கடந்த எட்டு தினங்களாய், சமகால எந்திரமயமான வாழ்வில் நம்மை பாதிக்கும் நோய்கள் குறித்த விளக்கத்துடன் தீர்வுகள் சிலவற்றை பகிர்ந்து கொள்ள முடிந்ததில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி...இன்னமும் பல பாதிப்புகள் எனது பட்டியலில் இருந்தாலும், தொடரின் நீளம் மற்றும் பதிவின் சுவாரஸ்யத்தினை கருத்தில் கொண்டு பிரிதொரு சந்தர்ப்பத்தில் தொடர்கிறேன்.
கடந்த சில நாட்களில் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஏராளமான மின்னஞ்சல்கள் நிறைய கேள்விகளுடன் வந்திருக்கின்றன. அத்தனை அன்பு உள்ளங்களுக்கும் நன்றி. தனித்தனியே மின்னஞ்சல் அனுப்புவதைக் காட்டிலும் எனது எண்ணங்களை பொதுவில் இங்கே பகிர்ந்து கொள்வது அனைவருக்கும் பயன் தருமென கருதுகிறேன்.
நண்பர்களே! இந்த வலைமனையின் நோக்கமே பழந்தமிழ் சித்தர்கள் அருளிச் சென்ற அரிய பல தகவல்களை என்னுடைய சம காலத்தவர்களுக்கு பகிர்ந்து கொள்வதுடன், எதிர் வரும் தலைமுறைக்குப் பயன் படும் வகையில் மின்னூடகத்தில் பதிந்து வைப்பதும்தான்.....
இங்கே பகிரப்படும் தகவல்கள் அனைத்துமே இயன்றவரையில் சரிபார்க்கப் பட்டு எனக்கு திருப்தியான பின்னரே பதிவிடுகிறேன். இவற்றை மீறி ஏதேனும் பிழையிருப்பின் அவற்றைப் பொறுத்து, சுட்டிக் காட்டினால் திருத்திக் கொள்ள தயாராகவே இருக்கிறேன்.
இன்றைக்கு சித்தர்கள் அருளிய வைத்திய முறைகளை அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் தீவிரமான ஆய்வுகள் மேற்கொண்டிருக்கின்றனர். ஆய்வுகளின் தெளிவுகளை தொகுத்து சித்த மருத்துவ கல்லூரியின் வாயிலாக பயிலும் மாணாக்கர்களுக்கு போதிக்கப் படுகின்றன. இவர்களைத் தவிர பரம்பரையாக குருகுல வாசம் மூலமாக வைத்திய முறையில் தேர்ந்து தெளிந்த சித்த வைத்தியர்களும், ஆராய்ச்சியாளர்களும் நம்மிடையே இருக்கின்றனர்.
சித்த மருத்துவத்தில், மருந்துகள் உட்கொள்ளும் போது உணவுகட்டுப்பாடு என்பதை கடுமையாக வலியுறுத்துகின்றனர். இது ஒவ்வொரு மனிதரின் உடல் தன்மையைப் பொறுத்து மாறுபடும். எல்லோருக்கும் ஒரே மாதிரியான உணவுக் கட்டுப்பாடு பொருந்தாது.எனவே இங்கே பதிவில் பகிர்ந்து கொள்ளப் படும் வைத்திய விவரங்களை ஒரு தகவலாக மட்டுமே கருத்தில் கொண்டு, சிரமம் பாராமல் தேர்ந்த சித்த மருத்துவர்களின் ஆலோசனைகளின் பேரில் மட்டுமே பயன் படுத்தி பலனடைந்திடுமாறு வேண்டுகிறேன்.
இந்த வலைமனையின் பதிவுகள் பலவற்றை என்னுடைய முன் அனுமதி இன்றி, ஒரு சில பதிவர்கள், தங்களுடையதைப் போல தங்கள் பதிவில் தொடர்ந்து பதிவிடுகின்றனர். ஆரம்பத்தில் நான் இதனை பெரிதாக எடுத்துக் கொள்ளாவிடினும் தற்போது இத்தகைய செயல்கள் எனது ஆர்வத்தை குலைப்பதாகவே இருக்கிறது. என்னுடைய ஆர்வமும், அக்கறையும் முயற்சியும், உழைப்பும் தவறாக பயன் படுவதில் எனக்கு உடன்பாடில்லை என்பதை மிகத் தெளிவாக கூறிட விரும்புகிறேன். எனவே நண்பர்கள் இத்தகைய செயல்களை இனி தொடர வேண்டாமென பணிவுடன் வேண்டுகிறேன்.
தொடரும் ஆதரவிற்கும், ஒத்துழைப்புக்கும் நன்றி !
அடுத்த பதிவில் வேறொரு தகவலுடன் சந்திக்கிறேன்....
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...
Post a Comment



6 comments:
பதிவு திருட்டு கேவலமானது. நானே நாலஞ்சு பதிவர்கள் உங்களுடைய பதிவுகளை காப்பி பேஸ்ட் செய்திருப்பதை பார்த்தேன்.அவங்க பேரைக் கூட இங்க தரமுடியும்.
இவங்கள எதிர்கொள்ள இந்த பதிவுல இருக்கற வழிமுறைகள் உங்களுக்கு உதவும்.
http://vandhemadharam.blogspot.com/2010/03/blog-post_241.html
இதுக்காக நீங்க மனம் தளரவேண்டாம். தொடர்ந்து எழுதுங்க..வாழ்த்துக்கள்.
உபயோகமான பதிவு
தோழியே ..வருத்தம் வேண்டாம் ..எனது வேதனைகள் http://ayurvedamaruthuvam.blogspot.com/search/label/வேதனைகள்%20..என்ற தலைப்பில் புலம்பினேன் பயன் இல்லை ..தொடருங்கள் ..
உங்களின் உழைப்பு திருடபடுவதை கண்டு உங்கள் மனம் படும் துயரம் புரிகிறது. திருடுபவர்களிடம் கடுமையாக நடந்து கொள்ளுங்கள் . அப்போதுதான் திருந்துவார்கள்.
நல்லது. தோழி நீரிழிவு நோயைபற்றி ஏதாவது தகவல் உண்டா
நல்லது. தோழி நீரிழிவு நோயைபற்றி ஏதாவது தகவல் உண்டா
Post a Comment