அகத்தியர் அருளிய பசியை வெல்லும் முறை.!

Author: தோழி / Labels: ,



மானிட வாழ்வின் மிகப் பெரிய நோய் பசி. இன்று வரை தீர்க்க இயலாத நோயும் இதுதான்.

ஔவையார் பசியின் கொடுமையை இப்படிச் சொல்கிறார்....

மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை
தானம் தவம் உயர்ச்சி தாளாண்மை – தேனின்
கசிவந்த சொல்லியர் மேல் காமுறுதல் பத்தும்
பசிவந்திடப் பறந்து போம்.

பசி வர... மானம், குலம், கல்வி, வன்மை, அறிவுடமை, தானம், தவம், உயற்சி, தாளாண்மை, காமம் என்கிற பத்தும் பறந்து போகுமென்கிறார்.

இத்தனை கொடிய பசிப் பிணியினை வெல்லும் மருந்தொன்றை அகத்திய மாமுனி தனது பாடல் ஒன்றில் பின்வருமாறு கூறுகிறார்.

"தானென்ற நாயுருவி வித்து தன்னை
தன்மையினால் முலைப்பாலில் உரைத்து மைந்தா
பானென்ற பசுப்பாலில் கரைத்துக் கொண்டு
பாங்கான எட்டிவிரை உரைத்துக் கொண்டு
தேனென்றே தியானித்துக் கொண்டாயாகில்
செவ்வியை வயிறு பசி எடுப்பதில்லை
நானென்று எத்தனை நாள் இருந்தாலுந்தான்
நளினமுடன் பசியாது மைந்தா பாரே"

- அகத்தியர் -

நாயுருவி வித்து எடுத்து முலைப்பால் விட்டு அரைத்து எடுத்துக் கொண்டு, எட்டி விதை ஒன்றையும் அரைத்து எடுத்து இரண்டையும் பசும்பாலில் கரைத்து இறைவனை வணங்கிக் கொண்டு அருந்தினால் வயிறு பசி எடுக்காது என்று சொல்லும் அகத்தியர் எத்தனை நாள் சென்றாலும் பசி எடுக்காது என்கிறார்.


"பாரப்பா பசிஎளுப்ப வேண்டுமென்றால்
பண்பாக சொல்லுகிறேன் மைந்தா கேளு
வீரப்ப எலும்பியதோர் மஞ்சளிஞ்சி
விரும்பியே தின்றிடவே வேகம் கொண்டு
காரப்ப மூல அக்கினியே நீறும்
கடும்பசிதா னெடுக்குமாடா கருவாய்ப்பாரு
தெறப்பா மனந்தேறி கருவாய்ப் பார்த்தால்
சித்து வித்தை அநேகமுண்டு தெளிந்து காணே"

- அகத்தியர் -

மீண்டும் பசி எடுக்க வேண்டும் என்றால் ஒரு மஞ்சள் இஞ்சியை தின்ன வேண்டும் என்று சொல்வதோடு மஞ்சள் இஞ்சி தின்றால் கடும் பசி உண்டாகும் அத்துடன் தூய, நல்ல மனதுடன் தேடுபவர்களுக்கு இதுபோல பல சித்துமுறை தெரியவரும் என்கிறார்.

வேறொரு சுவாரசியமான தகவலுடன் அடுத்த பதிவில் சந்திப்போம்...

Post a Comment

9 comments:

கொல்லான் said...

// மஞ்சள் இஞ்சி தின்றால் கடும் பசி உண்டாகும்//

அதனால் தான் நமது மக்கள் இவை இரண்டையும் அன்றாட சமையலில் சேர்த்துக் கொண்டுள்ளனர்.

நரசிம்மரின் நாலாயிரம் said...

Interesting! thanks

ஹேமா said...

பசிக்காம இருக்கிறதுக்கு என்னன்னு எங்கட ஊர்ல அறிமுகப்படுத்திவிடுங்கோ தோழி.
இங்க எங்களுக்கு பசி வருதில்லையே என்றுதான் கவலை !

பால்கி said...

ரொம்ப நல்ல வலை பூ . இடுகைகள் அதிகம் வருவதில்லை என்று கவலை பட வேண்டாம் . நல்ல விசயங்களுக்கு நாள் கடந்தாலும் மதிப்பு உண்டு . தொடர்ந்து பதிவிடுங்கள் .

thamizhannatpu said...

அன்புள்ள தோழிக்கு
குழந்தை பேரின்மையை தீர்க்கும் உணவு முறைகள் பற்றிய ஏதேனும் சித்தர்களின் குறிப்புக்கள் இருந்தால் தங்கள் வலைத்தளத்தில் எழுதவும் .
நன்றி

சின்னபாரதி said...

எனக்கு பிடித்த வலைப்பூவில் ஒன்று
தொடருங்கள் நன்றி...

raja said...

its superb blog... plz give remedy for piles,hearing and eye problem due to IT culture. almost most of the IT ppl crosses this list.ur service is excellent.

Paramesdriver said...

நண்பரே,தங்களது வலைப்பதிவு பயனுள்ளது.
வரவேற்கிறோம்....HONEY BEES SOCIAL ORGANIZATION, SATHY & THALAVADI,
ERODE-DISTRICT.

ohm said...

nalla karuththukkal ungalin seyal eraivanin
viruppam
nanadri with thanks
natesh
anuprahadheesh@gmail.com

Post a Comment