இன்றைய அவசரயுகத்தில் அதிகாரத்தில் இருப்பவரில் இருந்து அடுத்த வேளை உணவுக்கு வழியற்றவர் வரை பாகுபாடில்லாமல் எல்லோரையும் பாதித்திருப்பது மன அழுத்தம் அல்லது மன உளைச்சல் அல்லது மன இறுக்கம்.
மனிதனின் உடல் நலத்தில் ஏற்படும் பெரும்பான்மையான பாதிப்புகளுக்கு அரம்ப புள்ளி இந்த மன உளைச்சல்தான். தூக்கமின்மை, தலைவலி, உடல்சோர்வு, இரத்த கொதிப்பு, மாரடைப்பு, நீரிழிவு, நரம்புத்தளர்ச்சி, சரும நோய்கள், அஜீரணம், மலசிக்கல்....பெண்களாய் இருந்தால் மாதவிலக்கு பிரச்சினைகள், என பட்டியல் நீளும்....புறவியல் ரீதியாக பதற்றம், கவனமின்மை, பயம் போன்றவற்றை உண்டாக்கும்.
எதனால் இந்த மன உளைச்சல் வருகிறது?,
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாவதைப் போல, மனிதனின் இயல்பை மீறிய தேவைகள், ஆசைகள், எதிர்பார்ப்புகள், ஈடுபாடுகள், நிர்பந்தங்கள், வேலைகள் இவையே மன அழுத்தத்திற்கும், உளைச்சலுக்கும் காரணமாகின்றன.
இவற்றிற்கான தீர்வுகளை சித்தர்கள் பலவாறாக கூறியிருக்கின்றனர், தன்னை அறிதல், தன்மை அறிதல் என பல பாடல்களை இந்த வலைப்பதிவின் முந்தைய பதிவுகளில் பகிர்ந்திருக்கிறேன். மெய்யான வாழ்வியல் நெறிகளை முன்னிறுத்தும் அந்த பாடல்கள் இன்றைக்கும் அனைவருக்கும் பொருந்துவனவாக இருக்கின்றன.
மனதின் இறுக்கம் தளர்த்தி சமநிலையில் வைத்திடும் யோகம் பற்றிய தொடரையும் முந்தைய பதிவுகளில் நீங்கள் காணலாம்.
மன இறுக்கம் அகல அகத்தியர் அருளிய ஓர் எளிய முறையினை கூறி இந்த பதிவினை நிறைவு செய்கிறேன்.
"கேளப்பா மௌனநிலை கொண்டுமேதான்
கெவனமுடன் "ஓம் ஹ்ரீம்" என்று
தாளப்பா ஓது ஓது மனமது அடங்கும்
கவலைகள் நீங்கும் மிக்கான சத்துருக்கள்
துன்பமுடன் மனக்கிலேசம் தீர்ந்துமே
அவனியில் நீயுமொரு சாந்தனாச்சே"
- அகத்தியர் -
தனிமையான ஓர் இடத்தில் மௌனமாக இருந்து "ஓம் ஹ்ரீம்" என்று தொடர்ந்து ஜெபிக்க மனது அடங்கி மனக்கவலைகள் தீரும். எதிரிகளால் உண்டான துன்பம் மறைந்து, மனக்குழப்பங்கள், மன அழுத்தங்கள் நீங்கி இந்த உலகில் நீயும் ஒரு சாந்த குணமுள்ளவன் ஆகலாம் என்கிறார் அகத்தியர்.
அடுத்த பதிவில் மற்றொரு பாதிப்புக்கான தீர்வுகளுடன் சந்திக்கிறேன்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...
Post a Comment
11 comments:
Wonderful post. Keep sharing.
nice!
அருமை,
இயல்பை மீறிய ஆசைகள், எதிர்பார்ப்புகள் தோன்றாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்.
உதாரணம்- என் சம்பளத்தில் சொந்த வீடு வாங்கவோ, வீட்டு கடன் அடிக்கவோ முடியாது, ஆனால் என் சகோதரர்கள், நண்பர்கள் அனைவரும் சொந்த வீடு வாங்குகின்றனர். அப்போது எனக்கும் என் இயல்பை மீறிய ஆசை தோன்றுகிறது.
இம்மாதிரியான ஆசைகள் தோன்றாமல் இருக்க என்ன வழி/ அறிவுரை
.
Good
Have you,at any time,tried the manthram "Om Hreem" of Agathiyar which you told in your article? There are multifarious reasons for 'Mana irukkam or Ulaichal'.
- Lingeswaran.
Hi,
I read All your post valuable collections.
do you know any manthram to get "Yoga sithi".there is lot of methods to control our mind all gurus (Vivekanadar,Osho,sachidananda yogeshwara,ramana maharshi etc ) says different ways based on their experience.kindly tel me the siddhas way.
Thanks
Satheesh.
திக்கு வாய் போக ஏதேனும் மருந்து இருந்தால் கூறவும் .
Kindly tell me is there any way to speak clearly.
Nalla pathippukalai innum ethir parkkinren
Nalla pathippukalai innum ethir parkkinren
i have always problem with my wife family.i am not peaceful.what can i do
Post a Comment