மனிதனின் உடலெங்கும் பாயும் குருதியினை நெறிப் படுத்தும் ஒரு பாகமே இதயம்...இதயத்தின் வேலைகளை இரண்டாக பிரிக்கலாம்.இதயத்தின் தசைகள் சுருங்கி விரிவதன் மூலம் நாளங்களில் ஓடும் குருதியானது உள்ளிழுக்கப் பட்டு வெளியேற்றப் படுகிறது. இதய தசைகள் மெல்லிய குறுதி நாளங்களினால் பின்னப் பட்டிருக்கும்..
இதயத்தின் இடது பகுதி உடலெங்கும் ஓடி வரும் குருதியினை சேகரித்து அதனை நுரையீரலுக்கு அனுப்புகிறது.அசுத்தமான நிலையில் வரும் இந்த குருதியில் இருக்கும் கரியமில வாயுவினை நீக்கி, பிராண வாயுவினை குருதியில் கலந்து சுத்திகரிக்கப் பட்ட குருதியினை வலுது இதயத்திற்கு அனுப்புகிறது.வலது இதயம் இந்த குருதியினை மீண்டும் உடலெங்கும் செலுத்துகிறது.
இதயத்தில் பின்னியிருக்கும் மெல்லிய குருதி நாளங்களில் கொழுப்பு திசுக்கள் படர்வதால் ரத்த ஓட்டம் தடைபடும்.இதுவே மாரடைப்பாகிறது. இது தவிர இதயம் சுருங்கி விரிவதில் ஏற்படும் குறைபாடுகளும் உண்டு. இவையே இதய நோய்களாக கருதப் படுகிறது.
பரம்பரை மரபு தன்மைகள், உயர் குருதி அழுத்தம்,அதிக மன உளைச்சல், பருமனான உடல்வாகு, புகை பிடித்தல், மது அருந்துதல் போன்றவையே இதயத்திற்கு பாதிப்பினை உண்டாக்கும் முக்கிய காரணிகள்.
உடற்பயிற்சி, முறையான உணவு பழக்கம்,சுய ஒழுக்கம், அழுத்தங்கள் இல்லாத வாழ்க்கை முறை என இவற்றை சீராக பின் பற்றினாலே இதயம் இளமையாக இருக்கும்.எண்ணையில்லாத உணவுகள் இதயத்தின் நண்பன்....இனியாவது எண்ணையில் பொறித்த உணவுகளை தவிர்த்து விடுங்கள். சித்தர்களின் “உணவே மருந்து, மருந்தே உணவு” என்கிற கோட்பாட்டினை இங்கே நினைவு படுத்த விரும்புகிறேன். இதைப் பற்றி பிரிதொரு சந்தர்ப்பத்தில் விரிவாக எழுதிடுகிறேன்.
இதய நோய்களுக்கு ஆங்கில மருத்துவத்தில் நல்ல மருத்துவமுறைகள் இருந்தாலும், அவற்றின் செலவுகள் சாமானியருக்கு எட்டாத உயரத்தில் இருப்பதை யாரும் மறுக்க இயலாது.
இதயம் வலுவாய் வைத்திருக்க பல வைத்திய முறைகளையும், யோக முறைகளையும் அருளியிருக்கின்றனர். பிராணயாமம் போன்ற மூச்சு பயிற்சிகள், குண்டலினியை உயர்த்துதல் போன்ற யோக முறைகள் இதயத்தினை வலுவாக்கும்.
மருத்துவ முறைகளாய், தேரையை கூறிய சிலவற்றை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.
"மருந்தும் பரங்கிப் பட்டை ஆறுபலம்
குருத்தாள் வேருக் கூருங் கழற்சிக்காயும்
பொறுத்த நன்னாரி பூடும் நுணா வேரும்
தீர்ந்து முழக்கு சேர இடித்திடவே
இடித்து சூரணம் எழிலாய் வடி செய்து
கடித்து சீனியில் கலந்து அருந்திடு
வடித்து தேரையன் வாக்கு போய்யதீது
நடித்த மார் நோய் நடுங்கியே ஓடுமே"
- தேரையர் -
பரங்கிப் பட்டை ஆறு பலம், குருந்தன் வேர், கழற்சிக்காய், நன்னாரி, நுணா வேர், மிளகு இவற்றை நன்றாக இடித்து வடி கட்டி சீனியில் கலந்து உட்கொள்ள மார்பு நோய் குணமாகும் இது தேரையன் வாக்கு பொய்யாகாது என்கிறார் தேரையர்.
சுக்கு, பூண்டு எடுத்து சுட்டு பனை வெல்லம் சேர்த்து அரைத்து தொடர்ந்து உண்ண நெஞ்செரிவு உடனே தீரும் என்கிறார்.
இவை தவிர அதிக அளவில் சீத்தாபழம் உண்டு வந்தால் இருதயம் வலிமை மிக்கதாகும் என்றும் சொல்கிறார்.
அடுத்த பதிவில் மற்றொரு பாதிப்புக்கான தீர்வுகளுடன் சந்திக்கிறேன்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...
Post a Comment

7 comments:
good post...! thanks...!
வணக்கம் தோழி...உங்கள் பதிவுகளைத் தொடர்ந்தும் படிக்கிறேன்.இப்போதைக்கு எனக்குத் தேவைப்படாவிட்டாலும் அருமையான பிரயோசனமான பதிவுகள்.சென்ற பதிவுகளின் சாரங்களை ஊரிலிருக்கும் அப்பாவுடன் பகிர்ந்திருக்கிறேன்.நன்றி தோழி.
is there any medicine to avoid pregnancy for both male and female
ஒவ்வொரு பதிவும் வித்யாசமாயும் உபயோகமாகவும் இருக்கின்றது!!
தொடர்ந்து பல பதிவுகளை உங்களிடமிருந்து எதிர்பார்கின்றோம்!!
வாழ்த்துக்கள்!!
உங்கள் பதிவுகள் மிகவும் பயனுள்ளதை இருக்கிறது . சர்க்கரை நோய் பற்றியும் பதிவிடுங்கள்
குமரன்
very very useful website
very very useful site yaaaaaaaaaaaa..........
Post a Comment