நவமணிகள்... தன்மைகளும், தரமும்..!

Author: தோழி / Labels: ,


நவமணிகள் ஒவ்வொன்றும் பிரத்யேகமான வண்ணக் கதிர்களை வெளியிடும் தன்மை உடையவை. இந்த கதிர்கள் மனிதனின் உடலில் படும் போது உடல் நலம் மற்றும் மன நலத்தினை சீர்படுத்தி மேம்படுத்துவதாகவும் கருத்துக்கள் உள்ளது.

மாணிக்கம் சிவந்த நிறக் கதிர்களையும், முத்து ஆரஞ்சு நிற கதிர்களையும்,புஷ்பராகம் நீல நிறக் கதிர்களையும், கோமேதகம் ஊதா நிறக் கதிர்களையும், மரகதம் பச்சை நிறக் கதிர்களையும், வைரம் வெளிர் நீல நிறக் கதிர்களையும்,வைடூரியம் வெளிர் சிவப்பு நிறக் கதிர்களையும், நீலம் அடர் ஊதா நிறக் கதிர்களையும், பவளம் மஞ்சள் நிற கதிர்களையும் வெளியிடுமாம்.

இத்தனை தன்மைகளையும், சிறப்புகளையும் உடைய பழுதில்லாத (வெடிப்புக்கள், புள்ளிகள்) கற்களால் மட்டுமே குறிப்பிட்ட ஜாதகருக்கான நற்பலனைத் தரமுடியும். சுத்தமான கற்களை கண்டறிவது என்பது ஆகச் சிரமமான பணி. தேர்ந்த வல்லுனர்களே தவறிழைக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன.

ஆனால் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே அகத்தியர் தனது “அகத்தியர் வாகடம்” என்ற நூலில் நவமணிகளின் தரம் அறிவது குறித்து விவரித்திருக்கிறார்.

முத்து :- நுரையற்ற பாலில் போட்டால் மிதக்கும்.

மரகதம் :- கையில் வைத்துக்கொண்டு குதிரை அருகே சென்றால் குதிரை தும்மும்.

பச்சைக்கல் :- குத்து விளக்கு ஒளியின் முன்பு சிவப்பு நிறமாக தோன்றும்.

வைரம் :- சுத்தமான வைரத்தை ஊசியால் குத்தினால் உடையாது.

பவளம் :- உண்மையான பவள மையத்தில் ஊசியால் குத்தினால் மட்டுமே இறங்கும்.

கோமேதகம் :- பசுவின் நெய்யில் போட்டால் குங்குமப்பூ வாசனை வரும்.

புஷ்ப ராகம் _ சந்தனம் அரைக்கும் கல்லில் வைத்தால் தாமரை பூ வாசனை வரும்.

வைடூரியம் :- பச்சிலை சாற்றில் போட்டால் வெள்ளை நிறமாக மாறும்.

நீலக்கல் :- பச்சிலை சாற்றில் போட்டால் ஒருவித ஒலி வரும்.

அகத்தியரின் பாடல்களில் இருந்து தொகுக்கப் பட்டுள்ள இந்த விவரங்கள் மிக அரிதானவை, இனி வரும் நாட்களில் நீங்களும் இதை பயன்படுத்தி கற்களின் தரம் அறியலாம்.

இதன் அடுத்த கட்டமாய் நவமணிகளை எல்லா நாட்களிலும் வாங்கிடக் கூடாது. அதற்கென பிரத்யேகமான தினங்களை சித்தர்கள் அருளியுள்ளனர். அதன் விவரங்கள் அடுத்த பதிவில்...

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

11 comments:

நரசிம்மரின் நாலாயிரம் said...

thanks!

kalavum kattrum ara said...

very gud. expecting more from you ... thank u very much in advance

lalli said...

very useful collection tholi

chandru2110 said...

உண்மையிலே அறிய தகவல்கள்தான். இன்னும் கற்களின் வகைகள், நாக தோஷம் உள்ள கற்கள் போன்றவை பற்றி தெரிந்து கொள்ள விரும்புகிறேன், பதியுங்கள்.

யோகம் said...

நவரத்தின கற்களை எந்த விரலில் அணிய வேண்டும் ? புஷ்பராகம் என்றால் ஆள்காட்டி விரலில் அணியவேண்டும் என்று கூறுகிறார்கள் அது சரியா அல்லது எந்த கல்லானாலும் மோதிர விரலில்தான் அணியவேண்டுமா? விளக்கம் தரவும்...

தோழி said...

@யோகம்

எந்த கல்லானாலும் சரி, மோதிர விரலில் அணிவதே சிறப்பு... நன்றி...

nadarasa sritharan said...

good message....

Ashok said...

Pachilai Saru - yendal yenna?

raja king said...

very use ful thanka agasthiyer

MGR said...

Very useful thanks, I wish to know that whether we should wear always the same stone or we have to change according to thissa puthi kindly provide information about it

Sneka Raj said...

maanikkam ?engey? and pachaikal maragadam what is the differnce pls send the whiole detaikls again,.

Post a Comment