமையே இருந்தது..

கல்யாணம் செய்யும்பொழுது, பெண்ணுக்கு சீதனமாக அந்தந்த சமூகங்கள் தங்கள் தொழிலுக்கு தகுந்த மாதிரி கொடுத்தனுப்பும்..
உதாரணமாக வெள்ளால சமூகத்தில், விதை நெல்லும், மாடு கன்றும் சீதனமாக கொடுத்தனுப்பினர்.. புதியதாக தொடங்கும் வாழ்க்கைக்கு பெண்வீட்டாரும் சம பங்கை அளிக்கும் ஒரு வகை..

ஆனால், பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி அடக்குமுறைக்கு பின், ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தில் அடிமை வேலை செய்வது கௌரவம் என்றானது.. அப்பொழுதுதான், Dowry ஆரம்பித்தது.. (வரதட்சினை என்று சொல்வது தவறான மொழிமாற்றம்..)

இன்று பெண்கள் கார்ப்பரேட் கம்பெனியில் வேலை செய்தால், முற்போக்கு.. பாரம்பரிய தொழில் செய்தால் அடக்கு முறை என்று பொய்யான பரப்புரை கட்டவிழ்த்து விடப்பட்டு இன்று இளைய தலைமுறையில் ஒரு அபாயகரமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது..

அதன் ஒரு வெளிப்பாடுதான் தங்களின் இந்த கட்டுரையில் பார்க்கிறேன்..

Post a Comment