உயர் குருதி அழுத்தம் குறைப்போமா !

Author: தோழி / Labels:

இரத்த அழுத்தம்... இதை குருதி அழுத்தம் என்பதே அழகுத் தமிழ் !

குறுதியானத் நாளங்களில் பயணிக்கும் போது அதன் சுவர்களில் ஏற்படுத்தும் அழுத்தமே குறுதி அழுத்தம் எனப்படுகிறது. இந்த அழுத்தமானது இதய தசைகள் சுருங்கி விரியும் போது உருவாகும் அழுத்தங்களை பொறுத்தது. இதய தசைகள் சுருங்கும் போது உருவாகும் அழுத்தமானது இதய தசைகள் விரியும் போது ஏற்படும் அழுத்தத்தை விட அதிகமாய் இருக்கும்.

நல்ல உடல் நிலையில் இருக்கும் ஒரு மனிதனின் குருதி அழுத்தமானது இதய தசைகள் சுருங்கும் போது 120 மில்லிமீட்டர் பாதரச அழுத்தமும், இதய தசைகள் விரிவடையும் போது 80 மில்லிமீட்டர் பாதரச அழுத்தமும் இருக்க வேண்டும். நமது உடல் நிலையில் ஏற்படும் மாற்றங்கள் குருதி அழுத்த அளவில் உடனடி மாறுதல்களை உண்டாக்கும்.

நாற்பது வயதினை கடந்தவர்களுக்கும், பருமனான உடல் அமைப்பு உடையவர்களுக்கும், கடமைகள் அதிகம் உள்ள பணியில் இருப்பவர்களுக்கும், மன உளைச்சலால் பாதிக்கப் பட்டவர்களுக்கும் குருதி அழுத்தம் அதிகரிக்கும் என மருத்துவம் சொல்கிறது. இதனை உடனடியாக கவனிக்காது விட்டால் உயிருக்கே உலை வைத்துவிடும் வாய்ப்புகள் இருக்கிறது.

சித்தர்கள் இந்த குருதி அழுத்தம் சீராக மருந்துகள் பவற்றை அருளியிருக்கின்றனர். இவை அனைத்தும் எளிமையானதும், செலவு குறைந்ததும் பக்க விளைவுகள் அற்றது என்பதுதான் சிறப்பு.

சர்பகந்த செடியின் வேரை சூரணமாக செய்து உண்டு வந்தால் குருதி அழுத்தம் குணமாகும் என்று தேரையர் கூறுகிறார்.

வெண்தாமரைப் பூவை பொடிப் பொடியாக நறுக்கி சட்டியில் போட்டு அரை லீட்டர் தண்ணீர் விட்டு நாலில் ஒன்றாக காச்சி, தேன் கலந்து காலையும் மாலையும் குடித்துவர இரத்தக் கொதிப்பு குணமாகும் என்கிறார் புலிப்பாணி சித்தர். மேலும் அவர் முளைக் கீரையை சாப்பிட்டு வந்தாலும் குருதி அழுத்தம் குணமாகும் என்கிறார்.

அடுத்த பதிவில் மற்றொரு தீர்வுடன் சந்திக்கிறேன்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...



Post a Comment

4 comments:

Murugeswari Rajavel said...

குறிப்புகளுக்கு நன்றி தோழி!

Murali V said...

நல்ல குறிப்பு தோழி.

வாழ்க்கையில் எதிர் காலத்தை பற்றி பயப்படாமலும் கடந்த காலத்தைப்பற்றி வருதப்படாமலும் நிகழ காலத்திலேயே வாழ்ந்தால் ரத்த அழுத்தம் மருந்து இன்றியே குணமாகும். இதை என்னுடைய வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தி என்னுடைய உயர் ரத்த அழுத்தத்தை குறைத்துள்ளேன்.

rk guru said...

நல்ல பதிவு ........வாழ்த்துகள் , நம்ம பதிவு பக்கமும் கொஞ்சம் எட்டி பார்க்கலாமே தோழி..

Rama said...

very glad to read

Post a Comment