பிரணவ மந்திரமான ”ஓம்” காரத்தில் இந்த ஓரெழுத்து மந்திரம் ஊமை எழுத்தாக உள்ளது என்கிறார் கொங்கணவர்.
சிவவாக்கியரோ "அஞ்செழுத்தில் ஒரேழுத்து " என குறிப்பு தருகிறார். அதாவது ந ம சி வா ய என்கிற ஐந்தெழுத்தில் ஓர் எழுத்து என்கிறார்.
திருமூலரோ ”நாயோட்டு மந்திரம் நமனை வெல்லும்” என்கிறார். அது சரி!, நாயை எப்படி விரட்டுகிறோம்.....!
”ச்சீய்”....!
ஆம்! , இத்தனை மறைவாக சித்தர்கள் குறிப்பிட்ட அந்த ஓரெழுத்து மந்திரம் “சி” என்பதாகும். இதனை ”சி”காரம் என்றும் குறிப்பிடுகின்றனர்.
ஓம் என்கிற ஓங்காரத்தில் இந்த ”சி” ஊமை எழுத்தாய் இருக்கிறது என கொங்கணவர் ஏன் சொன்னார்?
இதற்கான விளக்கம் பின்வரும் சிவவாக்கியர் பாடலில் கிடைக்கிறது.
அகாரம் என்னும் அகரத்தில் அவ்வு வந்துதித்ததா?
உகாரம் என்னும் அகரத்தில் உவ்வு வந்துதித்ததா?
அகரமும் உகாரமும் சிகாரமின்றி நின்றதா?
விகாரமற்ற யோகிகள் விரிந்துரைக்க வேணுமே?
அகாரமாகிய ”அ”வ்வும், உகாரமாகிய ”உ”வ்வும் சிகாரமாகிய ”சி”வ்வும் இல்லாமல் இனைய முடியாது. இது எப்படி என்பதை யோகி ஒருவரே உபதேசிக்க வேண்டும் என்கிறார். இந்த ரகசியம் காலம் காலமாய் குருமுகமாவே வழங்கப் படுகிறது. இதனையே குரு உபதேசம் என்கின்றனர்.
அடுத்த பதிவில் வேறொரு தகவலுடன் சந்திக்கிறேன்...
Post a Comment



10 comments:
இந்த ஓர் எழுத்து மந்திரத்தை எவ்வாறு ஓதுவது சி... சி... சி..... சி.......... சி......... என்றா ஓதுவது தயவு செய்து விளக்கவும்?????????????
@prasaad
இதைமௌன மந்திரம் என்று சொல்வர். எனவே இதை மௌனமாய் மனதுக்குள் ஜெபிக்க வேண்டும்.. நன்றி..
Thanks for ur useful information
எனது கேள்விக்கு விளக்கம் தந்தமைக்கு நன்றி
தோழி விளக்கத்திற்கு நன்றி
அப்படியானால் நான் சொன்னது சரிதானே தோழி
நன்றி தங்களின் விளக்கமான பதிவிற்கு.
ஆனால் இந்த ஓரெழுத்து மந்திரத்தை நாம் பயன்படுத்தமுடியாது. காரணம் இதன் உள்ளர்த்தமும் உள்ளாக்கமும் சித்தர்களுக்கும் ஞானிகளுக்கும் யோகிகளுக்குமே தெரிந்தது. இந்த மந்திரம் குரு உபதேசம் மூலமே அறிந்து பின்னர் ஜபிக்கவேண்டிய மந்திரமாகும் இந்த ஓரெழுத்து மந்திரம் "சி"
சிவாய நம என்ற இந்த தாரக மந்திரத்தின் ஓவ்வொரு எழுத்தின் மகிமையும் விளக்கத்தையும் விரைவில் எனது வலைப்பூவில் பதிக்கிறேன்.
நன்றி தோழி
ஓம் நமசிவாய என்னும் மந்திரத்திற்கும்
நமசிவாய என்னும் ஐந்தெழுத்திற்கும்
உள்ள ஒற்றுமைதனை அழகாக
உணர்த்துகிறார் திருமுருக கிருபானந்த வாரியார் அவர்கள்.
அவர் எழுதிய எந்த நூலிலும் ஏதேனும் ஒரு பக்கத்தில் இவ்விளக்கங்களைக்
காணலாம்.
அ உ ம் சேர்ந்த ஓம்காரம் பிரணவம்.
பிரணவத்தில் யாவையும் அடங்கும்.
உங்கள் ஒவ்வொரு பதிவும் ஒரு முத்தாகப் பரிணமிக்கிறது.
ஆசிகள்.
சுப்பு ரத்தினம்.
http://kandhanaithuthi.blogspot.com
விளக்கம் அருமை தோழி
தேடினேன் மவுனத்தை என்னில்
8- ம் 2 - ம் விடை என கண்டால்
குரு அருளால் நாத ஒலி பேசும்
அங்கு நஞ்சு இனிக்கும்.
eppadi oru ezhuthai solvathu enru sollungal tozhi pls
perfect site,
Thanks a lot
Post a Comment