மனித உடலின் கழிவுகளை பிரித்து வெளியேற்றும் முக்கியமான உறுப்புதான் சிறுநீரகம். இடுப்புக்கு சற்றே மேலாக வயிற்றுக்கு பின் புறத்தில்,முதுகு தண்டின் அருகாமையில் அமைந்திருக்கும். இதன் முக்கிய வேலை குருதியில் இருக்கும் தேவையற்ற அல்லது மிகையாக இருக்கும் உப்புகளை பிரித்து நீராக வெளியேற்றுவதே ஆகும். இவை தவிர உடலில் இருக்கும் அமிலங்களின் அளவினை கண்காணித்து சமநிலையை பேணும் பணியினையும் சிறுநீரகம் செய்கிறது.
சிறுநீரக பாதிப்புகள் பலவாக இருந்தாலும், இந்த பதிவில் சிறுநீரக கற்களை பற்றி மட்டுமே தகவல்களை பகிர விரும்புகிறேன். ஒவ்வொரு மனிதரும் ஒரு நாளைக்கு குறைந்தது ஒரு லிட்டர் அளவுக்காவது தண்ணீரை உள்ளெடுத்துக் கொள்ள வேண்டும். இதற்கு குறைவாக நீரை உள்ளெடுக்கும் போது சிறுநீரகம் பிரிக்கும் கழிவு உப்பின் செறிவானது சிறுநீரில் அதிகரிக்கும். இந்த உப்புகள் சிறுநீரக பாதையில் படிமஙக்ளாக படிந்து கற்களாய் உருவாகும்.
நாளடைவில் இவ்வாறு உருவாகும் கற்கள் சிறு நீரகபாதையில் தடையினை உண்டாக்கி அடைப்பை ஏற்படுத்தும். அப்போது தாங்க இயலாத அளவில் வலி உண்டாகும். ஆங்கில மருத்துவத்தில் பல புதிய முறைகளும் தீர்வுகளும் இருந்தாலும், சிகிச்சைகள் செலவு கூடியதும் பக்க விளைவுகளை உண்டாக்குவதாகவும் கருத்துக்கள் உள்ளன.
இந்த கற்களை கரைத்து வெளியேற்ற நம் சித்தர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரெ எளிமையான இயற்கை மருத்துவ முறைகள் பலவற்றை சொல்லியுள்ளனர். அதில் கடந்த ஒரு பதிவில் ஒரு மருத்துவ முறை பற்றி குறிப்பிட்டிருந்தேன்.
சிறுநீரக கற்களை முற்றாக கரைத்து சிறுநீரில் வெளியேற வைக்க தினமும் காலையில் வாழை தண்டு சாறு எடுத்து ஒரு குவளை வீதம் பதினைந்து நாட்கள் அருந்தினால் எத்தகைய சிறுநீரக கல்லும் முற்றாக கரைந்து வெளியேறும் என்று சொல்லும் தேரையர், வாழைத் தண்டு சாற்றினை பதினைந்து நாள் இடைவெளியில் ஒரு தடவை வீதம் அருந்தி வருபவர்களுக்கு சிறுநீரக நோய்கள் எப்போதும் அண்டாது என்றும் சொல்கிறார்.
அடுத்த பதிவில் மற்றொரு தகவலுடன் சந்திக்கிறேன்.
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...
Post a Comment



12 comments:
பகிர்வுக்கு நன்றி தோழி
Very useful information! for all!
thanks
இது போன்ற எளிய வைத்திய முறைகளை
இன்னும் நெறய பதிவிடுங்கள்...!
இது போன்ற வைத்தியங்கள் தான் பலன் தருகின்றன..ஆங்கில வைத்தியதிற்காக ஒரு வேளை மாத்திரைக்கு 20 ரூபாய் பிடுங்கி விடுவார்கள்
மனச்சிக்கல் முதல் மலச்சிக்கல் வரை அனைத்துக்கும் ஒரு தீர்வு கிடைக்கும் இடமாக இந்த வலைப் பக்கம் உள்ளது.
இந்த அவசர உலகில் இது போன்ற மருத்துவ வழிகளை பின்பற்றுவதில் சில நடைமுறை சிக்கல்கள் இருக்கத் தான் செய்கின்றன.
காலப்போக்கில் இந்த வலைப்பக்கம் ஒரு நவீன கால ஓலைச்சுவடி ஆனாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை!!
வாழ்த்துக்கள்!!
மிகவும் பயனுள்ள தகவல்கள். எனக்கும் சிறுனீரகக்கல் பிரச்சினை இருந்தது, வாழத்தண்டு சாரிதான் அதிக அளவில் பயன்படுத்தினேன். ஆனால் கல் உருவாதன் பின், இது உடனடி நிவாரணியாக என் அனுபவத்தில் இல்லை. நீங்கள் சொல்வதுபோல் அடிக்கடி பருகுவதால் தவிர்க்கலாம் என்பதில் உடன்பாடு.
உங்கள் பதிவுகள் எல்லாம், நுனுக்கமான , நம்பகத்தன்மை மிகுந்த தகவல்களை கொண்டுள்ளது...
தொடரவும். தகவல்களுக்கு நன்றி.
உங்களின் இந்த பதிவை படித்ததால், நானும் எனது சிறுநீரகக்கல் வலி அனுபவத்தையும், அதை எதிர்கொண்ட விதத்தையும் ஒரு பதிவாக எழுதலாம் என்று நினக்கிறேன்.
நன்றி தோழி ..
உங்களது கருத்தை நான் வரவேற்கிறேன் ..
தேரையர் வாக்கு தவறாது ...சேவை பாராட்டுக்குரியது ..தாங்கள் மருத்துவ சேவை செய்து கொண்டு இருக்குறீர்களா ? அல்லது ,மருத்துவ படிப்பு படித்து கொண்டு இருக்குறீர்களா ?..
வாழ்த்துக்கள்
@curesure4u
நான் மருத்துவம் பயிலும் மாணவி.. நன்றி.
maruthuvam payelum maanavi enbathae namba mudiyavillai (ungalin sithar eedupadu)
நன்றி
மிகவும் அருமையான,உபயோகமான பதிவு இது.
நன்றி தோழியரே...
வாழ்க வளமுடன்.
@ஆர்.கே.சதீஷ்குமார்
Post a Comment