நவரத்தினங்களையே சித்தர்கள் நவமணி என குறிப்பிடுகின்றனர். நவ என்பது புதுமை என்றும், ரத்னம் என்றால் ஒளி என்றும் பொருள்படும். வைரம், முத்து, மரகதம், மாணிக்கம்,நீலம், புஷ்பராகம், வைடூரியம், கோமேதகம், பவளம் ஆகியவையே நவமணிகள். இவை அனைத்தும் இயற்கையாய் பூமியில் விளையும் கற்கள்.
இந்த நவ மணிகளை சிவனின் ஒன்பது வகையான உருவங்கள் என்றும் குறிப்பிடுவர். அவையாவன, பிரம்மா, விஷ்ணு, உருத்திரன், மகேஸ்வரன், சதாசிவம், சிவம், சக்தி, நாதம், விந்து என்பனவாகும்.
பழந்தமிழர்கள் இந்த நவரத்னங்களை தலை மணிகள், இடை மணிகள், கடை மணிகள் என்று மூன்றாக வகைப் படுத்தியிருந்தனர். அவை,
தலை மணிகள் :- வைரம், முத்து, மரகதம், மாணிக்கம்.
இடை மணிகள் :- நீலம், புஷ்பராகம், வைடூரியம்.
கடை மணிகள் :- கோமேதகம், பவளம்.
என்பனவாகும்.
சித்தர்கள் நவ ரத்னங்களை மகாரத்தினங்கள், உபரத்தினங்கள் என்று இருவகைப் படுத்தியுள்ளனர். வைரம், முத்து, மரகதம், மாணிக்கம், நீலம் என்பவற்றை மகாரத்தினங்கள் எனவும், புஷ்பராகம், வைடூரியம், கோமேதகம், பவளம் என்பவற்றை உபரத்தினங்கள் என்றும் வகைப்படுத்தியுள்ளனர்.
இவ்வாறு வகைப்படுத்திய சித்தர்கள் இவற்றை தங்கள் அன்றாட வாழ்வில் பல விதங்களிலும் பயன்படுத்தி உள்ளனர். நமக்கு கிடைத்திருக்கும் விவரங்களின் படி இந்த நவமணிகள் இரு வகையில் சித்தர்களால் பயன் படுத்தப் பட்டிருக்கின்றன.
ஒன்று சோதிடவியலில் நவக்கிரகங்களின் கோசார பாதிப்புகளினால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து குறிப்பிட்ட ஜாதகர் தன்னை பாதுகாத்துக் கொள்ளும் வகையில் குறிப்பிட்ட நவமணிகளை ஆபரணங்களில் பதித்து அணிந்து கொள்ளும் பரிந்துரைகள்.மற்றயது மருத்துவ இயலில் நவ ரத்னங்களை பஸ்பங்களாக மாற்றி மருந்துகள் தயாரித்தல்.
முதலில் சோதிட ரீதியாக இந்த நவமணிகள் சித்தர்களால் எவ்வாறு பரிந்துரைக்கப் பட்டிருக்கின்றன என்பதை இனி வரும் பதிவுகளில் பார்ப்போம்.
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...
Post a Comment



2 comments:
Vow! lot of information
நவமணிகள் பற்றிய தங்கள் தகவலுக்கு நன்றி. என் நண்பனிடம் ஒரு கல் உள்ளது. பார்பதர்க்கு வைரம் போல் உள்ளது.. அது வைரமா என்று எப்படி கண்டுபிடிக்கமுடியும்?
Post a Comment